கிளப்ஹவுசுக்கு போட்டியாக ஸ்பாட்டிபையின் கிரீன்ரூம் சேவை

social_media_greenroomஇணையத்தில் ஆடியோ மூலமான உரையாடல் மற்றும் விவாதங்கள் மேற்கொள்வதை கிளப்ஹவுஸ் செயலி பிரபலமாக்கியுள்ள நிலையில், இந்த பிரிவில் ஸ்பாட்டிபை நிறுவனம் ’கிரீன்ரூம்’ எனும் பெயரில் சமூக ஆடியோ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இசைப்பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஸ்பாட்டிபை ஆடியோ உரையாடலுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது இந்த பிரிவில் போட்டியை மேலும் அதிகமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் சமூக ஊடக பரப்பில் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகள் பிரபலமாக உள்ளன. வீடியோ பிரிவில் யூடியூப், டிக்டாக் உள்ளிட்ட சேவைகள் பிரபலமாக உள்ளன. ஆடியோ பரப்பில் பாட்காஸ்டிங் வசதி இருந்தாலும், ஒலி வடிவிலான உரையாடல் அந்த அளவு பிரபலமாகவில்லை.

கிளப்ஹவுஸ் வெற்றி

இந்நிலையில், ஆடியோ அறைகளை உருவாக்கி கொண்டு உரையாடும் கிளப்ஹவுஸ் செயலி அறிமுகமாகி, பேச்சு வடிவிலான உரையாடல் வசதியை மிகவும் பிரபலமாக்கியது. முதலில் ஐபோன்களுக்காக அறிமுகமான கிளப்ஹவுஸ் சேவை அண்மையில், ஆண்ட்ராய்டு வடிவில் அறிமுகமானதை அடுத்து இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கிளப்ஹவுஸ் வெற்றியை அடுத்து, முன்னணி நிறுவனங்கள் ஆடியோ உரையாடல் வசதியை அறிமுகம் செய்து வருகின்றன. குறும்பதிவு சேவையான டிவிட்டர், ஸ்பேசஸ் எனும் பெயரில் ஆடியோ உரையாடல் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது, ஸ்டிரீமிங் முறையில் இசை கேட்கும் சேவையை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான ஸ்பாட்டிபை, ஆடிடோ உரையாடலுக்கான கிரீன்ரூம் (Greenroom ) எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்பாட்டிபை

கிளப்ஹவுஸ் போலவே அமைந்துள்ள இந்த செயலி, இசை, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் சார்ந்த ஆடியோ உரையாடல் வசதியை அளிக்கிறது. கிளப்ஹவுஸ் ஏற்படுத்திய பரபரப்பை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்பாட்டிபை, லாக்கர்ரூம் (Locker Room ) எனும் ஆடியோ செயலியை கையகப்படுத்தியது,.

விளையாட்டு ரசிகர்கள் தங்கள் அபிமான அணி தொடர்பான அடியோ உரையாடலை மேற்கொள்ள வழி செய்த லாக்கர் ரூம் சேவையை அடிப்படையாக கொண்டு தற்போது ஸ்பாட்டிப கிரீன்ரூம் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் இரண்டிலும் பயன்படுத்தும் வகையில் கிரீன்ரூம் செயலி அறிமுகம் ஆகியுள்ளது. ஸ்பாட்டிபை கணக்கு மூலம் இந்த செயலியை இயக்கலாம். ஸ்பாட்டிபை கணக்கு இல்லாதவர்களும் இந்த செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

நேரலை விவாதங்களை உண்டாக்குவதற்கான சமூக ஆடியோ சேவை என ஸ்பாட்டிபை இந்த செயலியை குறிப்பிடுகிறது. இதன் மூலம் பயனாளிகள் மெய்நிகர் அறைகளை உருவாக்கி கொண்டு, தங்களுக்கு பிடித்தமான தலைப்புகளில் உரையாடலாம், ஏற்கனவே நிகழும் உரையாடல்களில் பங்கேற்கலாம்.

புதிய வசதிகள்

கிரீன்ரூம் செயலியில் நுழைந்ததுமே, அதில் இருக்கும் அறைகள் மற்றும் நடைபெறும் விவாதங்களை பார்க்கலாம். அவற்றில் விரும்பிட விவாதங்களை தேர்வு செய்து நுழையலாம். எதிர்வரும் உரையாடல்களை பயனாளிகள் தங்கள் காலண்டிரில் குறித்து வைக்கலாம்.

விருப்பமான தலைப்புகளை தேர்வு செய்தால், அவை தொடர்பான விவாத அறைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. இதே போல தங்களுக்கான விவாத அறைகளையும் உருவாக்கி மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். ஆர்வம் உள்ளவர்களை பின் தொடரும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவாதத்தில் நன்றாக பேசுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை பாராட்டி ரத்தினங்கள் (“gems” ) அளிக்கலாம். ரத்தினங்கள் எண்ணிக்கை அறிமுக பக்கத்தில் இடம்பெறும்.

பேஸ்புக் போட்டி

மற்ற ஆடியோ சேவைகளில் இருந்து முக்கிய வேறுபாடாக, இந்த சேவையில் நேரடி சாட் வசதி அளிக்கப்படுகிறது. இதை விரும்பிய போது இயக்கி கொள்ளலாம்.

மேலும், உரையாடல்கள் ஸ்பாட்டிபையால் பதிவு செய்யப்படுவதால், அதன் கோப்பை பெற்று பாட்காஸ்டிங் நிகழ்ச்சியாகவும் ஒலிபரப்பலாம். கிரியேட்டர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி திட்டத்தையும் ஸ்பாட்டிபை அறிவித்துள்ளது.

இதனிடையே பேஸ்புக் நிறுவனமும், லைவ் ஆடியோ ரூம் எனும் பெயரில் சமூக ஆடியோ வசதியை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://www.spotify.com/us/greenroom/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *