ஐலவுஞ் (https://www.ilounge.com/ ) இணையதளத்தை ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கான இணையதளம் என்று சொல்வது ஒற்றை வரியில் அறிமுகம் செய்வது ஒருவிதத்தில் சரியாக இருந்தாலும், இன்னொரு விதமாக பார்த்தால், இத்தகைய சாதாரண அறிமுகம் அந்த தளத்திற்கு இழைக்கும் சின்ன அநீதி என்றும் தோன்றுகிறது. ஏனெனில், ஐலவுஞ் தனி இணையதளம் அல்ல, உண்மையில் அது ஆப்பிள் அபிமானிகளுக்கான இணையதளங்களில் ஒன்று.
ஆம் ஆப்பிள் நிறுவனத்திற்கு என்று இணையத்தில் தனியே சின்னஞ்சிறு உலகம் இருக்கிறது. அதில் ஆப்பிள் சார்ந்த துணை தளங்கள் அநேகம் இருக்கின்றன. அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள், புதிய அறிமுகங்கள், புதிய நுட்பங்கள் உள்ளிட்டவை தொடர்பான செய்திகளை அளிக்கும் இணையதளங்கள்.
ஆப்பிள் சார்ந்த இணையதளங்களில் ஒன்றான ’கல்ட் ஆப் மேக்’ ( ) தளத்தின் பெயர் ஒன்றே ஆப்பிள் இணைய உலகை உணர்த்த போதுமானது என நினைக்கிறேன். ஆப்பிள் அபிமானிகளுக்கு மேக் மட்டும் அல்ல ஆப்பிள் சார்ந்த எதுவும் கலாச்சாரம் தான். மேக் என்பது ஆப்பிளின் காவிய் கம்ப்யூட்டரான மேகிண்டாஷ் வரிசையை குறிக்கிறது.
மேக் ஆப்சர்வர், மேக் ரூமர்ஸ் என ஆப்பிள் சார்ந்த இணையதளங்கள் இன்னும் பல இருக்கின்றன. ஆப்பிள் சார்ந்த செய்திகளை முன்னதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த தளங்கள் தான் சிறந்த வழி. அதோடு, ஆப்பிள் அபிமானிகளுடன் சங்கமிக்க வேண்டும் எனில், ஆப்பிள் அபிமானியாக உணர வேண்டும் எனில் இந்த தளங்களுக்கு செல்வதை கபேவுக்கு செல்வது போல பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நிற்க இந்த வரிசையில் தான் ஐலஞ்ச் வருகிறது. ஐலவுஞ்ச், ஐபாடு, ஐபேடு, ஐபோன், மேக் கம்பயூட்டர் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்கள் தொடர்பான செய்திகளை அளிக்கிறது. ஆப்பிளின் அண்மை அறிமுகங்களில் துவங்கி எதிர்வர இருக்கும் அறிமுகங்கள் தொடர்பான கணிப்புகள் வரை சகலவிதமான ஆப்பிள் சாதனங்கள் செய்திகளையும் இந்த தளத்தில் அறியலாம். சாதனங்கள் தொடர்பான விமர்சன பகுதி தவிர, ஆப்பிள் அபிமானிகளுக்கான துடிப்பான இணைய விவாத குழு பகுதியும் இருக்கிறது.
இந்த தளத்தில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. இசை உலகை புறட்டிப்போட்ட ஐபாடு எம்பி3 பிளேயரை ஆப்பிள் அறிமுகம் செய்த உடன் 2001 ல் ’ஐபாடு லவுஞ்ச்’ எனும் பெயரில் அறிமுகமான இந்த தளம், 2004 ல் டைம் பத்திரிகையின் 50 சிறந்த இணையதளங்களில் ஒன்றாக தேர்வானது.
ஐபாடு சார்ந்து உருவான இந்த தளம் பின்னர் ஆப்பிளின் மற்ற சாதனங்களையும் கவனத்தில் கொண்டதால் ’ஐலவுஞ்ச்’ என பெயரை மாற்றிக்கொண்டது. இந்த தளத்தை டென்னிஸ் லாயிட் (Dennis Lloyd ) என்பவர் துவக்கி நடத்தி வந்திருக்கிறார். பல ஆண்டுகள் அவர் தான் இந்த தளத்தை நடத்தி வந்திருக்கிறார். பின்னர் 2019 ல், ஹைதர் அலி கான் (Haider Ali Khan ) என்பவர் இந்த தளத்தை வாங்கி நடத்தி வருகிறார்.
இந்த தகவல்கள் எல்லாம் தளத்தின் அறிமுகம் பகுதியில் சுருக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் யாரோ, எதற்காகவோ துவங்கிய இணையதளம், வேறு ஒருவரால் வாங்கப்பட்டு நடத்தப்படுவது இயல்பானது தான். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான தளங்களில், இந்த விவரங்கள் எல்லாம் இருக்காது. இணையதள அறிமுக பகுதியில் தற்போதைய உரிமையாளரின் கூற்று மட்டுமே இருக்கும். புதிய பயனாளிகள் தளத்தின் பழைய வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாது என்பதோடு, பழைய தளத்தின் தன்மையை அறிந்தவர்கள் வரலாற்று நோக்கில் புதிய தளத்தை அணுகும் போது, இந்த தகவல் இன்மை ஏமாற்றத்தை அளிக்கலாம்.
இதற்கு மாறாக, ஐலவுஞ்ச் தளத்தில் அதன் வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டிருப்பதை இணைய நாகரீகம் அல்லது இணைய நேர்மை என்று பாராட்ட வேண்டும்.
பல்வேறு நோக்கில் பழைய தளங்கள் பற்றியும் விரிவாக எழுதி வருபவன் என்ற முறையில் இந்த நேர்மையை வெகுவாக வரவேற்கிறேன்.