எலான் மஸ்க் கையகப்படுத்திய பின், டிவிட்டர் பெயர் மட்டும் மாறவில்லை, அதன் பாதையும் மாறிவிட்டது. இப்போது, முழுக்க முழுக்க வலதுசாரிகள் மேடையாக எக்ஸ் தளம் முன்னிறுத்தப்படுவதாக கருதப்படுகிறது. எக்ஸ் தளத்தின் இந்த மாற்றம் பற்றி விரிவாக அலசி ஆராய வேண்டும் என்றாலும், பழைய அல்லது மூல சேவையான டிவிட்டர் அபிமானி என்ற முறையில், இணைய தேடலின் போது எதிர்கொண்ட பழைய டிவிட்டர் கணக்கு ஒன்று தொடர்பான தகவலை இங்கே பகிர்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஸ்பேஸ்ஜேம்ஸ்டேடஸ் (Space Jam Status (@SpaceJamCheck) ) எனும் பெயரிலான அந்த டிவிட்டர் பக்கம், ஸ்பேஸ்ஜேம் இணையதளத்தின் தற்போதைய நிலையை கண்டறிந்து சொல்லும் வகையில் அமைந்திருந்தது.
ஸ்பேஸ்ஜேம்.காம், இணையத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இணையதளம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே பெயரில் 1996 ல் வெளியான ஹாலிவுட் திரைப்படத்திற்காக விளம்பர நோக்கில் இந்த தளம் அமைக்கப்பட்டது. கூடைப்பந்து நட்சத்திரம் மேஜிக் ஜான்சன் நடித்ததை மீறி ஸ்பேஸ்ஜேம் படம் பெரிய வெற்றியும் பெறவில்லை, அதன் ஆக்க முறைக்காகவும் தனித்து அறியப்படவில்லை.
ஆனால், அந்த படத்திற்காக அமைக்கப்பட்ட இணையதளம் இணையவாசிகள் மத்தியில் தனி அந்தஸ்து பெற்றது. ஒரு காரணம், திரைப்பட விளம்பரத்திற்காக அமைக்கப்பட்ட முதல் இணையதளம் என்பது. மற்றொரு காரணம், 1996 ல் அமைக்கப்பட்டதை மீறி அந்த தளம் இணையத்தில் தாக்குப்பிடித்து நின்றது தான்.
இன்னமும் பழைய வடிவில் இருக்கும் அந்த கால தளம் என்பதற்கு தொடர்ந்து உதாரணம் காட்டப்பட்ட ஸ்பேஸ்ஜேம்.காம், இணையதளம், வடிவமைப்பு நோக்கில் இணையம் முன்னேறி வந்ததை உணர்த்துவதோடு, வரலாற்று நோக்கில் பழைய இணையதளங்களை பாதுகாப்பதன் அவசித்தையும் உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.
இந்த பின்னணி தகவல்களோடு பார்த்தால், ஸ்பேஸ்ஜேம் தளத்தை கண்காணிக்க அமைக்கப்பட்ட டிவிட்டர் பக்கத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். ஸ்பேஸ்ஜேம் தளம் இன்னமும் செயல்பாட்டில் இருக்கிறதா? எனும் கேள்வி பலருக்கு அவ்வப்போது எழுந்து கொண்டே இருப்பதால், இதற்கு பதில் அளிப்பதற்காக என்றே, ஸ்பேஸ்ஜேம் செக் டிவிட்டர் பக்கம் உருவாக்கப்பட்டது.
ஸ்பேஸ்ஜேம் இணையதளத்தை பார்த்து, அதன் தற்போதையை நிலையை பதிவிடுவதாக கூறிய இந்த கணக்கு தினமும் ஸ்பேஸ்ஜேம் தளத்தின் நிலையை குறும்பதிவுகளாக தெரிவித்து வந்தது. இதற்கென உருவாக்கப்பட்ட பாட் மென்பொருள் வடிவில் இந்த பக்கம் செயல்பட்டாலும், ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இணையதளத்தின் நிலையை மனதில் நிறுத்துவதாக அமைந்தது.
2022 ல் இந்த டிவிட்டர் கணக்கு கைவிடப்பட்டாலும், அதன் நோக்கத்தினால் ஈர்ப்புடையதாக இருக்கிறது. இந்த கணக்கை துவக்கியவர் பற்றிய விவரம் தெரியவில்லை. ஆனால், இது போன்ற புதுமையான பயன்பாடே டிவிட்டர் சேவையை பிரபலமாக்கியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனும் பெயரில் கட்டவிழ்த்துவிடப்படும், வணிக நோக்கிலான உத்திகளுக்கு மாறாக, சமூக ஊடக மேடைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற இயல்பான பயன்பாட்டிற்கான உதாரணம் இந்த டிவிட்டர் பக்கம்.
–