மைக்கேல் வான் பாப்பலை (Michael van Poppel ) உங்களுக்குத் தெரியுமா? பாப்பல் டிவிட்டரால் புகழ் பெற்றவர்களில் ஒருவர் என்பது மட்டும் அல்ல, டிவிட்டர் வளர்ச்சிக்கு காரணமானவர்களிலும் ஒருவர்.
பாப்பலின் டிவிட்டர் வெற்றிக்கதை இப்போது மறக்கப்பட்டுவிட்டாலும், டிவிட்டர் அபிமானிகளும், நவீன இதழியல் ஆர்வலர்களும் அவரை நினைவில் வைத்திருப்பது அவசியம். ஏனெனில், டிவிட்டர் ஒரு பயனுள்ள சேவை என்று உணர்த்தியதில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, டிவிட்டர் நீலப்பறவை செய்திகளை தாங்கிச்செல்லும் வாகனமாக இருக்கும் என்பதை உணர்த்தியதை இன்னும் முக்கியமாக கருதலாம்.
பாப்பலின் சாதனையை புரிந்து கொள்ள வேண்டும் எனில், டிவிட்டரின் ஆரம்ப கால வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும். சமூக ஊடகம் என்பதற்கான உதாரணமாக மட்டும் அல்லாமல், அதற்கான வரையறையாக சொல்லப்படும் அளவுக்கு டிவிட்டர் முன்னணி சமூக ஊடக சேவைகளில் ஒன்றாக வளர்ந்திருந்தாலும் ( இப்போது எலான் மஸ்கின் கைகளில் சிக்கித்தவிப்பது வேறு கதை), 2006 ல் அறிமுகமான போது டிவிட்டர் எவ்விதமான சேவை என்பதில் பலருக்கும் தெளிவில்லாமல் இருந்தது.
டிவிட்டர் ஒரு குழப்பமான சேவையாக அறிமுகமானதே இதற்கு காரணம். டிவிட்டரின் வீச்சும், பயன்பாடும் இணையம் அறிந்ததாக ஆகிவிட்ட நிலையில், டிவிட்டரை இவ்வாறு சொல்வது திகைப்பை ஏற்படுத்தலாம். ஆனால் டிவிட்டர் அறிமுகமான போது, அதை எதற்காக, எப்படி பயன்படுத்த வேண்டும் எனத்தெரியாத குழப்பம் பலருக்கு இருந்ததே நிதர்சனம்.
குறுஞ்செய்தியை அடிப்படையாக கொண்ட சேவையாக அறிமுகமான டிவிட்டர், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? (“What Are You Doing?” ) எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. 140 எழுத்துகளுக்குள் பதிவுகளை வெளியிட வேண்டும் எனும் வரம்பையும் கொண்டிருந்தது.
இத்தனை குறைவான எழுத்துகளுக்குள் எந்த கருத்தை திறம்பட பகிர்ந்து கொள்ள முடியும் என்ற கேள்வியோடு, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை பகிர்ந்து கொள்வதற்கு என்ன தேவை இருக்கிறது என்ற சந்தேகமும் இருந்தது. டிவிட்டரின் குறும்பதிவு சேவை அப்போது புதுமையானதாக இருந்ததோடு, அதன் பயன்பாடு புரியாமலும் அமைந்திருந்தது.
இதனிடையே, ’காலை உணவுக்கு என்ன சாப்பிட்டோம்’ என்பதை பயனாளிகள் பகிர்ந்து கொள்ள உதவிய சேவையாக டிவிட்டரை வல்லுனர்கள் சிலரும் எள்ளி நகையாடினர்.
ஆம், ’என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ எனும் கேள்விக்கு காலை உணவு உள்ளிட்ட தகவல்களை தானே பகிர்ந்து கொள்ள முடியும், அதனால் என்ன பயன் எனும் விமர்சனம் டிவிட்டருக்கு எதிராக வைக்கப்பட்டது.
இந்த ஆரம்ப தடுமாற்றத்தில் இருந்து டிவிட்டர் மெல்ல விடுபட்டாலும், அதன் பயன்பாடு தொடர்பான கேள்விகள் நீடித்தது.
இந்நிலையில், 2007 ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற சவுத் பை சவுத்வெஸ்ட் இண்ட்ரியாக்டிவ் எனும் தொழில்நுட்ப மாநாட்டின் போது, பங்கேற்பாளர்கள் மாநாடு தகவல்கலை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதில் டிவிட்டர் கைகொடுப்பதை உணர்ந்தனர். டிவிட்டர் பயன்பாட்டிற்கான முதல் திருப்பு முனை நிகழ்வாக இது அமைந்தது.
தொடர்ந்து பூகம்பம் ஏற்பட்ட தகவலை பகிர்ந்து கொள்ளும் மேடையாக டிவிட்டர் அமையும் என்பதை உணர்ந்த்தும் நிகழ்வுகளும் அரங்கேறின.
இந்த பின்னணியில் தான், 2007 ம் ஆண்டின் பிற்பகுதியில் நெதர்லாந்து இளைஞரான பாப்பல், டிவிட்டரில் கணக்கு துவக்கினார். பாப்பல் தனது சொந்த பெயரில் இந்த கணக்கை துவக்காமல், உடனடி செய்திகளை குறிக்கும் வகையில் ’பிரேக்கிங் நியூஸ் ஆன்’ (@BreakingNewsOn) எனும் பெயரில் தனது டிவிட்டர் பக்கத்தை அமைத்திருந்தார்.
அப்போது பாப்பலுக்கு 17 வயது தான். பெரிய திட்டம் இல்லாமல், கிட்டத்தட்ட விளையாடு உணர்வோடு தான், டிவிட்டர் கணக்கை துவக்கியிருந்தாலும் குறும்பதிவு சேவையாக டிவிட்டரின் தன்மையை அவர் சரியாக புரிந்து கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும். எப்படி எனில், சொந்தக்கத்தை, சோக்கத்தை பகிர்ந்து கொள்ள எல்லாம் அவர் டிவிட்டர் கணக்கை துவக்கவில்லை. மாறாக, முக்கிய செய்திகள் வெளியாகும் போது அவற்றை உடனுக்குடன் டிவிட்டர் குறும்பதிவாக பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடனே டிவிட்டருக்கு வந்திருந்தார்.
டிவிட்டரில் உடனடி செய்திகள் வெளியீடு என்பது நிச்சயம் அந்த காலத்தில் புதுமையான முயற்சி தான்! காலமும் அவருக்கு கை கொடுக்கும் வகையில், அமெரிக்கா வேடையாடிக்கொண்டிருந்த ஓசமா பின்லேடனின் வீடியோ பேச்சு அவருக்கு முதலில் கிடைத்தது. இந்த வீடியோவை முன்னணி செய்தி நிறுவனமான ’ராய்டர்ஸ்’ விலை கொடுத்து வாங்கி கொண்ட போது, பாப்பலுக்கு பொழுதுபோக்காக தான் வழங்கிவரும் செய்தி சேவை உண்மையில் பெரியதாக இருக்கலாம் எனத்தோன்றியது.
அந்த நம்பிக்கையில், பாப்பல் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்திகளை முந்திதரத்துவங்கினார். செய்தியாளர்களை சிலரை நியமித்துக்கொண்டவர், உடனடி செய்திகளை எப்படியோ மோப்பம் பிடித்து, முன்னணி ஊடகங்களை எல்லாம் முந்திக்கொண்டு முதலில் அளித்தார். டிவிட்டரின் குறும்பதிவு வடிவம் உடனடி செய்தி பகிர்வுக்கு ஏற்றதாக இருக்கவே, பாப்பலின் டிவிட்டர் பக்கம், வாசகர்கள், பயனாளிகள் மத்தியில் பிரபலமானது.
குறுகிய காலத்தில், பாப்பலின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் மேலான பயனாளிகள் பின் தொடரத்துவங்கியிருந்தனர். இந்த வாசகர் பரப்பு பாப்பலை கவனிக்க வைத்து, இணைய உலகில் மட்டும் அல்ல,செய்தி உலகிலும் செல்வாக்கு பெற வைத்தது.
உடனடி செய்திகளை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், ஊடகங்களின் தளங்களுக்கு செல்வதை விட, பாப்பலின் டிவிட்டர் கணக்கை பின் தொடரலாம் என நினைத்தனர்.
சமூக வலைப்பின்னல் சேவையாக டிவிட்டர் பலவிதங்களில் பிரபலமாகத்துவங்கியிருந்த நிலையில், உடனடி செய்திகளுக்கான பொருத்தமான சேவையாக அறியப்படும் நிலையும் உண்டானது. இதில் பாப்பலின் டிவிட்டர் பக்கத்திற்கும் முக்கிய பங்கு இருந்தது.
நிற்க, 2009 ம் ஆண்டு எம்.எஸ்.என்.பி.சி நிறுவனம், பாப்பலின் டிவிட்டர் கணக்கை விலைக்கு வாங்கியது. உடனடி செய்தி பகிர்வுக்கான பக்கமாக பாப்பலின் டிவிட்டர் கணக்கு அறியப்பட்டதால் அதிகரிக்க கூடிய அதன் எதிர்கால செல்வாக்கை மனதில் கொண்டு இந்த கையகப்படுத்தல் நிகழ்ந்தது.
2009 ம் ஆண்டு இந்த நிகழ்வு பெரிதாக பேசப்பட்டு டிவிட்டரின் வெற்றிக்கதைகளில் ஒன்றாக அமைந்தது.
பாப்பல் பிரேக்கிங் நியூஸ் டிவிட்டர் கணக்கை விற்றாரேத்தவிர, இதனிடையே பிரேக்கிங் நியூஸ் ஆன்லைன் எனும் செய்தி தளத்தை துவக்கியிருந்தார். செய்தி நிறுவனம் போல செயல்பட இருந்த அதன் முதல் வாடிக்கையாளர்களில் ஒருவராக எம்.எஸ்.என்.பி.சி இருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
இதே போல பல திசைகளில், பல துறைகளில் டிவிட்டர் பயன்பாட்டில் மைல்கல் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறியதால், முன்னணி சமூக ஊடக சேவையாக பிரபலமானது.
2016 ல், பிரேக்கிங் நியூஸ் டிவிட்டர் கணக்கை மூடுவதாக எம்.எஸ்.என்.பி.சி அறிவிக்க நேர்ந்தாலும், அதற்கு முன் அந்த கணக்கிற்கு என்றே தனி செய்து பிரிவு இயங்கியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
–