எல்லா இணையதளங்களும் ஒன்று போல உருவாக்கப்பட்டவை அல்ல. ஒரு சில இணையதளங்கள் உள்ளடக்கத்தில் உச்சம் தொட்டிருக்கும். இன்னும் சில தளங்கள் வடிவமைப்பில் முன்னுதாரணங்களாக இருக்கும். இவற்றுக்கு நடுவே அலங்கார அம்சங்கள் எதுவும் இல்லாமல் நோக்கத்தால் மட்டுமே உயர்ந்து நிற்கும் தளங்களும் இருக்கின்றன. உள்ளடக்கம், நோக்கம், வடிவமைப்பு என எல்லா அம்சங்களும் கச்சிதமாக இருக்கும் தளங்களும் இருக்கின்றன.
இன்னும் சில இணையதளங்கள், குறிப்பிட்ட துறை அல்லது பிரிவில் மட்டும் சிறந்துவிளங்குபவையாக இருக்கலாம். இவைத்தவிர இணைய பதர்கள் என அலட்சியம் செய்யக்கூடிய தளங்கள் எண்ணற்றவை இருக்கின்றன.
இணையதளங்களின் ஒற்றை வரி அல்லது நான்கு வரி அறிமுகங்களை கடந்து, அவற்றை விரிவாக அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே எனது அணுகுமுறை. அந்த வகையில், நல்லது, பயனுள்ளது என கருதக்கூடிய தளங்களை எல்லாம் விட ஒரு படி மேலே நிற்கும் இணைய வரலாற்றின் மைல்கல் தளங்களை மட்டும் தனியே தேர்வு செய்து எழுத வேண்டும் எனும் எண்ணம் இருக்கிறது.
இதற்கான சில ஆண்டுகளுக்கு முன் குறித்து வைத்த இணையத்த்தின் ஆகிச்சிறந்த 25 தளங்களின் பட்டியலை இங்கே தருகிறேன்.
இது ஒரு உத்தேச பட்டியல் தான். இந்த தளங்களில் சிலவற்றை இப்போது வெவ்வேறு காரணங்களுக்காக விலக்கவும், நீக்கம் தோன்றுகிறது. வேறு பல முன்னோடி தளங்களையும் பரிசீலிக்க வேண்டும்.
இந்த பட்டியலை தயார் செய்து இந்த தளங்கள் பற்றி தனித்தொடராக எழுத திட்டம். இதற்கு உங்கள் உதவி தேவை.
இந்த உத்தேச பட்டியல் தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிரவும். இதில் உள்ள தளங்களில் தேவையற்றவை என கருதுவதை அல்லது சேர்க்க வேண்டும் என கருதும் தளங்களை தெரிவிக்கவும்.
இணையதளங்களின் பட்டியல். தளங்களின் சுருக்கமான அறிமுகத்துடன்.
- பிராஜெக்ட் குடென்பர்க் (https://www.gutenberg.org/) – எனது ஆகச்சிறந்த தளங்களின் எல்லா பட்டியலும் இந்த தளத்தில் இருந்து தான் துவங்கும். மின்னூல்களின் இருப்பிடம் மட்டும் அல்ல அதன் பூர்வகுடியும் இந்த தளம் தான். இணையத்தின் திறந்த மற்றும் கூட்டு முயற்சியின் அடையாளமும் கூட.
- இணைய காப்பகம் (https://archive.org/) – இணையத்தின் ஆவண காப்பகம். பழைய இணையதளங்களையும், பக்கங்களையும் சேமித்து வைக்கும் வரலாற்று பொக்கிஷம். நான் மனம் விரும்பி நன்கொடை அளிக்க நினைக்கும் தளங்களில் முதன்மையானது. இணையத்த்தின் முதன்மையான தளம்.
- வாட் ஈஸ் (https://www.techtarget.com/whatis/ ) – தொழில்நுட்ப அகராதி.
- வெபோபீடியா (https://www.webopedia.com/)- விக்கிபீடியா த்தவிர இணையத்தில் முக்கியமாக அமையும் இன்னொரு தகவல் களஞ்சியம். துடிப்பான தொழில்நுட்ப அகராதி எனலாம். மிகவும் விரிவான விளக்கம் தரும், தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் தளம்.
- ஹவ் ஸ்டப் வொர்க்ஸ் (https://www.howstuffworks.com/ ). – இணையத்தின் ஆதி தளங்களில் ஒன்று. செயமுறை விளக்கம் தரும் தளம்.
- பயோகிராபி. (https://www.biography.com/ )- சுயசரிதைகளுக்கான இணையதளம். வர்த்தக நோக்கிலானது மற்றும், அதன் நோக்கம் , உருவாக்கம் தொடர்பாக தகவல்கள் இல்லாததால் இந்த தளத்தை நீக்க எண்ணம்.
- ஸ்னோப்ஸ்-( https://www.snopes.com/)- இணைய கட்டுக்கதைகளுக்கு விளக்கம் அளித்து தெளிவு அளிக்கும் இணையதளம். பொய்ச்செய்தி யுகத்தில் கவனிக்க வேண்டிய தளம்.
- அபவுட்.காம் (https://www.dotdashmeredith.com/)- இந்த தளத்தின் பழைய வடிவம் நினைவிருக்கிறதா?
- அர்பன் டிக்ஷனரி- (https://www.urbandictionary.com/) நவீன இணைய அகராதி. இதில் இருந்து நீக்கி வேறு பிரிவுக்கு கொண்டு செல்ல விருப்பம்.
- விக்கிஹவ்(https://www.wikihow.com/Main-Page ) – செய்முறைகளுக்கான விக்கி. இன்னும் தீர்மானிக்கவில்லை. விக்கி தளங்களின் பட்டியலில் கொண்டு செல்லலாம்.
பட்டியல் தொடரும். உங்கள் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் வழங்குக!