இணைய உலகம் யாஹுவை மறந்திருக்கலாம். ஆனால், இன்று இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் பல இணைய சேவைகள் யாஹுவின் உருவாக்கம் என்பது மறக்க கூடாத தகவல்.
யாஹு இணையத்தின் முதல் வலைவாசல்களில் ஒன்று. அநேகமாக முதல் வலைவாசல் யாஹு தான். ( இந்த தகவலை உங்களால் கூகுளிலோ அல்லது சாட்ஜிபிடியிலோ உறுதி செய்ய முடியாது.)
இணையத்தில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அணுக கூடிய சேவை என்பதை குறிக்கும் வலைவாசலின் மற்றொரு முக்கிய அம்சம், பயனாளிகள் தங்களுக்கான தகவல்களை தனிப்பட்ட முறையில் தேர்வு செய்து கொள்ளும் வசதியாகும். அந்த வகையில், மைட்யாஹூ வசதி தான் இணைய முன்னோடி.
வலைவாசல்களின் இன்னொரு முக்கிய அம்சம், செய்தி திரட்டிகள். செய்திகளை தனியே அணுகாமல் அணுகும் வசதி. யாஹு இதை தற்செயலாக 1995 ல் அறிமுகம் செய்தது. அப்போது இணைய கையேடு சேவையாக இருந்த யாஹுவில், ஜெரி கிரேசியா எனும் பிரபல பாடகர் மரணம் அடைந்ததை அடுத்து பல பயனாளிகள் அவர் தொடர்பான தகவல்களை தேடவே, யாஹூ நிர்வாகிகள் கிரேசியா தொடர்பான இணைப்பை முகப்பு பக்கத்தில் வைத்தனர். இதுவே யாஹு செய்திகளின் துவக்கமாக அமைந்தது.
இந்த தகவலை யாஹுவின் ஆரம்ப கால ஊழியர்களில் ஒருவரான ஸ்ரீனிஜா ஸ்ரீனிவாசன் பகிர்ந்து கொண்டுள்ள பழைய கட்டுரை ஒன்றை நியூயார்க் டைம்ஸில் படிக்க நேர்ந்தது. அதில், ஸ்ரீனிஜா யாஹுவின் ஆரம்ப கால செயல்பாடுகள் தொடர்பாக பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.- https://www.nytimes.com/2016/07/17/technology/when-yahoo-ruled-the-valley-stories-of-the-original-surfers.html
யாஹுவின் இணைய கையேட்டில் இடம்பெறும் இணையதளங்கள் கவனமாக பசீலித்த பிறகே பட்டியலில் சேர்ப்பது வழக்கம். எனினும் சில நேரங்களில் தவறு நிகழ்ந்திருக்கிறது. ஒரு முறை யூதவழி மத பிரிவு தொடர்பான தகவல் தவறாக இடம்பெற்ற போது, யூத மதகுருமார்களிடம் இருந்து மறுப்பு தெரிவித்து பேக்ஸ்களாக வந்து குவிந்ததாம். இணையதள செய்திக்கான மறுப்பு பேக்ஸ்களாக வந்த காலத்தை நினைத்துப்பாருங்கள்.
எல்லாம் சரி யாஹுவின் பெயர் எப்படி வந்தது எனத்தெரியுமா? . ஜொனாதன் ஸ்விப்ட் எழுதிய கலிவர்ஸ் டிராவல்ஸ் நாவலில், வரும் யாஹூ எனும் கூச்சலே இதற்கான ஊக்கமாக கருதப்படுகிறது. ஆனால் யாஹு என்பது Yet Another Hierarchical Officious Oracle எனும் வாசகத்தின் சுருக்கம் என்பதை வலைவாசல்கள் பற்றிய ’திஹிஸ்டரிஆப்வெப்’ கட்டுரையில் தெரிந்து கொள்ள முடிகிறது: https://thehistoryoftheweb.com/book/search/
–