டிவிட்டருக்கு மாற்றாக விளங்க கூடிய சேவைகளின் வரிசையில் நிச்சயம் ’கூ’ (Koo) சேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கூ, இந்தியாவில் உருவான சேவை என்பது மட்டும் அல்ல, இந்திய தன்மையோடு உருவானது என்பது தான் முக்கியமானது.
டிவிட்டர் நீலபறவை என்றால், இந்திய கூ மஞ்சள் பறவையாக பறக்கிறது. தற்போது நீலப்பறவை சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ள சூழலில், மஞ்சள் பறவை சர்வதேச அளவில் விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது. அதோடு, டிவிட்டரின் தலைமையகமான அமெரிகாவில் அறிமுகமாகவும் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே பிரேசில், நைஜிரியா உள்ளிட்ட நாடுகளில் கூ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்ற நாடுகளையும் தனது பார்வையின் கீழ் கொண்டு வந்துள்ளது.
எலான் மஸ்கின் நடவடிக்கைகளால் டிவிட்டர் பயனாளிகள் அதிருப்திக்கு உள்ளாகி, மாஸ்டோடான், கோஹோஸ்ட் போன்ற குறும்பதிவு சேவைகள் கவனத்தை ஈர்த்திருக்கும் நிலையில், இந்திய கூவும் தன்னளவில் பயனாளிகளை ஈர்த்து வருகிறது.
கூவின் சிறப்பசங்களை பார்ப்பதற்கு முன் அதன் வரலாற்றை பார்ப்பது பொருத்தமாக இருக்கும். கூவின் வரலாறு ஒரு குறும்பதிவில் அடங்கிவிடக்கூடிய அளவுக்கு சுருக்கமானது தான். 2020 ல் தான் ’கூ’ அறிமுகமானது. ஆனால், கூ அறிமுகமான காலம் மிக பொருத்தமானது என்று தான் சொல்ல வேண்டும். இல்லையெனில், இப்போது டிவிட்டருக்கு மாற்று சேவையாக பேசப்பட்டு கொண்டிருக்காது.
அந்த வகையில் கூ நிறுவனர் ஆப்ரமேயா ராதாகிருஷ்ணாவை தொலைநோக்கு மிக்கவர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், டிவிட்டருக்கு மாற்று தேவை என்பதை உணர்ந்து அவர், இணை நிறுவனர் மயங்க் பிடாவடாகவுடன் கூவை துவக்கினார். சொல்லப்போனால், டிவிட்டருக்கான இந்திய மாற்று தேவை என நினைத்தார்.
கூவின் இந்திய தன்மை என்பது இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் அறிமுகமானது தான். பெங்களூருவைச்சேர்ந்த அதன் முதல் சேவை கன்னட மொழியில் அறிமுகமானது. இன்று பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் சேவை அளிப்பதோடு, போர்ச்சுகிசியம் உள்ளிட்ட அயல் மொழிகளிலும் செயல்படுகிறது.
உண்மையில் உள்ளூர் மொழிகளில் செயல்படும் தன்மையே பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கூ வரவேற்பு பெற காரணம்.
இந்த இடத்தில், கூ நிறுவனர் பற்றி கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்வது அவசியம். ஆப்ரமேயா ராதாகிருஷ்ணா இந்திய ஸ்டார்ட் அப் பரப்பில் துடிப்பானவர் என்பது மட்டும் அல்ல, புதிய நிறுவனங்களை துவக்குவதை ஒரு செயலாகவே வைத்திருப்பவர். ஓலா நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட டாக்சி பார் ஷுயர் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை முதலில் துவக்கியவர், அதன் பிறகு வோகல் (Vokal) எனும் நிறுவனத்தை துவக்கினார்.
வோகல் சேவையை இந்திய குவோரா என வர்ணிக்கலாம். கேள்வி பதில் செயலியான வோகல், இந்திய மொழிகளில் கேள்வி கேட்டு பதில் பெற வழி செய்கிறது. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் அந்த சேவையை பயன்படுத்தலாம்.
குவோரா சர்வதேச அளவில் பிரபலமாக இருந்தாலும் இந்திய மொழிகளில் இதே போன்ற சேவை தேவை எனும் உணர்வே வோகல் சேவை அறிமுகமாக காரணமானது. இதே புரிதலுடன் தான், கூ சேவையும் அறிமுகமானது.
இப்போது கூ சேவையின் அம்சங்களை பார்க்கலாம். டிவிட்டர் போலவே கூவும் குறும்பதிவு சேவை தான் என்பதால், டிவிட்டரில் உள்ள பெரும்பாலான அம்சங்களை கொண்டிருக்கிறது. எனினும், அதன் தோற்றமும், இடைமுகமும் மாறுபட்டிருப்பதை உணரலாம்.
கூ சேவையில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம். செயலி வடிவிலும், இணையதள வடிவிலும் பயன்படுத்தலாம். குறும்பதிவுகளுக்கான டைம்லைன் தவிர, வீடியோ, கிரிக்கெட், கருத்துக்கணிப்புகள், ஆகிய அம்சங்களையும் முகப்பு பக்கத்தில் காணலாம். டிவிட்டர் போலவே குறும்பதிவுகளை வெளியிடுவதோடு, பயனாளிகளை பின் தொடரலாம். தேடல் வசதியும் இருக்கிறது. பிரபலமான ஹாஷ்டேகளையும் பார்க்கலாம்.
கூவில் மற்றொரு சிறப்பம்சம், அதன் பயனாளிகளில் பிரபலங்களையும், நட்சத்திரங்களையும் முகப்பு பக்கத்திலேயே பார்க்கலாம்.
டிவிட்டர் வளர்ச்சிக்கு நட்சத்திர பயனாளிகள் முக்கிய பங்கு வகித்தனர் என்பதை இங்கு நினைவில் கொள்வது நல்லது. துவக்க நிலையில், டிவிட்டர் பிரபலங்களையும், நட்சத்திரங்களையும் தேடிப்போய் தனது சேவையில் இணையுமாறு கேட்டுக்கொண்டதாக அறிய முடிகிறது. பிரபலங்கள் டிவிட்டரில் இணைந்த நிலையில் அவர்கள் ரசிகர்களும் டிவிட்டரை தேடி வந்தனர்.
கூ அறிமுகமாகும் போதே இந்திய பிரபலங்களை நட்சத்திர பயனாளிகளாக கொண்டு அறிமுகமானது, இந்திய கேப்டன் கோஹ்லியில் துவங்கி, சத்குரு, மம்தா பானர்ஜி, நிதின் கட்காரி என பல பிரபலங்களை கூவில் பார்க்கலாம். சர்வதேச பிரபலங்களும் உண்டு. புதிய இணையதளங்கள் மற்றும் செயலிகளை கண்டறிய உதவும் சமூக ஊடக சேவையான பிராடக்ட் ஹண்ட் நிறுவனர் ரயான் ஹோவரும் கூ பயனாளியாக இருக்கிறார்.
ஆங்கிலம் தெரிந்தவர்கள் டிவிட்டரை பயன்படுத்தட்டும், மற்றபடி இந்திய மொழிகள் மட்டுமே அறிந்தவர்களுக்காக கூ இருக்கிறது எனும் நம்பிக்கையுடனே இந்த சேவை அறிமுகமானது. கூ அறிமுகமான நிலையில் சீன செயலிகள் பல இந்தியாவில் தடை செய்யப்பட்டதால் இந்திய சேவையாக கூ கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு தற்சார்பு இந்தியா ஸ்டார்ட் அப் போட்டியிலும் வெற்றி பெற்றது. இப்போது டிவிட்டர் சர்ச்சைக்கு நடுவே சர்வதேச அளவில் கூ கவனத்தை ஈர்த்துள்ளது.
கூ சேவையை பயன்படுத்த: https://www.kooapp.com/feed
தமிழ் இந்துவில் எழுதி வரும் சமூக ஊடக வானவில் பகுதியில் எழுதியது.