ஃபேக்ட்ரிலீட்ஸ் இணையதளத்தை மிகச்சிறந்த தளம் என்று சொல்ல முடியாது. ஆனால் சுவாரசியமான இணையதளம்.
இந்த தளம் பசையுள்ள நிறுவனங்களை தேட வழி செய்கிறது.காலத்தினால் செய்த உதவி என்பதைப்போல இந்த தளம் இந்த காலத்திற்கு ஏற்றது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம்.
பொருளாதார தேக்க நிலையால் பாதிக்கப்படாத துறையே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு அமெரிக்காவை பொருளாதார சீர்குலைவு பாதித்துள்ளது.விளைவு சின்ன நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
புதிய வர்த்தக வாய்ப்புகள் கிடைப்பதும் அரிதாகி விட்டது.நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் உற்பத்தி குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் எடுபட்டிருப்பதால் பெரிய நிறுவனங்களை நம்பியுள்ள சிறிய நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.அதே போல நிறுவனங்களை நம்பியுள்ள விற்பனையாளர்கள் ,மற்றும் சப்ளையர்களும் தள்ளாடுகின்றனர்.
எல்லா தரப்பினருமே பொருளாதாரம் எப்போது மீண்டு வரும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்.இதற்கான் கனிப்புகளும் ஆருடங்களும் உற்சாகமானதாக இல்லை.
இந்தநிலையில் தான் பசையுள்ள நிறுவனங்களை அடையாளம் காட்டுவதாக கூறுகிறது ஃபேக்ட்ரிலீட்ஸ் இணையதளம்.
பொருளாதார தேக்கநிலையிலும் வளர்ச்சிப்பதையில் செல்லும் நிறுவனங்கள் உண்டு அல்லாவா? மற்ற நிறுவனங்கள் முடங்கிப்போயிருக்கும் போது விரிவாக்கப்பணியில் ஈடுபடும் நிறுவங்களும் உண்டல்லவா?
ஒவ்வொரு துறையிலும் இத்தகைய வளர்முக நிறுவனங்களை தேடிக்கண்டுபிடிக்க இந்த தளம் வழி செய்கிறது.
பத்திரிக்கைகள் , நாளிதழ்களில் வெளியாகும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான செய்திகளை அலசி ஆராய்ந்து இந்த தகவலை தருகிறது இந்த தளம்.அதோடு ஜிக்ஜா என்னும் தளத்தின் உதவியோடு குறிப்பிட்ட நிறுவனங்களில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் வழி காட்டுகிறது. முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை தருகிறது.

0 Comments on “யாரிடம் பணம் இருக்கிறது என காட்டும் தளம்”
Pingback: Seidhivalaiyam » Blog Archive » யாரிடம் பணம் இருக்கிறது என காட்டும் தளம்