இரண்டு அங்குல திரையில் நிகழ்ந்த இணைய அற்புதம்

உலகின் முதல் இணைய செல்போன் எது? எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல, இணையம் முன்னேறி வந்துள்ள பாதையை சரியாக புரிந்து கொள்ள உதவும் கேள்வியும் கூட. ஏனெனில், இணையமும், செல்போனும் இணைந்த காலம், இணைய வரலாற்றின் முக்கிய மைல்கற்களில் ஒன்றாக அமைகிறது.

இணைய செல்போன் எனும் போது, முதல் முதலில், இணைய வசதி கொண்ட போன் என புரிந்து கொள்ளலாம். பலரும், இந்த பதிவை செல்போன் திரையிலேயே படிக்க கூடிய அளவுக்கு, ஸ்மார்ட்போனும், இணைய வசதியும் இரண்டற கலந்து விட்டாலும், செல்போனில் இணையத்தை அணுகுவது என்பது ஒரு காலத்தில் நினைத்து பார்க்க முடியாத பெரும் பாய்ச்சலாகவே இருந்தது.

அந்த வகையில் பார்த்தால், 1996 ல் நோக்கியா அறிமுகம் செய்த நோக்கியா 9000 கம்யூனிகேட்டர் (Nokia 9000 Communicator) போனே இணைய திறன் கொண்ட முதல் போனாக கருதப்படுகிறது. இதன் திறன் சொற்பம் மற்றும் கட்டணம் மிக மிக அதிகம் என்பதை எல்லாம் கடந்து, இணையத்தை உள்ளங்கையில் கொண்டு வந்த போனாக அமைகிறது.

லேப்டாப் பாணியிலான கீபோடு, அகண்ட திரை வசதி ஆகிய அம்சங்கள் கொண்ட முதல் தலைமுறை கம்யூனிகேட்டர் போன்கள் தான், இன்றைய ஸ்மார்ட்போன்களுக்கு முன்னோடி எனலாம்.

இந்த போன் அறிமுகமான அதே ஆண்டில், ஏடி&டி நிறுவனம் பாக்கெட்நெட்போன் எனும் போனை அறிமுகம் செய்வதாக உத்தேசித்திருந்தது. சந்தைக்கு வரமால் முன்னோட்ட வடிவிலேயே நின்று போனாலும், இந்த பாக்கெட்நெட் போன் தான், உலகிலேயே இணைய வசதி கொண்ட முதல் போனாக கருதப்பட வேண்டும்.

ஏடி&டி நிறுவனம் அன்வயர்டு பிளானட் (Unwired Planet ) எனும் நிறுவனத்துடன் இணைந்து இந்த போனை உருவாக்கியது. அன்வய்ர்டு தான் செல்போன்களுக்கான முதல் பிரவுசரை உருவாக்கிய நிறுவனம். செல்போன் பிரவுசர் எனும் போது, தற்போதைய உள்ளங்கை பரப்பிலான தொடுதிரைக்கு மாறாக, உள்ளங்கையின் மைய பகுதியில் அடங்கிவிடக்கூடிய அந்த கால செல்போன்களின் இரண்டு அங்குல திரையை நினைத்துப்பார்க்கவும்.

இத்தகைய சின்னஞ்சிறு செல்போன் திரையில், இணைய பக்கங்களை அணுக வழி செய்யும் வகையில் அன்வயர்டு உருவாக்கிய தொழில்நுட்பமே பின்னாணில் வேப் (Wireless Application Protocol – (WAP) என கொள்ளப்படுகிறது.

செல்போன் திரைக்குள் தகவல்கள் தெரியும் வகையில் இணைய பக்கங்களை உருவி மாற்றை அமைத்து சுருக்கித்தரும் நிரல் மொழியை இந்நிறுவனம் உருவாக்கியது.

இந்த போன்கள் பெரிய அளவில் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால் இணையத்தை செல்போனுக்குள் கொண்டு வரும் சாத்தியத்தை உணர்த்தியதற்காக கொண்டாடப்பட வேண்டியதாகின்றன.

இதே போல உலகின் முதல் ஸ்மார்ட் போன் பற்றி அறிய இந்த பதிவை காணவும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *