அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லப்படுவதை பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொற்களுக்கும் பொருத்திக்கொள்ளலாம். அதாவது, அளவுக்கு அதிகமான பாஸ்வேர்டை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாமல் திணறுவது என புரிந்து கொள்ளலாம்.
இப்படி அதிகப்படியான பாஸ்வேர்டுகளை வைத்துக்கொண்டு தவிப்பதை தொழில்நுட்ப உலகில், பாஸ்வேர்டு களைப்பு (Password fatigue ) என்கின்றனர்.
கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களின் தினசரி பயன்பாட்டில், ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக்கொள்ளும் நிர்ப்ந்தத்தால் ஏற்படும் மனச்சுமை பலருக்கும் பாஸ்வேர்டு களைப்பாக மாறுவதாக கருதப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்வேர்டு என்று சொல்லும் போது உண்மையில் நூறு எண்ணிக்கை வரையிலான பாஸ்வேர்டுகள் என்று கொள்வது பொருத்தமாக இருக்கும்.
ஆம், கம்ப்யூட்டரே கதி என கிடக்கும் பலரும், தொழில்நிமித்தமாக பல்வேறு பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இவ்வளவு ஏன், சராசரி பயனாளிகள் கூட, இமெயிலில் துவங்கி, சமூக ஊடக கணக்குகள் என குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட பாஸ்வேர்டுகளை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ( வர்த்தக பயனாளிகள் சராசரியாக 119 பாஸ்வேர்டுகளை வைத்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.)
பாஸ்வேர்டுகளை உருவாக்கினால் மட்டும் போதுமா, அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? அதனால் தான், உருவாக்கி வைத்திருக்கும் பாஸ்வேர்டை எல்லாம் நினைவில் வைத்திருக்கும் தேவையால் களைத்துப்போகிறோம் என்கின்றனர். இது பாஸ்வேர்டு குழப்பம் (password chaos ) என்றும் குறிப்பிடப்படுகிறது.
பாஸ்வேர்டு பற்றி விவரம் அறிந்தவர்களுக்கு இந்த பிரச்சனையின் தீவிரம் நன்றாகவே புரியும். ஏனெனில், பாஸ்வேர்டை உருவாக்குவது என்றால், சாதாரணம் விஷயம் அல்ல, அதற்கென இலக்கனமும், விதிகளும் இருக்கின்றன. உதாரணமாக, எந்த ஒரு பாஸ்வேர்டும் மற்றவர்களால் எளிதில் யூகிக்க முடியாத வகையில் சிக்கலானதாக இருக்க வேண்டும் மற்றும் அதே நேரத்தில் உருவாக்கியவர்கள் மறக்காமல் இருக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்கின்றனர்.
பாஸ்வேர்டு குறிப்பிட்ட எழுத்துகளுக்கு மேல் கொண்டிருக்க வேண்டும், சிறப்பு எழுத்துகளையும், எண்களையும் கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
இந்த பொன்விதிகளை எல்லாம் பின்பற்றி பாஸ்வேர்டை உருவாக்குவதைவிட அவற்றை பராமரிப்பது தான் சிக்கலானது. இதன் காரணமாக பலரும், எளிதில் நினைவில் நிற்கும் பாஸ்வேர்டை வைத்துக்கொள்வது அல்லது, ஒரே பாஸ்வேர்டை வேறு வடிவில் பயன்படுத்துவது போன்ற உத்திகளை கையாள்கின்றனர். இது இடர்மிக்கது என்றாலும், பாஸ்வேர்டை மறந்து தவிப்பதை விட, பாஸ்வேர்டு தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தை எதிர்கொள்ள பலரும் தயாராக இருப்பதாகவும் சொல்கின்றனர்.
இவை எல்லாம் சேர்ந்து தான் பாஸ்வேர்டு களைப்பை உண்டாக்குகின்றன. நீங்களும் கூட இத்தகைய களைப்பிற்கு உள்ளாகியிருக்கலாம். ஆனால் கவலைப்பட வேண்டாம். பாஸ்வேர்டை வரையறுக்கும் வல்லுனர்கள் இதற்கான தீர்வையும் முன்வைக்கின்றனர்.
முதல் வழி, பாஸ்வேர்டுகளை நிர்வகிப்பதற்கான பாஸ்வேர்டு மேலாளர் சேவைகள பயன்படுத்தலாம். இரண்டாவதாக, இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையை பயன்படுத்தலாம். இவற்றோடு சைன் இன் ஆஸ் ஏ சர்வீஸ் எனப்படும் பாஸ்வேர்டை அணுகுவதையும் ஒரு சேவையாக வழங்கும் மென்பொருளையும் பயன்படுத்தலாம் என்கின்றனர்.