மிக நீளமான பெயர் கொண்ட இணையதளங்களுக்கு என்று சின்னதாக ஒரு பட்டியல் போடலாம் என நினைக்கிறேன். இந்த பட்டியலில் முதலில் வரக்கூடிய இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இன்னொரு தளம் பற்றிய அறிமுகம் இதோ!
இணையதளங்களுக்கான பெயரை தீர்மானிக்கும் போது, அவை சுருக்கமாக அழகாக இருக்க வேண்டும் என்பது பொன் விதிகளில் ஒன்றாக வலியுறுத்தப்படுவதால், நீளமான பெயர் கொண்ட தளங்கள் என்பதே ஒருவித முரண் தான். ஆனால், பெயர் காரணத்தை நியாயப்படுத்தும் வகையில் தளத்தின் உள்ளடக்கம் அமையும் என்றால், நீளமான பெயரே ஒரு பலமாக மாறிவிடும்.
இதற்கு உதாரணமாக சொல்லக்கூடிய மேலும் சில தளங்களின் பட்டியலை தேடிய போது, போர்டுபாண்டா தளத்தில், எதுகை மோனை தளங்கள் பற்றிய பட்டியல் கண்ணில் பட்டது.
அதாவது, வேண்டும் என்றே வில்லங்கமான பொருள் தரக்கூடிய வகையில் பெயர் கொண்ட இணையதளங்கள். ஆனால், கொஞ்சம் உற்றுப்பார்த்தால், அந்த பெயர்களுக்கு பின்னே வேறு ஒரு அர்த்தம் இருக்கும். உதாரணமாக, ஆசிரியர்களை பின் தொடருங்கள் என பொருள் வரும் டீச்சர்ஸ்டாகிங் (Teacherstalking.org ) தளத்தை சொல்லலாம். ஆனால், உண்மையில் ஆசிரியர்கள் பேசுவது எனும் பொருளில் இந்த தளத்தின் பெயர் இருக்கிறது.
எப்படி எல்லாம் பெயர் வைக்கின்றனர் என வியக்க வைக்கும் இந்த பட்டியல் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. மென்மையான மனது உள்ளவர்கள் அதிருப்தி கொள்ளலாம்.
நிற்க, நீளமான பெயர் கொண்ட சுவாரஸ்யமான இன்னொரு இணையதளம் இது: https://findtheinvisiblecow.com/