பலரும் இணையதளங்களை தேடி வருவதற்கான காரணங்களாக பொதுவான சில நோக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. இது பற்றி தனியே பார்க்கலாம். இப்போதைக்கு, உங்கள் இணையதளத்தை மக்கள் நாடி வருவது? ஏன் எனும் தலைப்பில் சைமன் ரெனால்ட்ஸ் என்பவர் போர்ப்ஸ் இதழில் எழுதிய பழைய பத்தி பற்றி பார்க்கலாம்.
குலோபல் ரிவ்யூஸ் எனும் இணைய ஆய்வு நிறுவனம் ஒன்றின் தகவலை அடிப்படையாக வைத்து சைமன் இந்த பத்தியை சுருக்கமாக எழுதியுள்ளார்.
இணையதளங்களை நாடி வருபவர்களில் மூன்றில் ஒருவர் நண்பர்கள் பரிந்துரையால் குறிப்பிட்ட அந்த தளத்தை நாடி வருவதாக அமைந்துள்ள அந்த தகவலை குறிப்பிட்டு, நீங்கள் விளம்பரம் செய்ததாலோ அல்லது, கூகுள் மூலம் கண்டறிந்ததாலோ உங்களை தளத்தை நோக்கி இவர்கள் வருகைத்தரவில்லை, மாறாக அவர்கள் நம்பும் ஒருவர் பரிந்துரைத்ததால் வந்துள்ளனர் என்று சைமன் குறிப்பிடுகிறார்.
ஆக, நண்பர்கள் பரிந்துரைக்கும் வகையில் உங்கள் இணையதளம் இருப்பது அவசியம் என்கிறார். ஒரு நல்ல இணையதளத்தை உருவாக்குவது எப்படி எனும் கேள்விக்கான பதிலாக, இந்த தகவல்களை குறிப்பிட்டு, நண்பர்கள் பரிந்துரைக்க ஏற்ற வகையில் தளங்களை அமையுங்கள் என்கிறார்.
இதற்காக, அதாவது பரிந்துரைக்கப்படும் வகையில் கவனத்தை ஈர்க்க, வடிவமைப்பு அல்லது புகைப்படம் மூலம் உங்கள் தளம் தனித்து நிற்கச்செய்யலாம் என்பவர், உங்கள் தளம் பற்றி விவாதிக்க ஏதேனும் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
இணையதள வடிவமைப்பாளர்கள் மற்றும் வர்த்தக நோக்கில் இணையதளம் அமைப்பவர்களுக்கு பயனுள்ள குறிப்பு இது என்றாலும், கூகுள் மூலம் பெரும்பாலானோர் உங்கள் தளங்களை கண்டறிவதில்லை என்று சொல்லப்பட்டிருப்பதை நாம் மிகவும் ரசிக்கிறேன். ஆமோதிக்கவும் செய்கிறேன்.
ஏனெனில் பல நல்ல இணையதளங்களை உங்களால் கூகுளில் கண்டறிய முடியாது, தற்செயலாக கண்ணில்பட வேண்டும் என்பது என் நம்பிக்கை. இதில் நண்பர்கள் பரிந்துரையும் இணைவதை வரவேற்கிறேன்.
தொடர்ச்சியாக இணைய கண்டறிதலில் ஈடுபட்டு இணையதளங்களை அறிமுகம் செய்து வருவபன் என்ற முறையில், ஒரு நல்ல இணையதளம் ஏதேனும் ஒரு வகையில் நண்பர்களுக்கு பரிந்துரைக்கப்படும் வகையில் இருக்க வேண்டும் என நம்புகிறேன்.
அந்த வகையில் நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் இணையதளங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
–
புதிய இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ள இணையமலர் மின்மடலை பின் தொடருங்கள்!
இணைய மலர் மின் மடலில் இப்போதைய அறிமுகம்: சமூக வாசிப்புக்கான செயலி ’பிங்கே’