ஃபைண்ட்சவுண்ட்ஸ் தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும். அதிலும் தொழில்முறையாக ஒலிகளை நாடுபவர் என்றால், இந்த தேடியந்திரம் இன்னும் நெருக்கமானதாக தோன்றும். இதுபோன்ற தேடியந்திரத்தை தான் இதுநாள் வரை தேடிக்கொண்டிருந்தேன் என சொல்ல வைக்கும். அதாவது இதுவரை அறியாமல் இருந்தால்!
ஃபைண்ட்சவுண்ட்ஸ் (http://www.findsounds.com ) அப்படி என்ன செய்கிறது?
ஒலிகளை தேடித் தருகிறது!
‘இணையத்தில் ஒலிகளை தேடுங்கள்’ என்பது தான் இதன் கோஷமாக இருக்கிறது.
இதன் தோற்றம் நவீன தேடியந்திரம் போல இருக்காது. இதன் முகப்பு பக்கம், அந்த காலத்தில் வலைவாசல் தளங்கள் போல இருக்கிறது.
முகப்புப் பக்கத்தில் தேடல் கட்டம் இருக்கிறது. அதன் கீழ், உதாரண சொற்களும், அதற்கும் கீழ் ஒலிகளின் பல கோப்பு வடிவங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் கீழ், என்ன வகையான ஒலிகளை எல்லாம் கண்டுபிடிக்கலாம் எனும் குறிப்பு இருக்கிறது. அதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தீர்கள் என்றால் நீங்கள் அசந்து போக வேண்டும்.
எல்லாம் ஒலிமயம்
ஒரு ஹோட்டலில் உலகம் முழுவதும் கிடைக்க கூடிய உணவு வகைகள் எல்லாம் பட்டியலிடப்பட்டால் எப்படி இருக்கும்? அதே போல இந்தப் பக்கத்தில் இந்த தேடியந்திரத்தில் தேடக்கூடிய ஒலிகள் எல்லாம் பட்டியலிடப்பட்டுள்ளது. முதலில் வகைகள், துணைத்தலைப்புகளாக கண்ணில் படுகின்றன. விலங்குகள், பறவைகள், விடுமுறை, வீடு, பூச்சிகள், இதர, இசைக்கருவிகள், இயற்கை, இறைச்சல், அலுலகம்… இப்படி துணைத் தலைப்புகள் நீள்கின்றன.
ஒவ்வொரு தலைப்பிலும் கேட்கக்கூடிய ஒலிகள், விலங்குகள் பிரிவில் முதலை, குரங்கு, வவ்வாள், கரடி, எருமை, ஒட்டகம், யானை, பன்றி, நாய், வரிக்குதிரை என பட்டியல் நீள்கின்றது. எந்தச் சொல்லில் கிளிக் செய்தாலும் அதற்கான ஒலி வடிவை கேட்கலாம்.
இப்படி ஒவ்வொரு வகைக்கும் நீளமான ஒலி பட்டியல்!
ஓசை நயம்
அருவி ஒலியில் இருந்து, பூகம்ப முழக்கம் வரை, நீலக்குயில் கீதம் முதல் புயல் பாடும் பாட்டு வரை, சூட்கேஸ் திறக்கும் ஒலி முதல் பேக்ஸ் ஒலி வரை, வயலின் இசை முதல் தபேலா வரை…. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், கேட்டுக்கொண்டே போகலாம்.
இந்தப் பட்டியல் என்பது இதில் கிடைக்ககூடிய ஒலிகளுக்கான மாதிரிகள் தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
உங்கள் தேவைக்கேற்ப குறிப்பிட்டு தேடினால் அதற்கேற்ற ஒலி குறிப்பை கண்டு பிடித்து விடலாம். கண்டு, கேட்பது மட்டும் அல்ல, பயன்பாட்டிற்காக பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
இந்தப் பட்டியலில் இருந்தும் ஒலிகளை தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது வழக்கமான தேடியந்திரத்தில் தேடுவது போல குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம். எதிர்பார்க்கும் ஒலிக்கான குறிச்சொல்லை அடித்துவிட்டு, தேவையான கோப்பு வடிவம், ஒலியின் துல்லியம், அதன் கால அளவு ஆகியவற்றை குறிப்பிட்டும் தேடலை பட்டை தீட்டலாம்.
தேடல் எளிது
தேடல் முடிவுகளும் வழக்கமான தேடியந்திர முறையிலேயே பட்டியலிடப்படுகிறது. பத்து, பத்து ஒலிகளாக பட்டியலில் பார்க்கலாம். ஒவ்வொரு முடிவுடனும் அதற்கான இணைப்பு பக்கம் இடம் பெற்றிருக்கும். அந்த இணைப்புக்கு முன் இடது பக்கத்தில் மைக் மற்றும் டவுன்லோடு பட்டன் இருக்கின்றன. இணைப்பின் மீது கிளிக் செய்தால் ஒலியை திரையிலே கேட்டுப் பார்க்கலாம்.
இந்த ஒலியை இமெயிலில் அனுப்பிக்கொள்ளும் வசதி மற்றும் ட்விட்டர் மூலம் பகிரும் வசதி ஆகியவையும் இருக்கின்றன. முடிவுகள் ஒலிக்கோப்புகள் அல்லவா, எனவே அவை ஒலிக்குறிப்புக்கான வரைபடமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
யோசித்துப் பாருங்கள், இணையத்தில் தகவல்களை வெகு சுலபமாக தேடி விடலாம். விதவிதமான தேடியந்திரங்கள் இருக்கின்றன. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தேடவும் சிறப்புத் தேடியந்திரங்கள் இருக்கின்றன. இவை எல்லாமே பரவலாக அறியப்பட்டிருக்கின்றன.
இந்த வகையில் ஒலி தேடியந்திரங்களின் தேவையை உணரப்பட்டு உருவாக்கப்பட்ட சேவைகளில் ஒன்றாக பைண்ட் சவுண்ட்ஸ் திகழ்கிறது.
ஒலி பொருத்தம்
கம்பேர்சோனிக்ஸ் (Comparisonics) எனும் நிறுவனம் இந்த ஒலி தேடியந்திரத்தின் பின்னே இருக்கிறது. ஆச்சர்யப்படக்கூடிய வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேடியந்திரம் செயல்பட்டு வருகிறது.
ஃபைண்ட்சவுண்ட்ஸ் தளத்தின் ‘எங்களைப் பற்றி’ அறிமுக பக்கத்தில், இணையத்தில் ஒலிகளை தேடுவதற்கான இலவச தளம், கூகுள், யாஹூவைப் போல இதுவும் ஒரு தேடியந்திரம், ஆனால் ஒலிகளில் கவனம் செலுதுவது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக அம்சங்களை கொண்டிருந்தாலும் பயன்படுத்த எளிமையானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுளின் வெற்றிக்கு காரணமான பேஜ்ரேங்க் நுப்டம் போல இந்த தேடியந்திரத்திற்கு பின்னும் ஒரு நுட்பம் இருக்கிறது. சவுண்ட் மேட்சிங் என்று இது குறிப்பிடப்படுகிறது. இவை பற்றி எல்லாம் விளக்கும் தனிக்கட்டுரை இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒலி (ஆடியோ) தொழில்நுட்பத்தின் பதிவு வரலாற்றை சுருக்கமாக சுட்டிக்காட்டும் இந்தக் கட்டுரை ஒலிகளை தேடும் நுட்பத்தை அழகாக விவரிக்கிறது.
இதன் அடிப்படை செயல்பாடு மற்ற தேடியந்திரங்கள் போலவே இருக்கிறது. ஏற்கெனவே இணையத்தில் இருந்து ஒலி கோப்புகளை தேடி தொகுத்து வைத்திருந்து, குறிச்சொற்களுக்கு ஏற்ப தேடித்தருகிறது. ஆனால் இது தேடித்தருவது எச்டிஎம்.எல் கோப்போ, புகைப்படமோ அல்ல; ஒலி கோப்பு. தேடப்படும் சொல்லுக்கு ஏற்ப, பொருத்தமான ஒலிக்குறிப்பை தேடுவது, எச்டிஎம்.எல் பக்கத்தை தேடித்தருவது போல எளிதானது அல்ல.
யானை என்று குறிச்சொல்லை தேடும்போது, யானை எனும் சொல் உள்ள இணைய பக்கங்களை எல்லாம் தேடி எடுத்து அவற்றை தரப்படுத்தி வரிசைப்படுத்திவிடலாம். ஆனால் யானையின் பிளிறல் என்றும் தேடும்போது, ஒரு ஒலிக் குறிப்பில் எப்படி பிளிறல் சத்தத்தை அடையாளம் காண்பது? அதிலும் ஒலிகளை உணர்வதில் மனிதர்களுக்கு இருக்கும் திறனும், ஆற்றலும் சாப்ட்வேருக்கு சாத்தியமில்லை எனும்போது இதில் உள்ள சிக்கலை உணரலாம். ஆனால், சவுண்ட் மேட்சிங் நுட்பம் மூலம் இந்த சவாலை ஃபைண்ட்சவுண்டஸ் அழகாக எதிர்கொள்கிறது.
விரிவான தேடல்
ஒலிக்குறிப்புகள் இணையத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டு, அவற்றுக்கு உரிய ஒலி கையெழுத்துகள் கண்டறியப்பட்டு அதற்கேற்ப வகைப்படுத்தப்படுகிறது. இந்த ஒலி கையெழுத்துகளின் அடிப்படையில் குறிச்சொற்களின் அர்த்தத்துடன் பொருத்தப்பட்டு ஒலிகள் பட்டியலிடப்படுகிறது.
மேலும், ஒலிகளை ஒப்பிட்டுப்பார்க்கும் திறனும் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட ஒலி நயத்திற்கு இணையான ஒலிகள் கண்டறிப்பட்டு, அவை எந்த அளவுக்கு தேடப்படும் ஒலியுடன் ஒத்துப்போகிறது எனும் அடிப்படையில் ஒலிகள் முன்வைக்கப்படுகின்றன.
இவைத்தவிர, ஒலி அளவு, ஒலி கோப்பு வடிவங்கள், ஒலி கோப்பின் தன்மை உள்ளிட்ட அம்சங்களிலும் தேடலாம். ஒலி வடிவத்தை காட்சிப்படுத்தி பார்க்கும் வசதியும் இருக்கிறது.
ஒலி பொறியாளர்கள், இசை அமைப்பாளர்கள், இயக்குனர்கள், வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள், அனிமேஷன் வல்லுனர்கள் என பலவகையான தொழில்வல்லுனர்களின் தேவையை இந்த தேடியந்திரம் நிறைவேற்றி வருகிறது.
இணைய பயன்பாடு
தொழில் சார்ந்த தேவையில்லாவிட்டாலும் கூட, ஒருவர் இந்த தேடியந்திரத்தை சுவாரஸ்யமாக பயன்படுத்தலாம். குறிப்பிட்ட ஒலிகளை கேட்டு பார்க்கும் தேவை ஏற்பட்டால் இந்த தேடியந்திரத்தில் அதை எளிதாக தேடிவிடலாம். வலைப்பதிவிலோ, பேஸ்புக் பதிவிலோ ஒலி சார்ந்த சொல்லை பயன்படுத்தும் போது இந்த தேடியந்திரத்தில் தேடி அதன் இணைப்பை குறிப்பிட்ட அந்த சொல்லுடன் இணைத்து சுவாரஸ்யத்தை அளிக்கலாம்.
அடிப்படையான தேடல் தவிர தொழில்முறை வல்லுனர்களுக்கு என்று மிக பிரத்யேகமான வசதியையும் பைண்ட் சவுண்ட்ஸ் அளிக்கிறது.
தேடியந்திர முகவரி:>http://www.findsounds.com
தமிழ் இந்து நாளிதழில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஆ’வலை’ வீசுவோம் தொடரில் இடம்பெற்ற கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம்.
—
https://www.hindutamil.in/news/technology/54534-9-7.html
—
மேலும் ஒரு அருமையான ஒலி தேடியந்திரம் பற்றி அறிய!