லைவ் சிடி (Live CD) – மிதவை ஓஎஸ் – ( டெக் டிக்‌ஷனரி )

லைவ் சிடி என்பதை தமிழில் நேரடி சிடி என்றோ, நிகழ்நேர சிடி என்றோ குறிப்பிடத் தோன்றினாலும் இது முற்றிலும் சரியல்ல. இங்கு நேரடி என்பது உண்மையில், தரவிறக்கம் செய்யாமல் பயன்படுத்தும் தன்மையை குறிக்கிறது. எந்த மென்பொருளாக இருந்தாலும் பெரும்பாலும் கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். ( பிரவுசரில் பயன்படுத்தக்கூடிய செயலிகளை விட்டுவிடுங்கள்). அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர்களை இயக்குவதற்கு அடிப்படையாக அமையும், ஓஎஸ் எனும் இயங்குதளத்தை தரவிறக்கி இன்ஸ்டால் செய்தாக வேண்டும். ஓ.எஸ் மென்பொருளை சிடியில் கொண்டு வந்தாலும் இது தான் நடைமுறை. இதற்கு மாறாக, கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்யாமலே, சிடியில் மூலமாக மட்டும் இணைத்து இயக்கும் வகையில் ஓஎஸ் உள்ளிட்ட மென்பொருள்களை பயன்படுத்தும் வசதி லைவ் சிடி என குறிப்பிடப்படுகிறது.

ஓஎஸ். மென்பொருள் கம்ப்யூட்டரின் ஹார்டிஸ்கில் உள்ள சேமிப்பில் குடி புகுந்து இயங்குவதற்கு மாறாக லைவ் சிடியில் எந்த மென்பொருளையும், சிடி வடிவில் பயன்படுத்திக் கொள்ளலாம். கம்ப்யூட்டரில் சேமிக்கப்படாமல் சிடியிலேயே இயங்குவதால் லைவ் சிடி என குறிப்பிடப்படுகிறது. எனவே தமிழில் நேரடி சிடி என்பதைவிட, மிதவை சிடி என குறிப்பிடலாம்.

விண்டோஸ் போன்ற கடிவாள ஓஎஸ்களுக்கு மாற்றாக அமையும் லினக்ஸ் இயங்கு தளத்தை பயன்படுத்துவதில் சாமானியர்கள் பலருக்கு தயக்கம் இருக்கலாம். இந்த ஓஎஸ் ஏற்கனவே உள்ள மென்பொருள்களையும், கோப்புகளையும் பதம் பார்த்துவிட்டால் என்னாவது என அஞ்சலாம். அதற்காக தான், தரவிறக்கம் செய்யாமலே லினக்ஸ் செயல்பாட்டை காண்பிடிக்க இந்த லைவ் சிடி முறை உருவாக்கப்பட்டது. இப்போது மென்பொருள் உலகில் பிரபலமாக இருக்கிறது.

சிடிக்கள் வழக்கொழிந்து விட்டதால், இப்போது உள்ள பென் டிரைவ் போன்ற சேமிப்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும் இன்னமும் லைவ் சிடி என்றே குறிப்பிடப்படுகிறது.

டெக் டிக்‌ஷனரி

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *