கம்ப்யூட்டர் பெண்கள் புத்தகம் அறிமுகம்

பில்கேட்ஸ் புகழ் பாடும் அளவுக்கு, தொழில்நுட்ப உலகில் அடா லவ்வேஸ் பற்றியோ இடா ரோட்ஸ் பற்றிய பெரும்பாலானோர் பேசுவதில்லை. அதே போல, மென்பொருள் முன்னோடிகள் என்று வரும் போது மார்க்ரெட் ஹாமில்டன் பற்றியோ, பார்பரா லிஸ்கோ பற்றியோ பலரும் குறிப்பிடுவதில்லை.

இன்னமும், காத்தரீன் ஸ்பார்க் ஜோன்ஸ் பற்றியோ எலிசிபெத் பெயின்லர் பற்றியோ பரவலாக அறியப்படவில்லை, பேசப்படுவதும் இல்லை. இவர்கள் எல்லாம், கம்ப்யூட்டர் மற்றும் இணைய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய பெண் முன்னோடிகள். அதிகம் கவனிக்கப்படாதவர்கள்.

இவ்வளவு ஏன், எனியாக் பெண்கள் என போற்றப்படும் முதல் மின்னணு கம்ப்யூட்டர் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய பெண் மென்பொருளாலர்கள் பல காலத்திற்கு கம்ப்யூட்டர் முன் நிற்கும் மாடலாக கருதப்பட்டது எத்தனை பெரிய சோகம்.

எனியாக் மட்டும் அல்ல, அதன் தொடர்ச்சியான யூன்வேக் உள்ளிட்ட கம்ப்யூட்டர்களிலும் பெண் கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் பெரும் பங்காற்றியுள்ளனர். கூகுளுக்கு முன்னோடியாக வழி காட்டும் இணைய தேடலுக்கான அடிப்படை அல்கோரிதம் உள்ளிட்டவற்றை உருவாக்கியது பெண்கள் தான்.

உலகின் முதல் புரோகிராமரே அடா லவ்லேஸ் எனும் பெண் தான் எனும் போது கம்ப்யூட்டர் வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்காற்றியதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் அவர்கள் பங்களிப்பும் சாதனையும் பரவலாக கவனிக்கப்படுவதில்லை, போற்றப்படுவதில்லை என்பதே கவனத்தில் கொள்ள வேண்டியது.

இப்படி இணையம், கம்ப்யூட்டர் வளர்ச்சியில் மைல்கற்களாக மின்னும் முன்னோடி பெண்களின் வாழ்க்கைச்சித்திரங்களை விவரிக்கும் நூலாக கம்ப்யூட்டர் பெண்கள் அமைகிறது. தமிழ் யுவர்ஸ்டோரியில் தொடராக வந்தது. ஜீரோடிகிரி புத்தககமாக வெளியிட்டுள்ளது.

பில்கேட்ஸ்கள் பற்றி பேசியது போதும், சற்று, இடார் ரோட்ஸ்கள் பற்றியும் பேசுவோம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *