இணைய வரலாறு என்பது பொதுவாக அமெரிக்கா சார்ந்தே முன்வைக்கப்படுகிறது. இணையத்தின் துவக்கப்புள்ளியான அர்பாநெட்டில் துவங்கி, இணைய வளர்ச்சியின் பெரும்பாலான மைல்கற்கள் அமெரிக்காவிலேயே நிகழ்ந்த நிலையில் இணைய வரலாற்றில் அமெரிக்க ஆதிக்கத்தை புரிந்து கொள்ளலாம் என்றாலும், இணைய வளர்சியை முழுமையாக புரிந்து கொள்ள , பிற நாடுகளின் பங்களிப்பை தெரிந்து கொள்வது அவசியம்.
அதே போல, ஒவ்வொரு நாடும் இணையத்தில் எப்படி இனைந்தன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஒவ்வொரு நாட்டிற்கும் இணையம் எப்படி வந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில், இணையம் எனும் வையம் தழுவிய வலைப்பின்னல் ஒரே நாளில் எல்லா நாடுகளுக்கும் வந்துவிடவில்லை. வெவ்வேறு காலகட்டத்தில் ஒவ்வொரு நாடாக இணையத்தில் இணைந்தன.
இணைய வசதி பெறுவது அல்லது இணையத்தில் இணைவது என்பது வெறும் விரிவாக்கமாக மட்டும் அமையவில்லை. இதன் பின்னே இணையம் எனும் வலைப்பின்னலின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட தனிமனிதர்களின் தொலைநோக்கும் இருந்திருக்கிறது.
இணையம் என்றால் என்ன? அதனால் ஏற்படக்கூடிய பயன்கள் என்ன என்றெல்லாம் தெளிவாக தெரியாத காலகட்டத்தில், சில முன்னோடிகள் நம் நாட்டிற்கு இணையம் வர வேண்டும் என முனைப்பு காட்டியதன் விளைவாகவே பெரும்பாலான நாடுகளில் இணையம் அறிமுகமானது.
அந்த வகையில் பேராசிரியர் ராப் ஹார்லே (Rob Hurle ) இணைய முன்னோடிகளில் ஒருவராக இருக்கிறார் அதிலும் ஹார்லே கொஞ்சம் விஷேசமான முன்னோடி. ஏனெனில் ஆஸ்திரேலிய பேராசிரியரான ஹார்லே, கீழை நாடுகளில் ஒன்றான வியட்னாம் இணையத்தில் இணைவதற்கான முன்னோடிகளில் ஒருவராக இருக்கிறார்.
வியட்னாமுக்கு இணையம் அறிமுகம் ஆனதில் ஆஸ்திரேலிய பேராசியரான ஹர்லேவுக்கு முக்கிய பங்கு இருப்பது, இணைய வலைப்பின்னலின் ஒருங்கிணைந்த மனித கனவையும், கூட்டு முயற்சியின் அருமையை உணர்த்துவதாக அமைகிறது.
ஹர்லே 1987 ல் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக பேராசிரியரானார். தகவல் தொழில்நுட்ப வல்லுனரான ஹர்லே, தென் கிழக்காசிய மொழிகளிலும் நிபுணத்துவம் மிக்கவர்.
ஹார்லே, மெயின்பிரேம் வகை கம்ப்யூட்டர்களை வைத்து பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் டெஸ்க்டாப் எனும் தனிப்பட்ட கம்ப்யூட்டர்களையும் இமெயில் பரிவர்த்தனை போன்றவற்றுக்காக பயன்படுத்தினார்.
ஹார்லேயிடம் வெளிநாட்டு மாணவர்களும் பயின்றனர். வியட்னாமைச்சேர்ந்த மாணவர்களும் இருந்தனர். ஆனால், வியட்னாம் மாணவர்கள் கம்ப்யூட்டர்களை அணுகுவதில் பிரச்சனை இருந்தால் அவர்கள் தாய்நாடு திரும்பியதும், தாங்கள் கற்ற பாடங்களை நடைமுறையில் பயன்படுத்த முடியாமல் திண்டாடினர்.
ஒரு மோடம் இந்த பிரச்சனையை தீர்க்கும் என நம்பிய ஹார்லே, தனது சொந்த செலவில் மோடம் ஒன்றை வாங்கி வியட்னாம் மாணவர்களிடம் வழங்கினார். மோடம் சாதன் மூலம் மாணவர்கள், தங்கள் கம்ப்யூட்டர்களை மெயின்பிரேம் கம்ப்யூட்டருடன் இணைத்து பணிகளை மேற்கொள்ள முடியும் என அவர் நினைத்தார்.
பேராசிரியர் நல்ல எண்ணத்தில் மோடம் வாங்கி கொடுத்தாலும், வியட்னாம் மாணவர்கள் அதை பயன்படுத்துவதில் பெரும் சிக்கல் இருக்கும் என்பதை உணரவில்லை. அந்த காலகட்டத்தில் வியட்னானில் தொலைபேசி இணைப்பு என்பது செலவு மிக்கதாக இருந்தது. எனவே, தொலைபேசி இணைப்பு மூலம் மோடத்தை பயன்படுத்த வேண்டும் எனில், அதற்காக செலுத்த வேண்டிய நிமிடத்திற்கு ஐந்து டாலர் கட்டணம் மாணவர்களுக்கு சாத்தியமாகவில்லை.
இதனையடுத்து ஹார்லே பொறியாளர்களுடன் இணைந்து சர்வதேச தொலைபேசி மூலம் குறைந்த கட்டணத்தில் மோடம் இணைப்பிற்கு வழி செய்தார்.
அதன் பிறகு சில மாதங்கள் கழித்து வியட்னாம் சென்றவர் ஆஸ்திரேலியாவுடன் கம்ப்யூட்டர் இணைப்பை ஏற்படுத்தி தந்தார். அங்குள்ளவர்கள் இமெயிலில் தொடர்பு கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தினார். யூனிக்ஸ் அமைப்பு மூலம் இணைய வசதியை அணுகவும் வழி செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, டிரான் பா தாய் (ran Ba Thai) எனும் உள்ளூர் தொழில்நுட்ப ஆர்வலரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அடுத்து நடைபெற்ற சந்திப்புகளில் அவர் இணையம் எனும் வலைப்பின்னல் வசதி பற்றி எடுத்துரைத்தால் ஊக்கம் பெற்ற டிரான், வியட்னாமிற்கு இணைய வசதியை கொண்டு வர காரணமான வியட்நெட் நிறுவனத்தை துவக்கினார்.
வியட்னாம் மாணவர்கள் தாங்கள் அறிவை பெருக்கி கொள்ள கம்ப்யூட்டர்களை எளிதாக பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என பேராசிரியர் ஹார்லே விரும்பியதே, அந்நாட்டிற்கு இணையம் வருவதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. அதற்கேற்ப உள்நாட்டு முன்னோடிகளும் அவருடன் இணைந்து செயல்பட்டனர்.
இப்படி தனிமனிதர்களின் பங்களிப்பு மற்றும் கூட்டு முயற்சியால் தான் இணையம் பரந்து விரியத்துவங்கியது.
- செய்தி இணைப்பு: https://vietnaminsider.vn/the-internet-turns-20-in-vietnam-p2-australian-professors-contribution/