பொய் செய்திகளை போல, போலியான இணையதளங்களிடமும் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். முக்கியமாக, போலி தளங்களை அவை பொய்யானவை என அடையாளம் காண வேண்டும். ஆனால், ஒரு விதிவிலக்காக கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட இந்த பொய்யான இணையதளத்தை பாராட்டலாம். ஏனெனில், இந்த தளம் பெருந்தொற்றின் நிழலில் சிக்கித்தவித்த பெண்களுக்கு அபயம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டது தான்.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட சுகாரதார பாதிப்பு, பொருளாதார பாதிப்பு எல்லாம் வெளிப்படையானவை. ஆனால், இந்த பெருந்தொற்று கண்ணுக்குத்தெரியாத பாதிப்புகளையும் உண்டாக்கியது. பெண்கள் மீதான் இல்ல வன்முறை அதிகரித்தது இவற்றில் ஒன்று.
எப்போதும் அதிகம் வேலை செய்யும் பெண்கள், கொரோனா பொது முடக்கத்திற்கு மத்தியில் இன்னமும் கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருந்ததோடு, பல வீடுகளில் பெண்கள் வன்முறை தாக்குதலுக்கும் உள்ளாக நேர்ந்தது. வழக்கமான இயல்பு நிலை கலைத்துப்போடப்பட்ட சூழலில், ஆற்றாமைக்கும், கோபத்திற்குமான வடிகாலாக வீட்டு பெண்களை பலர் துன்புறுத்தியாக புரிந்து கொள்ளலாம்.
எது எப்படியோ, இந்த இல்ல வன்முறை பற்றி புகார் கூற பெண்களுக்கு அதிக மார்கம் இருக்கவில்லை. இந்நிலையில் தான், போலந்து நாட்டில் இல்ல வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் அது குறித்து அச்சமில்லாமல் புகார் அளிக்க உதவும் இணையதளத்தை கிறிஸ்டினா பாஸ்கோ ( Krystyna Paszko ) எனும் மாணவி அமைத்திருந்தார்.
பாதிக்கப்படும் பெண்களைப்பொருத்தவரை, இல்ல வன்முறைக்கு எதிராக புகார் செய்வதே இன்னும் ஆபத்தானது. இதன் காரணமாக இன்னும் கூடுதலாக தாக்குதலுக்கு உள்ளாகலாம். அதற்காக, எத்தனை நாள் தான் அடி, உதை, சித்தரவதையை தாங்கி கொள்ள முடியும்.
இந்த கையறு நிலையை நன்கு உணர்ந்த, கிறிஸ்டினா, பெண்களுக்காக போலியான அழகுசாதன விற்பனை இணையதளம் ஒன்றை அமைத்தார். தோற்றத்தில் தான் இந்த தளம் அழகு சாதன விற்பனை தளமே தவிர, இதில் அழகு சாதன பொருட்களை வாங்க வழியில்லை. மாறாக, அழகு சாதனங்களை வாங்க முற்படும் போது, பெண்கள் இல்ல வன்முறை தொடர்பாக புகார் அளிக்கலாம்.
குறிப்பிட்ட அழகு சாதன பொருளை வாங்க விருப்பம் தெரிவித்து கிளிக் செய்தால், விற்பனை பிரதிநிதி பதில் அளிப்பதற்கு பதில் உளவியல் ஆலோசர் அல்லது சட்ட ஆலோசகர் பதில் அளித்து வழிகாட்டும் வகையில் இந்த தளம் அமைந்திருந்தது. கணவன்மார்களிடம் அடி உதை வாங்கும் பெண்கள், இணைய ஷாப்பிங் செய்வது போல, இந்த தளத்தில் நுழைந்து உதவி கோரலாம்.
போலந்தில் இல்ல வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த தளம் பேரூதவியாக அமைந்தது.
பிரான்ஸ் நாட்டில், மருந்து கடையில் குறிப்பிட்ட ரக மாஸ்கை கேட்பதன் மூலம், இல்ல வன்முறை பற்றி ரகசியமாக புகார் தெரிவிக்கலாம் எனும் செய்தியை படித்து தனது நாட்டு பெண்களுக்கு உதவதற்காக இந்த தளத்தை அமைத்ததாக கிறிஸ்டினா கூறியிருக்கிறார். முதலில் இந்த எண்ணத்தை அடிப்படையாக கொண்டு பேஸ்புக் பக்கம் அமைத்தவர், அதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இணையதளம் உருவாக்கினார்.
இந்த முயற்சிக்காக அவர் ஐரோப்பிய இணைய திட்டங்களுக்கான விருதும் பெற்றிருக்கிறார்.
கொரோனா காலத்தில் இணையதளங்கள் எப்படி எல்லாம் உதவிக்கு வந்தன என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.