காலநிலை மாற்றத்திற்காக வாதாடிய டிவிட்டர் சாட்பாட்…

நிஜல் லெக் (Nigel Leck ) இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த லெக்கே யார் என்று தெரியாது, இவர் என்ன செய்கிறார் என்பது பற்றி எங்களுக்கு என்ன கவலை என நீங்கள் நினைக்கலாம். லெக்கை அப்படி எல்லாம் அலட்சியம் செய்துவிட முடியாது. ஏனெனில் மென்பொருள் துறையைச் சேர்ந்த லெக், டிவிட்டரில் வாதாடுவதற்காக என்றே ஒரு மென்பொருளை ( பாட்- bot) உருவாக்கியவர்.

அவர் உருவாக்கிய பாட் ஒன்றும் வம்பு வழக்கு ரகத்தைச் சேர்ந்தது அல்ல. காலநிலை மாற்றம் பிரச்சனை தொடர்பாக அறிவியல் நோக்கில் அறப்போர் நிகழ்த்தக்கூடிய கொள்கை நோக்கிலான பாட்!

காலநிலை மாற்றம் எத்தனை பெரிய பிரச்சனை என்று பதைப்பதைப்பவர்கள் எண்ணற்றவர்கள் இருக்கின்றனர். இவர்களில் பலர் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைக்க தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர். பிரச்சனையின் தீவிரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பலர் முயன்று வருகின்றனர்.

இன்னொரு பக்கத்தில் காலநிலை மறுப்பாளர்கள் எனும் எதிர் தரப்பினரும் இருக்கின்றனர். காலநிலை மாற்றம் எனும் ஒரு பிரச்சனையே இல்லை, இது வல்லுனர்கள் உருவாக்கிய கட்டுக்கதை என தீவிரமாக நம்பிக்கொண்டிருக்கும் மறுப்பாளர்கள் இவர்கள். உலகம் உருண்டை அல்ல, தட்டை தான் என இன்னமும் தீவிரமாக நம்பி கொண்டிருக்கும் தட்டை பூமி சதி கோட்பாட்டாளர்கள் போல இவர்களும் ஒரு சதி கோட்பாட்டை நம்பிக்கொண்டிருப்பவர்கள்.

பிரச்சனை என்னவென்றால், இந்த மறுப்பாளர்கள் காலநிலை மாற்றம் பிரச்சனை மழுங்கடிக்கும் வகையிலான கருத்துக்களை பரப்பி வருவதோடு, அர்த்தமுள்ள விவாதம் நடைபெறும் இடங்களில் ஆஜராகி அபத்தமான முறையில் கருத்துகளை முன்வைக்கும் வழக்கமும் கொண்டுள்ளனர்.

டிவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில், காலநிலை மாற்றம் தொடர்பான விவாதம் நடைபெறும் போது, மறுப்பாளர்கள் எட்டிப்பார்த்து எதிர்கருத்துகளை தீவிரமாக முன்வைப்பதும் உண்டு. இவர்கள் தெரிவிக்கும் தப்பும் தவறுமான கருத்துகளுக்கு பொறுப்பாக பதில் அளித்தால், முன்னைவிட தீவிரமாக மறுப்பில் ஈடுபடுவதோடு தங்கள் கருத்துகளுக்கு ஆதரவாக பொய்யான, பிழையான கூற்றுகளை அளித்து வெறுப்பேற்றுவார்கள்.

கால நிலை மாற்றம் பற்றி விஷயம் அறிந்தவர்களுக்கு இத்தகைய மறுப்பாளர்களோடு மல்லு கட்டுவது சோதனையான அனுபவம் தான். அதிலும் குறிப்பாக அறைகுறையாக இவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கான முழுமையான அறிவியல் விளக்கம் ஏற்கனவே தெளிவாக இருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் இவர்களோடு அதே கருத்துகளை மறுத்து பேச நேரும் போது, போதுமட சாமி என களைத்துப்போக,வைக்கலாம்.

மென்பொருளாளரான நிஜல் லெக்கும், இப்படி காலநிலை மாற்றம் எதிர்பாளர்களின் மூடத்தனமான இணைய வாதங்களால் வெறுத்துப்போனவர் தான். ஆனால் அப்படியே ஒதுங்கி கொள்ளாமல், மறுப்பாளர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக தொழில்நுட்பம் மூலம் ஒரு எளிய வழியை கண்டுபிடித்தார். அது தான் காலநிலை மாற்றத்தை தானாக விவாதிக்கும் பாட்.

AI_AGW எனும் பெயரில் டிவிட்டர் தளத்தில் செயல்படகூடியதாக இந்த பாட்டை லெக் உருவாக்கினர். இந்த பாட்டிற்கு என இதே பெயரில் டிவிட்டர் கணக்கையும் அமைத்தார்.

இந்த தானியங்கி மென்பொருளுக்கு காலநிலை மாற்றம் தொடர்பான அறிவியல் உண்மை பாடங்களில் பயிற்சி கொடுத்து தயார் செய்திருந்தார். டிவிட்டர் பதிவுகளில், காலநிலை மாற்றம் தொடர்பான பதிவுகள் வெளியாகும் போது, மறுப்பாளர்களின் கருத்திற்கு இந்த பாட் தகுந்த பதிலடி கொடுத்தது. மறுப்பாளர்கள் முன்வைக்கும் தவறான வாதங்களை தகர்த்தெறியும் வகையில் அறிவியல் உண்மைகளை தகுந்த்த ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி இந்த பாட் சண்டை போட்டது. ஆக, மறுப்பாளர்கள் தான் களைத்துப்போக வேண்டியிருந்தது.

லெக் 2008 ம் ஆண்டில் இந்த காலநிலை பாட்டை உருவாக்கினார். 2010 ல் இந்த பாட் இணைய உலகில் பரவலான கவனத்தை ஈர்த்து பரபரப்பாக பேசப்பட்டது.

இப்போது ஏஐ திறன் கொண்ட ஏஐ சாட்பாட் பரபரப்பாக பேசப்படும் நிலையில், இந்த காலநிலை பாட் எப்படி இருக்கிறது என பார்த்தால், அதன் கணக்கு முடக்கப்பட்டிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே தான், சாட்பாட்களின் பயன்பாட்டை உணர்ந்து, இந்த நவீன தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் காலநிலை பாட்டை உருவாக்கிய லெக், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பார்க்கத் தோன்றியது. கூகுளில் தேடிய போது, அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. இன்னும் மெனக்கெட்டு தேடிய போது, லெக் ஆஸ்திரேலிய மென்பொருள் நிறுவனம் ஒன்றில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

அதோடு, காலநிலை பாட் முடக்கப்பட்டது குறித்து, 2019 ல் அவர் எலக்ட்ரானிக் புக் ரெவ்யூ தளத்திற்கு அளித்த விரிவான பேட்டியையும் பார்க்க முடிந்தது. காலநிலை மாற்றம் தொடர்பான பொய் தகவல்கள் பரபரப்பபடுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல் நம்மால் முடிந்த அளவு பதிலடி கொடுக்கலாம் என தீர்மானித்து இந்த பாட்டை உருவாக்கியதாக அவர் கூறியிருக்கிறார்.

இருந்தாலும், காலநிலை மாற்ற பாட்டின் கதை பாதியில் நின்றது வருத்தம் தான். அதனால் என்ன இதே போன்ற கொள்கை பாட்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து பார்க்கலாம்.

சாட்ஜிபிடியை முன் வைத்து சாட்பாட்கள் வரலாற்றை விவரிக்கும் எலிசா முதல் சாட்ஜிபிடி வரை தொடர்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *