இணையதளம் – புது விளக்கமும், புதிய பார்வையும்!

இணையதளம் என்றால் என்ன? எனும் கேள்விக்கான விடை இத்தனை சுவாரஸ்யமானதாகவும், சிந்தனைக்குறியதாகவும் இருக்கும் என நினைக்கவில்லை. அதாவது, ஹேக்கர் நியூஸ் தளத்தில், நோக்கியா போனில் உண்டாக்க கூடிய வலை சர்வர் தொடர்பான பதிவுக்கான விவாத சரட்டில் இடம்பெற்றிருந்த பதிலை பார்க்கும் வரை!

இந்த பதிவே தனிப்பதிவுக்கு உரியது என்றாலும், இப்போதைக்கு இணையதளத்திற்கான பதிலை மட்டும் பார்க்கலாம்.

இணையதளம் என்பதை, இணைய பக்கங்களின் தொகுப்பு என்கிறது விக்கிபீடியா. இதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஏன் என்பதை அறிய ஹேக்கர்நியூஸ் விவாத சரடு பதிலை பார்க்கலாம்.

ஒருவர் இணையதளத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்? எனும் கேள்வியுடன் துவங்கும் அந்த பதில், இணைய தளம் என்றால் என்ன? எனும் கேள்வி எழுப்பி, இணையதளம் என்பது எச்டிடிபிடி-ஐ செயலாக்கும் ஒரு கம்ப்யூட்டர் என்கிறது.

இது ஒரு மேடையும் அல்ல, பார்வையாளர்களை ஈர்ப்பதும் அதன் நோக்கம் அல்ல என்கிறது.

கம்ப்யூட்டரை மையமாக கொண்டு இணையதளத்தை விளக்கும் இந்த பதில் வியப்பை ஏற்படுத்தியது. எச்டிடிபிடி என்பது, எச்டிடிபி கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் மென்பொருள் எனும் தொடர் விளக்கத்தை படிக்கும் போது, இன்னும் வியப்பு உண்டாகி, தொழில்நுட்ப நோக்கில் புதிய புரிந்தல் ஏற்பட்டது போலவும் தோன்றியது.

எச்டிடிபி கொண்டு பலவற்றை செய்யலாம் என்றும், ஆனால் பெரும்பாலும் இது வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

போனில் தனிப்பட்ட இணையதளத்தை உருவாக்கி கொள்ளும் வசதி தொடர்பான பதிவில், இந்த விளக்கமும், வாதமும் பொருத்தமானது என்பதை மீறி, இணையதளம் தொடர்பான புதிய விளக்கமாக இது தோன்றியது.

தொடர்து தேடிப்பார்த்ததில், எச்டிடிபிடி ( HTTP D ) என்பது, இணையதள சர்வரை இயக்கும் மென்பொருள் என புரிந்து கொள்ள முடிந்தது. எனில், இந்த மென்பொருளை இயக்கும் ஒரு கம்ப்யூட்டரை இணையதளம் என உள்வாங்கி கொள்வது சிறந்ததே.

இணைய பக்கங்களின் தொகுப்பு என்பதை மீறி, இணையதளம் என்பது, பயனர்கள் கோரிக்கையை ஏற்று அதற்கேற்ற தகவல்களை தோன்றச்செய்யும் வசதி என்றும் புரிந்து கொள்ளலாம்.

நிற்க, தொழில்நுட்ப விளக்கங்களுக்கான ஆகச்சிறந்த அகராதி என கருதப்படும் போல்டாக் (https://www.computerlanguage.com/results.php?definition=website ) இணையதளத்திற்கு இப்படி விளக்கம் அளிக்கிறது. – வலை சர்வரை இயக்கும் இணையத்தில் உள்ள எந்த ஒரு கம்ப்யூட்டர்.

இன்னொரு ஆகச்சிறந்த தொழில்நுட்ப அகராதியான கம்ப்யூட்டர் லாங்வேஜ் இப்படி விளக்கம் அளிக்கிறது: இணையதளம் என்பது வைய விரிவு வலையில் ஒரு இருப்பு.

ஹேக்கர் நியூஸ் விவாத சரடு: https://news.ycombinator.com/item?id=37086455

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *