சாட்ஜிபிடியின் அருமை பெருமைகள், சாதக, பாதகங்களை எல்லாம் விட்டுவிடுவோம். சாட்ஜிபிடி கல்வித்துறையில் என்ன பாதிப்பை உண்டாக்கும், ஆய்வுத்துறையை எப்படி பாதிக்கும்? என்பது போன்ற கேள்விகளையும் விட்டுவிடலாம். சாட்ஜிபிடி நம்முடைய இல்லங்களில் என்ன விதமாக பயன்படும், அவற்றின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பது போன்ற கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம்.
ஒரு இல்லத்தலைவிக்கு சாட்ஜிபிடி எப்படி பயன்படும்? என்று யோசித்துப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் பெண்கள், சமையல் குறிப்பை தேட சாட்ஜிபிடியை பயன்படுத்தலாம். ( பாலின சார்பு பார்வைக்கு மன்னிக்கவும்). பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லித்தர தங்களை தயார்படுத்திக்கொள்ள சாட்ஜிபிடியை அணுகலாம்.
இன்னும் சில வீடுகளில், பிள்ளைகளிடம் பாடம் படிக்கும் போது சாட்ஜிபிடியை பயன்படுத்தாதே, எப்போதும் சுயமாக யோசி என அறிவுரை கூறலாம்.
இன்னும் சுவாரஸ்யமான முறைகளில் எல்லாம் சாட்ஜிபிடியின் இல்ல பயன்பாடு அமையலாம். ஆனால் இவை எல்லாம் அனுமானங்கள் தான். உண்மையில், இல்லங்களில் சாட்ஜிபிடி பயன்பாடு தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தலாம்.
இத்தகைய ஆய்வு சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்களின் பயன்பாடு தொடர்பான கூடுதல் புரிதலை அளிப்பதோடு, சாட்பாட் இடைமுகம் சார்ந்த உரையாடல் குறித்தும் புதிய உள்ளொளியை அளிக்கலாம்.
இந்த எண்ணங்கள் தோன்றுவதற்கு சாட்ஜிபிடி மட்டும் காரணம் அல்ல, 1995 ல் இல்லங்களில் இணைய பயன்பாட்டின் தாக்கம் தொடர்பாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஹோம்நெட் (HomeNet Project ) ஆய்வு பற்றிய நினைவுகளும் முக்கிய காரணம்.
இந்த ஆய்வை இப்போது திரும்பி பார்க்கையில் சுவாரஸ்யமாக இருக்கிறது. 1995 இணையத்தில் முக்கியமான ஆண்டு. இதே ஆண்டில் தான் இணையம் வர்த்தகமயம் ஆனது.
இணையம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் பயன்பாடு தொடர்பாக கூடுதல் புரிதல் தேவைப்பட்டது. ஒரு பக்கம் இணையம் அடுத்த பெரிய தொழில்நுட்பம் என்ற கருத்தும் அதற்கேற்ற மிகை உரையாடல்களும், கணிப்புகளும் இருந்தாலும், இன்னொரு பக்கம் அதன் வீச்சு தொடர்பான சந்தேகங்களும், கேள்விகளும் இருந்தன. இணையம் இன்னமும் பரவலாகாத நிலையில் அதன் பயன்களும், தாக்கங்களும் வரம்புகள் கொண்டவை என்று கூறப்பட்டன.
1995 ல் இ-காமர்ஸ் தளமான அமேசான் அறிமுகமானாலும், அடுத்து வந்த சில ஆண்டுகளுக்கு இணையத்தின் மூலம் பொருட்களை வாங்குவது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்று பேசப்பட்டு வந்தது.
இந்த பின்னணியில், அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள குடும்பங்களின் இணைய பயன்பாடு தொடர்பாக நடத்தப்பட்ட ஹோம்நெட் ஆய்வு முக்கியம் பெறுகிறது. இந்த ஆய்வை மேற்கொண்ட கார்னகி மெலான் பல்கலை 93 குடும்பங்களை தேர்வு செய்து, அவற்றின் உறுப்பினர்களுக்கு கம்ப்யூட்டர், இணைய இணைப்பு போன்றவற்றை வழங்கி, அவர்கள் இணையத்தை எப்படி பயன்படுத்துகின்றனர் என ஆய்வு செய்தனர்.
அடுத்த ஆண்டு 25 குடும்பங்கள் மத்தியிலும், அதற்கு அடுத்த ஆண்டும் 151 குடும்பங்கள் மத்தியிலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் தொகுக்கப்பட்டு ஆய்வுக்கட்டுரைகளாக வெளியிட்டப்பட்டன. சராசரி இல்லங்களில் இணைய பயன்பாடு தொடர்பான புரிதலை இந்த ஆய்வு முடிவுகள் அளித்தன.
இணைய பயன்பாடு சமூக தகவல் தொடர்பை குறைக்கும் சாத்தியம் கொண்டது என்றும், அதிக இணைய பயன்பாடு தனிமை உணர்வை அளித்து, மனச்சோர்வை உண்டாக்கும் என்றும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
1998 ல் வெளியான இந்த ஆய்வு முடிவுகள் இணைய பயன்பாடு என்பது ஒரு பழக்கமாகலாம் எனும் கருத்தையும் உண்டாக்கி விவாதத்தை ஏற்படுத்தியது.
1995 இணையம் இன்று முன்னேறி வெகுதொலைவு வந்துவிட்டாலும், இணைய பயன்பாடு தொடர்பான ஆதார ஆய்வுகளில் ஒன்றாக ஹோம்நெட் அமைகிறது. ஹோம்நெட் ஆய்வுக்கட்டுரை ஒன்று, முன் காலத்தில் இல்லங்களில் தொலைபேசி பயன்பாட்டை குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் இணையத்தை புரிந்து கொள்ள வழிகாட்டியது.
இப்போது, இதே நோக்கில் சாட்ஜிபிடி பயன்பாடு தொடர்பான ஆய்வு தேவை என புரிந்திருக்கலாம்.
நிற்க, சாட்பாட்கள் பயன்பாடு தொடர்பான ஆய்வு ஆர்வத்திற்கு சாட்பாட்ரிசர்ச் (https://chatbotresearch.org/ ) இணையதளம் பயனுள்ளதாக இருக்கலாம்.
இந்த தளத்திலும் சாட்பாட் ஆய்வு முடிவுகளை காணலாம்.: https://www.nngroup.com/articles/chatbots/
ஹோநெட் பழைய ஆய்வையும் அணுகலாம். ஆனால், இதன் முகப்பு பக்கத்தைவிட இணைய காப்பக சேமிப்பு வடிவில் தான் முழுவதையும் அணுக முடிகிறது: https://web.archive.org/web/20020602043117/http://homenet.hcii.cs.cmu.edu/progress/index.html
–