தொழில்நுட்ப அகராதி: OFFLINE- ஐ தமிழில் எழுதுவது எப்படி?

இணைய பயன்பாடு பற்றி பேசும் போதும், எழுதும் போதும், ஆன்லைன் (online ) எனும் சொல்லையும், ஆப்லைன் (OFFLINE ) எனும் சொல்லையும் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இந்த சொற்களை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம் என்பது எளிதாக புரிந்து கொண்டாலும், தமிழில் இந்த சொற்களை பயன்படுத்துவதில் சிக்கல் உண்டாகிறது.

ஆன்லைன் என்பதற்கு தமிழில் சொற்கள் இல்லாமல் இல்லை. உடன் நிகழ் அல்லது நிகழ் நிலை என்று பொருள் தருகிறது சொற்குவை இணையதளம். இயங்கலை அல்லது இணைநிலை உள்ளிட்ட சொற்களை முன்வைக்கிறது விக்கிஷனரி. தமிழ்லெக்சிகன் தளமும் நிகழ் நிலை எனும் சொல்லையே பரிந்துரைக்கிறது.

ஆன்லைன் என்பது பொதுவாக இணையத்தில் இணைந்திருக்கும் நிலையை குறிப்பதால், இயங்கலை அல்லது நிகழ்நிலையை விட இணை நிலை என்பது பொருத்தமாக இருக்கும்.

ஆன்லைனில் வாங்கிய பொருள் என்பது போல, இணை நிலையில் வாங்கிய பொருள் என்று சொல்வதும் பொருத்தமாகவே இருக்கும். ஆனால், இதற்கு எதிர்நிலையான ஆப்லைன் தான் சிக்கலை உண்டாக்குகிறது.

ஆப்லைன் பற்றி பார்ப்பதற்கு முன் ஒரு முக்கிய குறிப்பு. ஆன்லைன் என்பது உண்மையில் இணைப்பில் இருப்பதை குறிக்கும் சொல். அதாவது இணையம் மட்டும் அல்ல, இன்னும் பிற வழிகளிலும் வலைப்பின்னல் சேவைகள் அல்லது மின்னணு தகவல் தொடர்பில் இணைந்திருப்பதை குறிக்கும் சொல்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம், இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே, பயனாளிகள் இணை நிலையில் அதாவது ஆன்லைனில் இணையத்துவங்கிவிட்டனர். பி.பி.எஸ்., எனப்படும் தகவல் பலகை சேவைகள், டெலிடெக்ஸ்ட், வீடியோடெக்ஸ் போன்ற துவக்க கால புதிய ஊடக சேவைகள் மூலம் இது சாத்தியமானது. ( இந்த வரலாற்றை தனியே விரிவாக பார்க்க வேண்டும்.)

நிற்க, ஆப்லைன் என்பது இணைய இணைப்பில் இல்லாத நிலையை குறிக்கிறது. தொடர்பற்ற நிலை என்றும் சொல்லலாம். ஆனால், தொழில்நுட்ப கோளாறு போன்றவற்றால் தொடர்பு இல்லாமல் போவதை அல்லாமல், போதும் இணையம் என துண்டித்து வரும் நிலையை உணர்த்துவதாக கருதலாம். அதோடு, இணையம் எனும் மெய்நிகர் பரப்பில் அல்லாமல், இயல்பு நிலை உலகில் இருப்பதையும் உணர்த்துவதாக கொள்ளலாம்.

ஆப்லைனை குறிக்க, தமிழில், முடக்க நிலை அல்லது அகல் நிலை எனும் சொற்களை சொற்குவை முன்வைக்கிறது. விக்கிஷனரி மற்றும் தமிழ் லெக்சிகனிலும் இதே சொற்களை காணலாம்.

முடக்க நிலை என்பது சரியானது என்றாலும், ஒரு பகுதி பொருளை மட்டுமே அளிப்பதாக கருதலாம். இணையத்தில் இருந்து விலகி வந்த நிலை என்பதால் அகல் நிலை என்பது பொருத்தமானது. ஆனால் அகல் என்றால் விளக்கு என்பதே முதலில் நினைவுக்கு வரும் என்பதால் அகல் நிலை எனும் பயன்பாடு குழப்பத்தை அளிக்கலாம். எனவே, இயல் நிலை என்று குறிக்கலாம். உண்மை அல்லது இயல்பு உலகின் செயலை இது உணர்த்துவதாக கருதலாம்.

புரிதலுக்காக ஆப்லைன் எனும் அகல் நிலை அல்லது இயல் நிலை என பயன்படுத்தலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *