ஜே.ஜே. சில குறிப்புகளும், புதிய மொழி கற்றல் இணையதளமும் !

jசுந்தர ராமசாமியின்,  ’ஜே.ஜே சில குறிப்புகள்’ படித்த காலத்தில் மிகவும் பிடித்திருந்தது. ஜேஜேவை லட்சிய நாயகனாக பார்க்கலாம். இத்தகைய அதிநாயக பிம்பத்தை மையமாக வைத்து நாவல் எழுதுவது குறித்த முக்கிய விமர்சனமும் இருக்கிறது. ஆனால், என் வாசக மனது ஜேஜேவின் ரசிகன் என்றே இன்னும் சொல்ல விரும்புவது ஒரு பக்கம் இருக்க, இந்த நாவலின் பலமாக நான் கருதுவது, இதில் வரும் ஜேஜேவின் கருத்துகளையும், பார்வைகளையும் மேற்கோள்களாக பயன்படுத்திக்கொண்டே இருக்கலாம் என்பது தான்.

இந்த நாவலில் ஜேஜே லட்சிய வேகத்தோடு, இலக்கிய பத்திரிகை நடத்துவது பற்றி குறிப்பிடும் போது, இந்தியாவில் உள்ள அதிகாரப்பூர்வமான 18 மொழிகளிலும் வரக்கூடிய ஒரு பத்திரியை கொண்டு வர வேண்டும் என கூறுவது போல ஒரு கருத்து வரும் என நினைவு,

ஜேஜேவின் இந்த கருத்தை அதீத லட்சியமாக எடுத்துக்கொள்வதா, அல்லது இதில் ஒருவித அங்கதம் உள்ளதா எனும் சந்தேகம் இப்போது வருவதை மீறி, இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளிலும் வரக்கூடிய ஒரு பத்திரிகை எனும் கருத்து எனக்கு ஈர்ப்புடையதாகவே அமைகிறது.

இந்தியாவில் உள்ள இத்தனை மொழிகள் என்பது நமக்கான வரமாகவே பார்க்கிறேன். அதிலும் இணைய யுகத்தில் இந்திய மொழிகளுக்கு இடையிலான அம்சங்களை கொண்டு பல விஷயங்கள் செய்யலாம். உதாரணத்திற்கு பிற மொழி கற்கும் சேவைகளை இந்திய அளவில் நம் மொழிகளுக்காக செயல்படுத்தலாம்.

இந்திய மொழிகளுக்கான கற்றல் இணையதளம் என்பது மாபெரும் திட்டமாக இருக்கும் என்றாலும், புதிய மொழியை கற்றுக்கொள்ள இரு மொழிகளை நகைச்சுவை பாலம் கொண்டு இணைக்கும் இந்த தளத்தை பார்க்கும் போது, இந்திய மொழிகளுக்கு இந்த தளம் அருமையாக இருக்குமே என்ற எண்ணம் உண்டாகிறது. பைலிங்குவல்ஜோக்ஸ் எனும் இந்த இணையதளம் பற்றிய சுவாரஸ்யமான அறிமுகத்திற்கு இணைய மலர் மின்மடலை பாருங்கள்:  https://cybersimman.substack.com/p/–51d

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *