அமெரிக்கரான பிலிப் டி வெல்லிஸை (PHILIP DE VELLIS) நம் நாட்டு பிரசாந்த் கிஷோருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. பிரசாந்த் கிஷோருடன் டி வெல்லிஸை ஒப்பிடுவதும் எந்த அளவு சரியானது எனத்தெரியவில்லை. ( இது சவுக்கு சங்கரை, மேட் டிரட்ஜுடன் (matt drudge – Drudge Report ) ஒப்பிடுவது சரியா எனும் கேள்விக்கு நிகரானது).
ஆனால், பிரசாந்த் கிஷோருக்கு ஒரு விதத்தில் பிலிப் டி வெல்லிஸ் முன்னோடி.
அமெரிக்காவிலும், ஏன் உலக அளவிலும் யூடியூப் உள்ளிட்ட புதிய ஊடகத்தை அரசியல் பிரச்சாரத்திற்காக விளம்பர நோக்கில் பயன்படுத்தலாம் என்பதை செயல்திறனோடு முதலில் உணர்த்தியவர்களில் டி வெல்லிஸும் ஒருவர். 2008 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ஹிலாரி கிளிண்டனின் பிரச்சார அறிவிப்புடன் ஆப்பிள் நிறுவனத்தின் புகழ் பெற்ற 1984 விளம்பரத்துடன் இணைத்து உருவாக்கிய வீடியோவுக்கு பின்னணியில் இருந்தது இவர் தான். இந்த வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி, தொலைக்காட்சி போன்ற பாரம்பரிய ஊடகங்களுக்கு நிகராக யூடியூப்பின் பிரச்சார வீச்சை உணர்த்தியதாக கருதப்படுகிறது.
டி வெல்லிஸ் பற்றி விரிவாக தனியே பார்க்கலாம். இப்போதைக்கு அவரது இணையதளத்தை மட்டும் பார்க்கலாம்.
டி வெல்லிஸின் இணையதளம் அவரை, அரசியல் சமூக ஆலோசகர் என அறிமுகம் செய்கிறது. இந்த ஒற்றை வரி அறிமுகத்தை மீறி அந்த இணையதளத்தில் எந்த உள்ளடக்கமும் இல்லை. மாறாக அவரை இமெயிலில் தொடர்பு கொள்வதற்கான விண்ணப்ப படிவமும், அதற்கான விளக்க குறிப்பும் மட்டுமே உள்ளது.
டி வெல்லிஸ் அவர் மீது ஆர்வம் கொண்டவர்களில் நன்கறியப்பட்டவர் என்ற வகையில், குறைந்த பட்ச தகவல் கொண்ட இந்த இணையதளத்தை புத்திசாலித்தனமான வடிவமைப்பு என்று கூட வர்ணிக்கலாம். கவனத்தை ஈர்ப்பது தனிநபர் தளங்களின் நோக்கங்களில் ஒன்று எனும் போது, தொடர்பு கொள்வதற்கான விண்ணப்ப படிவம் மட்டுமே கொண்ட இந்த இணையதளத்தின் வடிவமைப்பை பாராட்டவும் செய்யலாம்.
ஆனால், தோற்றத்தை மட்டும் கொண்டு ஒரு இணையதளத்தை எடைப்போட்டு விடக்கூடாது என்பதற்கு இந்த தளம் ஒரு உதாரணம். இணைய காப்பகமான வேபேக்மிஷின் தளத்தில், டி வெல்லிஸ் தளத்தின் பழைய வடிவங்களை தேடிப்பார்த்த போது, 2011 ம் ஆண்டு வாக்கில் அவரது இணையதளம்
(https://web.archive.org/web/20110208115048/http://www.phildevellis.com/ ), விரிவான சுய அறிமுகம் உள்ளிட்ட தகவல்களை கொண்டிருந்ததை அறிய முடிகிறது. எனில், அந்த தளத்தின் தற்போதைய வெறுமையான உள்ளடக்கத்தை எப்படி புரிந்து கொள்வது?
ஆக, டி வில்லிஸ் பற்றி தனியே விரிவாக பார்க்கலாம். அவர் என்ன அத்தை முக்கியமா என கேட்கலாம். சிட்டிசன் ஜர்னலிசம் என குறிப்பிடப்படும் மக்கள் இதழியல் வரலாற்றில் அவரும் தொடர்பு கொண்டிருப்பதால், கவனிக்க வேண்டியவராகிறார்.
இணைய பக்கம்: http://www.phildevellis.com/
–