சூரிய ஒளியை தோளில் சுமந்த பாடகர்!

sஜான் டென்வர் பெரிய பாடகராக தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் எழுதிய ஒரு பாடலுக்காக விக்கிபீடியாவில் ஒரு பக்கம் இருக்குமா? ’என் தோளின் மீது சூரிய ஒளி’ எனும் பாடல் தான் அது. புகழ் பெற்ற பாடல் ஒன்றுக்காக என தனியே தகவல் பக்கத்தை உருவாக்கும் விக்கிபீடியா பங்கேற்பாளர்களை நினைத்து ஒரு பக்கம் வியக்கலாம் என்றால், மறுபக்கம் டென்வரின் இந்த பாடல் இணையத்தில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கும் விதம் இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கிறது.

’என் தோளின் மீது சூரிய ஒளி என்னை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது’ எனத்துவங்கும் இந்த பாடலின் முழு பதிவுக்கான யூடியூப் வீடியோ கூகுள் தேடல் பட்டியலில் முதலில் தோன்றுவதோடு, ஸ்பாட்டிபை முதல் ஜியோசவான் வரை இந்த பாடலை கேட்க கூடிய பல்வேறு தளங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ( “Sunshine on My Shoulders” )

இன்னும் கொஞ்சம் தேடலை விரிவாக்கினால், இந்த பாடல் வரிகளை எப்படி இசைக்க வேண்டும் என விவரிக்கும், கித்தார் இசை தளம் ஒன்றை அறிய முடிகிறது.

1974 ல் வெளியான இந்த பாடல் வெளியான ஆண்டே பிரபலமாகி பாடல்கள் பட்டியலில் முதலிடம் பெற்று அதன் பிறகு ரசிகர்கள் மனதில் தொடர்ந்து ஒளித்துக்கொண்டே இருக்கிறது. மனதுக்கு ஒத்தடம் கொடுப்பது போன்ற மென்மையான வரிகளை டென்வர் மென்மையாக பாடுவது அந்த வரிகளோடு சேர்ந்து கேட்பவர்களையும் தாலாட்டுகிறது.

இயற்கையை மெல்ல தழுவிக்கொள்ள வைக்கும் இந்த பாடலை டென்வர் எப்போது, எப்படி எழுதினார் எனும் தகவலும் சுவையாகவே இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு கடும் குளிர் காலத்தில், தன்னை உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரு பாடலை எழுதும் உத்தேசத்தோடு டென்வர் இந்த பாடலை எழுதத்துவங்கியிருக்கிறார். குளிருக்கு நடுவே சூரியஒளிக்கான ஏக்கம் தான், என் தோளின் மீது சூரிய ஒளி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது எனும் பாடலாக வெளிப்பட்டு இன்றளவும் கேட்க கேட்க மனதுக்கு இதமளித்து, உற்சாகத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

எல்லாம் சரி, திடிரென பாடகர் டென்வர் பற்றிய தகவல் எதற்கு என்கிறீர்களா?, ’மிதமிஞ்சிய மகிழ்ச்சி மனநிலையை கொண்டிருப்பதை மீறி இந்த பாடலை டென்வர் இப்படி ஒரு பாடலை எழுதும் உத்தேசத்துடன் இதை எழுத துவங்கவில்லை என இந்த பாடல் பிறந்த கதையை விவரிக்கும் அமெரிக்கன்சாங்ரைட்டர் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்காக தான்.-https://americansongwriter.com/

இந்த தளம் பற்றிய இணைய மலர் பதிவு.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *