இருளர்களின் பிரச்சனைக்கு ஒரு செயலி தீர்வாகுமா என்று தெரியவில்லை. ஆனால், இருளர்களுக்கு என்று ஒரு செயலி இருப்பது அவர்கள் பிரச்சனைகளை கவனத்திற்கு கொண்டு வரவும், அதைவிட முக்கியமாக அவர்களது நிலை மற்றும் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவசியம் எனத்தோன்றுகிறது.
இருளர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை பற்றி பேசும் ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்தியிருக்கும் விவாதம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவுகளை வாசிக்கும் போது, இருளர் செயலிக்கான தேவை பற்றிய எண்ணம் உண்டாகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னோடி செயலி தொடர்பான தகவலே இருளர் செயலி தொடர்பான எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
பெரும் பாராட்டையும், பரவலாக விவாதத்தையும், அவற்றின் கூடவே பலவிதமான விமர்சனங்களையும் ஈர்த்திருக்கும் த.ச.ஞானவேலின் ஜெய்பீம் திரைப்படத்தை பார்க்கவில்லை என்றாலும், படம் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை தெளிவாக உணர முடிகிறது.
ஜெய்பீம் படம் தொடர்பான விவாதங்களில் பலவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், இரண்டு விஷயங்கள் முக்கியமாக அமைகின்றன. முதல் விஷயம் இருளர்களுக்கு எதிரான காவல்துறையின் வன்முறை. இதன் நீட்சியான, பல நேரங்களில் விசாரணை எனும் பெயரில் நிகழும் காவல் துறையின் வன்முறை இரண்டாவது விஷயம்.
இந்த இரண்டையும் வரலாற்று பதிவாக காட்சிபடுத்தியிருப்பதாக படம் பாராட்டப்படுவதை உணர முடிகிறது. அதே நேரத்தில் குறுக்கு விசாரணை போல, இந்த நோக்கத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்கும் கருத்துகளையும் பலர் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த விவாதத்தில் யார் யார் எல்லாம் எந்த பக்கம் என்பது ஒரு பக்கம் இருக்க, சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான ’ஸ்டாப் அண்ட் சர்ச்’ செயலியை இந்த பின்னணியில் நினைத்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
ஸ்டாப் அண்ட் சர்ச் என்பது நாம் இன்றளவும் பின்பற்றும் குற்றவியல் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு மூல சட்ட நடைமுறைகளை கொண்ட பிரிட்டனில் பழக்கத்தில் இருக்கும் காவல்துறை நடவடிக்கையாக இருக்கிறது. அதாவது சந்தேகத்தின் பெயரில் பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் சோதனை நடத்துவதற்கான அதிகாரத்தை இது குறிக்கிறது.
பொதுநலன் நோக்கில் குற்றங்களை தடுக்க சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ய ஸ்டாப் அண்ட் சர்ச் வழி செய்கிறது. ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் போன்றவற்றை வைத்திருக்கின்றனரா எனும் சந்தேகத்தை உறுதி செய்து கொள்ள இந்த அதிகாரத்தை பயன்படுத்தலாம். பொதுநலன் நோக்கில் காவல்துறைக்கு அளிக்கப்பட்ட இந்த அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான அம்சங்களும் இந்த சட்ட பிரிவிலேயே இடம்பெற்றிருப்பதையும் அறிய முடிகிறது.
சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை தடுத்து நிறுத்தும் போது, விசாரிக்கப்படுவதற்கான காரணத்தை தெரிவிப்பதோடு, காவலர் தான் பணிபுரியும் காவல் நிலையம் மற்றும் தனது பணி எண் ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் நடைமுறையில் காவலர்கள் விசாரணை செய்யும் போது, நடவடிக்கைக்கு உள்ளாகிறவர்கள் மோசமாக நடத்தப்படுவதே பெரும்பாலும் நிகழ்கிறது. அது மட்டும் அல்லாமல் சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவுனரே இத்தகைய சோதனைக்கு உள்ளாவது நிலைமயை மேலும் மோசமாக்குகிறது.
பிரிட்டனைப்பொருத்தவரை, இந்த பிரிவின் கீழ் பெரும்பாலும் கருப்பர் இனத்தைச்சேர்ந்தவர்களே அதிகம் சோதனைக்கு உள்ளாவதாக சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட இனம் அல்லது சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்களே சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைக்கு உள்ளாக்கப்படுவது தான் வேதனையான யதார்த்தம். அது மட்டும் அல்ல, சோதனையில் எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்தாலும் காவலர் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் கிடையாது.
காவலர்கள் தங்கள் கடமையை தான் செய்துள்ளனர் என்றாலும், சந்தேகத்தின் அடிப்படையிலான விசாரணையை குறிப்பிட்ட பிரிவினர் மீது மேற்கொள்ளலாம் எனும் இயல்பான எண்ணம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மக்களிடம் ஏற்படுத்தகூடிய பாரதூரமான விளைவுகளை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இத்தகைய விசாரணைக்கு இலக்காக நேர்ந்தவர்கள் மனதில் இது பெரும் அழுத்தத்தையும், உளவியில்ரீதியிலான தாக்கத்தையும் ஏற்படுத்தும். குற்றம் செய்யாமலேயே குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நிலை நிச்சயம் ஏற்புடையதல்ல.
கருப்பினத்தவருக்கும், இன்னும் பிற விளிம்பு நிலை மக்களுக்கும் இதுவே யதார்த்தம் எனும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழில்நுட்பம் மூலம் உதவி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ’ஸ்டாப் அண்ட் சர்ச்’ செயலி.
சோதனைக்கு இலக்காகும் போது, பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பான தங்கள் உரிமையை அறியவும், தாங்கள் காவலர்களால் நடத்தப்படும் முறை குறித்து தகவல் அளிக்கவும் இந்த செயலி வழி செய்கிறது. காவலர்களை எதிர்கொள்ளும் போது அச்சமும், குழப்பமும் தாக்கத்தை செலுத்துவதை மீறி பாதிக்கப்பட்டவர்கள், இந்த செயலியை ஒரு ஆதரவாக பற்றிக்கொண்டு தங்களுக்கான உரிமையை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் இதே போன்ற சோதனைக்கு உள்ளானவர்களின் அனுபவங்களையும் இந்த செயலி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
சோதனைக்காக நிறுத்தப்படுவர்கள் தாங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்து கொள்ள இந்த செயலி அளிக்கும் தகவல்கள் உதவும் என்பதோடு, இதன் வாயிலாக தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வது பாதுகாப்பு உணர்வையும் அளிக்கும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, இத்தகைய செயலி இருப்பது காவல்துறையினர் செயல்பாடு வெளிப்படையாக அமையவும் இது வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி ஒரு செயலி இருப்பதால் மட்டும், காவலர்கள் தாங்கள் சந்தேகம் கொள்பவர்களிடம் எல்லாம் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்று கருத முடியாது என்றாலும், யாரிடம் விசாரணை நடத்தப்பட்டு யார் பாதிக்கப்பட்டால் என்ன எனும் நிலையை விட இது போல ஒரு அதிகாரமளிக்கும் செயலி இருப்பது நல்லது தான்.
கடந்த 2012 ம் ஆண்டு, பிரிட்டனைச்சேர்ந்த ஆரான் சான்சன், சத்வந்த் சிக் கென்னத் மற்றும் ஜார்ஜ் பாக்ஸோவஸ்கி (Aaron Sonson, Satwant Singh Kenth, Gregory Paczkowski, )ஆகிய மூன்று இளைஞர்கள் இணைந்து இந்த செயலியை உருவாக்கினர். செண்டர் பார் டிஜிட்டல் இன்குலஷன் (Centre for Digital Inclusion) எனும் தொண்டு அமைப்பு நடத்திய ஆப்ஸ் பார் குட் போட்டிக்காக இந்த செயலி உருவாக்கப்பட்டது.
நானும் எனது நண்பர்களும் சிறு வயதில் பல முறை தடுத்து நிறுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளோம். இதில் மோசமானது என்னவெனில், கண்ணியமற்று நடத்தப்பட்டது மற்றும் சந்தேகத்திற்கான காரணம் இல்லாததும் தான் என்று, செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான சான்சன் இந்த செயலி தொடர்பான செய்திக்கான பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த வலி மிகுந்த அனுபவத்தில் இருந்தே இந்த செயலிக்கான தேவையை உணர்ந்து கொள்ளலாம்.
இந்த செயலி தற்போது பயன்பாட்டில் இல்லை என்பதை மீறி, பாதிக்கப்பட்டவர்களை கை தூக்கிவிடவும், அவர்களுக்கு ஆதரவாக நிற்கவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கான உதாரணமாக இதை கருதலாம். மேலும், இதே போலவே ஒய் ஸ்டாப் (Y-Stop app) எனும் செயலி சில ஆண்டுகள் கழித்து உருவாக்கப்பட்டது.
சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்படுபவர்கள் காவலர்கள் செயல்பாட்டை பதிவு செய்து, அதை உடனடியாக வழக்கறிஞர்களுக்கு அனுப்பி வைக்கும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளது. (https://y-stop.org/ ).
நம் நாட்டிலும் பழங்குடியினர், விளம்பு நிலை மக்களின் நிலையும் இத்தகையது தான். இதை தான் ஜெய்பீம் படமும், விசாரணை என்ற பெயரில் இருளர் சமூகத்தினர் மனிததன்மையற்று நடத்தப்பட்ட விதத்தை விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த விவாதங்களில் நாம் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்களில் ஒன்று, இருளர் சமூக பிரச்சனையை இத்தோடு மறந்துவிடாமல் இருப்பது தான். இதற்கான வழிகளில் ஒன்று, பழங்குடி மக்களுக்கான அதிகாரமளிக்கும் செயலி என நினைப்பது சரி தானே.
பாதிக்கப்படும் நேரங்களில் இந்த மக்கள் சட்ட உதவியை நாட வழி செய்வதோடு, பொதுவாக பழங்குடியினருக்கான உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும் இந்த செயலி அமைய வேண்டும். பொதுமக்கள் மத்தியில் பழங்குடியினர் மற்றும் பாதிக்கப்பட்டவர் நிலையை குறித்த விழிப்புணர்வையும் இந்த செயலி ஏற்படுத்த உதவும்.
இத்தகைய செயலி பிரச்சனைக்கு தீர்வாகுமா என்று தெரியவில்லை, ஆனால் இருளர்களுக்காக வாதாடும் செயலி இருப்பது குறைந்தபட்ச தேவை என்றே கருத வேண்டும்.