புதிதாக மொபைல் போன் வாங்க இருக்கிறீர்களா? எந்த போன் வாங்குவது என தீர்மானிப்பதற்கு முன், லேட்டஸ்ட் மாடல் போன்கள் பற்றியும், அவற்றின் அம்சங்கள் பற்றியும், முக்கியமாக விலை பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்கு கொஞ்சம் ஆய்வு செய்வதும் அவசியம். அதாவது மொபைல் போன்கள் தொடர்பான அறிமுக செய்திகள், காத்திருக்கும் அறிமுகங்கள், புதிய போன் செயல்பாடு தொடர்பான விமர்சனங்கள் உள்ளிட்ட தகவல்களை அலசி ஆராய்ந்துவிட்டு அதன் பிறகு, நமக்கு ஏற்ற போனை வாங்க தீர்மானிக்கலாம்.
இப்படி ஸ்மார்ட்போன் தொடர்பான தகவல்களை விரிவாக தெரிந்து கொள்ள உதவும் முன்னணி இணையதளங்களின் பட்டியல் இதோ:
91 மொபைல்ஸ் (www.91mobiles.com)
இந்த தளத்தை ஸ்மார்ட்போன்களுக்கான கூகுள் என்று சொல்லலாம். புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் எந்த பிராண்ட்ம் போன் தொடர்பான தகவல் தேவை என்றாலும் இந்த தளத்தில் தேடலாம். போனின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்கள பட்டியலிட்டு எந்த இடத்தில் வாங்கலாம் என்றும் பரிந்துரைக்கிறது. உங்களுக்கு ஏற்ற போனை தேடிக்கொள்வதற்கான சுவாரஸ்யமான தேடல் வசதியும் இருக்கிறது. போனுக்கான தர்மாமீட்டர் போல தோன்றும் இந்த வசதி மூலம், எந்த விலை பிரிவில், எந்த பிராண்டில், எத்தகைய அம்சங்கள் கொண்ட போன் தேவை என தேடிப்பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் மட்டும் அல்ல, டேப்லெட்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் என எல்லா வகை சாதனங்கள் பற்றிய தகவல்களும் இருக்கின்றன. டிவி, பிரிட்ஜ், காமிரா போன்ற மின்னணு சாதனங்கள் பற்றிய தகவல்களையும் அறியலாம். போன்களை ஒப்பிட்டுப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.
தலைவாழை விருந்து போல ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கேட்ஜெட்கள் தொடர்பான செய்திகள், புதிய அறிமுகங்கள், விமர்சனங்கள், விரைவில் அறிமுகம் ஆக உள்ள சாதனங்கள், பிரபலமாக இருக்கும் போன்கள் என கேட்ஜெட் உலகம் பற்றிய செய்திகளையும், தகவல்களையும் விரிவாக வழங்குகிறது இந்த தளம்!.
–
மைஸ்மார்ட்பிரைஸ் (www.mysmartprice.com )
போன்களின் அம்சங்களையும் விட்டுத்தள்ளுங்கள் முதலில் விலையை சொல்லுங்கள் என எப்போதும் போன்களின் விலையை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு உதவும் வகையில், விலை அடிப்படையில் ஸ்மார்ட்போன் தகவல்களை தெரிந்து கொள்ள வழி செய்கிறது. பிரபலமாக உள்ள போன்கள், புதிதாக அறிமுகமான போன்கள் என பல பிரிவுகளில் தகவல்களை அணுகலாம். போன்கள் மட்டும் அல்ல, லேப்டாப், டிவி, ஏசி, வாஷிங்மிஷின் உள்ளிட்ட சாதனங்கள் தொடர்பான தகவல்களையும் அறியலாம். இந்த விலையில் இருந்து இந்த விலை வரை என பல்வேறு பிரிவுகளிலும் சாதனங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். நாட்டில் தொழில்நுட்ப தளங்களில் இரண்டாவது முன்னணி தளம் என மார்தட்டிக்கொள்ளும் இந்த தளம், செய்தி மற்றும் விமர்சனங்களையும் வழங்குகிறது. தேடல் வசதியும் இருக்கிறது. ரீசார்ஜ் வசதியையும் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இதே பிரிவில் பிரைஸ்பாபா (pricebaba.com) தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
–
ஆண்ட்ராய்டு போலீஸ் (https://www.androidpolice.com/ )
சர்வம் ஆண்ட்ராய்டுமயம் என்பது போல ஆண்ட்ராய்டு சார்ந்த சாதனங்கள் தொடர்பான செய்திகளையும், தகவல்களையும் வழங்கும் இணையதளம். ஆண்ட்ராய்டு சாதனங்கள் தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளில் துவங்கி, ஆண்ட்யார்டு சாதன விமர்சனங்கள், செய்திகள், கேம்கள் என அசத்துகிறது இந்த தளம். ஆண்ட்ராய்டு தொடர்பான தகவல்களுக்கான நம்பகமான தளம் என்றும் கருதலாம். ஆண்ட்ராய்டு தொடர்பாக அப்டேட்டாக இருக்க வேண்டும் என நினைத்தால் இந்த தளம் நிச்சயம் அதற்கு உதவும். சர்வதேச அளவிலான செய்திகளை தெரிந்து கொள்ளலாம். அடுத்து வர இருக்கும் அறிமுகங்கள் மற்றும் அம்சங்களை தெரிந்து கொள்ளவும் வழி செய்கிறது.
–
9டு5கூகுள் (9to5google.com )
ஆண்ட்ராய்டின் தாய்வீடான கூகுள் சார்ந்த செய்திகளை வெளியிடும் பிரத்யேக இணையதளம். கூகுளின் பிக்சல் போன்களில் துவங்கி அதன் ஸ்மார்ட் சாதனம் வரை அனைத்துவிதமான சாதனங்கள் தொடர்பான செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம். கூகுள் டிவி, கூகுள் குரோம், யூடியூப் என பல பிரிவுகளில் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. கூகுள் சார்ந்த தயாரிப்புகள், அறிமுகங்கள் தொடர்பாக பிரத்யேக செய்திகளை அவப்போது முந்தி தருவது இதன் தனிச்சிறப்பு. வீடியோக்கள் மற்றும் விமர்சனப்பகுதியும் இருக்கின்றன.
–
ஆண்ட்ராய்டு செண்ட்ரல் (www.androidcentral.com)
ஆண்ட்ராய்டு போன்களுக்கான மற்றொரு இணையதளம். செய்திகள் தவிர அலசல் மற்றும் கேமிங்கிற்கான தனிப்பகுதிகளை கொண்டுள்ளது. சாதனங்கள் செயல்பாடு தொடர்பான விரிவான விமர்சனங்களையும் தெரிந்து கொள்ளலாம். சிறந்த சாதனங்களையும் தேர்வு செய்து பரிந்துரைக்கிறது.
–
9டு5மேக் (9to5mac.com )
ஆப்பிள் சாதனங்களுக்கு என்று தனி அபிமானிகள் இருக்கின்றனர் அல்லவா, அவர்களுக்கான இணையதளம் இது. ஐபோன், மேக் லேப்டாப், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட சாதனங்கள் தொடர்பான செய்திகளையும், தகவல்களையும் வழங்குகிறது. செய்திகள் தவிர வழிகாட்டி கட்டுரைகள் இதன் தனிச்சிறப்பு. ஐபோன் மற்றும் ஆப்பிள் சார்ந்த பிரத்யேக தகவல்களை விரும்புகிறவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் தளம்.
–
கேட்ஜெட்ஸ்நவ் (https://www.gadgetsnow.com/)
சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப தகவல்களுக்கான முன்னணி இணையதளம். செய்திகளை தெரிந்து கொள்வதோடு, சாதனங்களின் அம்சங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் இருக்கிறது. ஸ்லைடுஷோ மற்றும் வீடியோக்களையும் வழங்குகிறது. டைம்ஸ் இண்டெர்நெட்டால் நடத்தப்படுகிறது. வழிகாட்டி கட்டுரைகளியும் இருக்கின்றன.
–
பிஜிஆர்.இன் (www.bgr.in)
கேட்ஜெட் மற்றும் தொழில்நுட்ப செய்திகளுக்கான இணையதளம். மொபைல்கள், விமர்சனம், கேமிங், வழிகாட்டிகள் மற்றும் வீடியோக்களை கொண்டுள்ளது. முன்னணி போன்கள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் விமர்சனங்களையும் தெரிந்து கொள்ளலாம். தொழில்நுட்ப உலகில் அப்டேட்டாக இருக்க விரும்புகிறவர்களுக்கு உதவியாக இருக்கும்.
–
டிஜிட்.இன் (www.digit.in )
இதுவும் தொழில்நுட்ப செய்தி தளம் தான். செய்திகள் தவிர, போன்கள், லேப்டாப்கள், விமர்சனங்கள் மற்றும் கேமிங் உள்ளிட்ட பகுதிகளை கொண்டுள்ளது. டாப் டென் பட்டியல் மற்றும் பரிந்துரைகள் இந்த தளத்தின் கவர்ந்திழுக்கும் அம்சங்களில் ஒன்று. பிரபலமாக உள்ள போன் மாடல்களையும் பட்டியலிடுகிறது. ஆங்கிலம் தவிர, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் செய்திகளை வழங்குகிறது.
–
கேஷிபை.இன்
இது கொஞ்சம் மாறுபட்ட இணையதளம். மற்ற கேட்ஜெட் தளங்கள் போன்களை வாங்க வழிகாட்டுகின்றன என்றால் இந்த தளம் பழைய போன்களை விற்க வழிகாட்டுகிறது. ஆம், உங்களிடம் உள்ள பழைய போனை இந்த தளத்தின் மூலம் விற்கலாம். சென்னை உள்ளிட்ட நகரங்களில் சேவை அளிக்கிறது. போன்களை பழுது பார்ப்பது, மறுசுழற்சி செய்வது தொடர்பான சேவைகளையும் அளிக்கிறது. போன் மட்டும் அல்ல, எல்லா வகை சாதனங்களையும் விற்கலாம்.

1 Comments on “ஸ்மார்ட்போன் ஆய்வுக்கான டாப் இணையதளங்கள்”
Ravichandran R
அருமை…அருமை…பல சமயங்களில்…விற்பவர்கள் கூறும் தகவல்கள் தான் நமக்கு கிடைக்கின்றன…எல்லா…வகையான… Brand சாதனங்கள் பற்றியும் …ஒரே தளத்தில் கிடைப்பது பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி!