ஜேக் விட்டன் கேட்பது போன்ற அல்கோரிதமை எந்த ஒரு சமூக ஊடக நிறுவனமும் உருவாக்கப் போவதில்லை. உருவாக்க முடியாது என்றில்லை, உருவாக்க கூடாது என அவை நினைக்கலாம் என்பதே காரணம். ஏனெனில் சமூக ஊடக நிறுவனங்கள் ஒவ்வொன்றும், தங்கள் பயனாளிகளை கூண்டு கிளிகளாக்கி தக்க வைத்துக்கொள்ளும் நோக்கிலான அல்கோரிதம்களையே உருவாக்க விரும்புகின்றன. அப்படியிருக்க, பயனாளிகளிக்கு சுதந்திரம் அளிக்கும் மக்கள் நல அல்கோரிதமை அவை ஏன் உருவாக்கப்போகின்றன.
பேஸ்புக்கோ, டிக்டாக்கோ அல்லது யூடியூபோ அதன் அல்கோரிதம்கள் எல்லாமே பயனாளிகளுக்கு கண்ணுக்குத்தெரியாத விலங்குகளை அணிவித்து, அடிமையாக வைத்திருக்கும் நோக்கம் கொண்டவை. அவற்றை பொருத்தவரை பயனாளிகள் தங்கள் மேடைகளில் அதிக நேரத்தை செலவிட வைக்க வேண்டும்- அந்த நேரத்தை பணமாக்கி லாபம் குவிக்க வேண்டும். இதை ஒரு சுழற்சியாக செய்து கொண்டிருக்க வேண்டும்.
இதை சமூக ஊடக அல்கோரிதம்கள் மீதான வீண் பழி என்றோ அவதூறு என்றோ நினைத்தால், இந்த அல்கோரிதம்கள் செயல்படும் விதம் பற்றிய அலசல் கட்டுரைகளை தேடிப்பிடித்து படித்துப்பார்க்கவும்.
இப்போது விட்டன் கேட்கும் அல்கோரிதமிற்கு வருவோம். ஏஐ சாட்பாட் சேவையான கிளாடின் தாய் நிறுவனம் ஆந்த்ரோபிக்கில் முக்கிய பொறுப்பு வகிக்கும் விட்டன் தனது புளுஸ்கை சமூக ஊடக பக்கத்தில், ‘ நான் மற்ற சமூக ஊடக தளங்களில் பார்த்துவிட்ட பதிவுகளை எல்லாம் வடிகட்டும் ஒருங்கிணைந்த சமூக ஊடக அல்கோரிதம் தேவை” (Need a unified social media algorithm that filters out posts I’ve seen on other sites) என தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிடும் ஒருங்கிணைந்த சமூக ஊடக அல்கோரிதம் என்பது அனைத்து முன்னணி சமூக ஊடக சேவைகளையும் ஒருங்கிணைக்கும் அல்கோரிதம். உதாரணத்திற்கு, பேஸ்புக், டிவிட்டர் ( எனக்கு என்றென்றும் டிவிட்டர் தான்), இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்னேப்சேட் உள்ளிட்ட முன்னணி சேவைகளை ஒருங்கிணைக்கும் அல்கோரிதம்.
இத்தகைய ஒருங்கிணைந்த அல்கோரிதமால் என்ன பயன்? விட்டன் கோரிக்கையை வைத்துப்பார்த்தால், நாம் பல்வேறு சமூக ஊடக சேவைகளை பயன்படுத்தும் போது, ஏற்கனவே ஒரு சமூக ஊடக கணக்கில் பார்த்த பதிவை அடுத்த சேவையில் காட்டாமல் அல்கோரிதம் வடிகட்ட காட்ட வேண்டும் என்பது தான்.
கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், இந்த அல்கோரிதம் எத்தனை அற்புதமாக இருக்கும் என புரியும். எல்லோரும் ஒன்றுக்கு மேற்பட்ட சமூக ஊடக சேவைகளை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு சேவைக்கும் ஒரு தனித்தன்மை இருந்தாலும், பல நேரங்களில் டிரெண்டிங் போக்குகளும், வைரல் நிகழ்வுகளும் முன்னணி சமூக ஊடக சேவைகள் எல்லாவற்றிலும் தலைத்தூக்குகின்றன. இது போன்ற சூழலில், ஏற்கனவே பார்த்த பதிவுகள் வடிகட்டப்படும் வசதிக்கான ஏக்கம் சரியானது தானே.
ஆக, ஜிட்டம் கோரிக்கையை சமூக ஊடக பயனாளிகளின் ஆழ்மனதின் ஏக்கம் என்று கூட புரிந்து கொள்ளலாம்.
அதோடு, ஏற்கனவே முன்னணி மெசேஜிங் சேவைகளை ஒருங்கிணைத்து ஒரே மேடையில் பயன்படுத்தும் மெசேஜிங் சேவைகள் அறிமுகம் ஆகியிருக்கின்றன. எனில் சமூக ஊடகங்களுக்கான ஒருங்கிணைந்த அல்கோரிதமை உருவாக்குவதும் சாத்தியமே.
ஆனால் இத்தகைய ஒருங்கிணைந்த அல்கோரிதமை எந்த சமூக ஊடக நிறுவனமும் உருவாக்காது. ஏனெனில் அது அவற்றின் வர்த்தக மாதிரிக்கு எதிராக இருக்கும். எல்லாவற்றையும் விட முக்கியமாக பயனாளிகள் விரும்பும் ஒரு அல்கோரிதமை அவை ஏன் உருவாக்க வேண்டும்.
பயனாளிகள் விருப்பம் அறிந்து செயல்படுதம் எனும் தோற்றத்தை முன் வைத்து அவர்களை வலையில் விழ வைத்து வர்த்தகமாக்குவது தானே அவற்றின் நோக்கம். அப்படி எல்லாம் இல்லை என வாதிட முயற்சிக்கும் அப்பாவிகள் பேஸ்புக் அல்கோரிதமில் இன்னும் ஆழமாக ஐக்கியமாக வாழ்த்துக்கள்.
இது ஜேக் விட்டனின் புளுஸ்கை பதிவு: https://bsky.app/profile/zswitten.bsky.social/post/3leoacxz46s2k
–