கம்ப்யூட்டர் என்று வரும் போது பிரபல நிறுவனங்களின் பிராண்டட் தாயாரிப்பு தான் வேண்டும் என பலரும் நினைப்பதில்லை.அசெம்பிள் செய்யப்பட்ட கம்ப்யூட்டரே போதும் என பலரும் திருப்திபட்டுக்கொள்கின்றனர்.
அசெம்பிள் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்கள் விலை குறைவாக இருக்கும் என்பதோடு நம்பகமானதாகவும் இருக்கிறது.தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் மூலமே வாங்கப்படுவதால் கம்ப்யூட்டரில் பிரச்சனை என்றால் விற்பனை செய்த நபரே வந்து பழுது பார்த்து தரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பெரிய நிறுவன தயாரிப்பை வாங்கிவிட்டு சர்வீசுக்கு அலைவதைவிட இது சிறந்தது.
நிற்க அசெம்பிள் செய்யப்பட்ட கம்ப்யூட்ட்ர்களின் அருமையை நீங்களே நன்றாக அறிந்திருப்பீர்கள்.இஙே நான் சொல்ல வருவது, நீங்கள் நினைத்தால் உங்களுக்கான கம்ப்யூட்டரை நீங்களே உருவாக்கி கொள்ளலாம் என்பது தான்.
அதாவது நீங்களே அசெம்பிள் செய்து கொள்ளலாம்.
அதெப்படி சாத்தியம் எனக்கு கம்ப்யூட்டர் பற்றி எதுவுமே தெரியாதே என நினைத்தாலும் சரி, அப்படியா இது எப்ப்டி சாத்தியம் என ஆர்வமுடன் கேட்டாலும் சரி ‘பிசிஇட்யுவர்செல்ப்’ என்னும் தளத்திற்கு சென்று பார்த்தால் இதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு பிசியை அசெம்பிள் செய்வது எப்படி என்பதை இந்த தளம் மிக அழகாக 3 கட்டங்களாக விளக்குகிறது.
முதல் கட்டத்தில் ஒரு கம்ப்யூட்டரை அசெம்பிள் செய்யும் முன் வாங்க வேண்டிய பாகங்களை எப்படி தேர்வு செய்வது என விளக்கப்படுகிறது.இதற்கு வசதியாக கம்ப்யூட்டரின் ஒவ்வொரு முக்கிய பாகங்களின் செயல்பாடும் எளிமையாக விளக்கப்படுகிறது.அடுத்த கட்டம் எப்படி அசெம்பிள் செய்வது என்பது. மூன்றாவதாக சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்வது தொடர்பானது.
எல்லா செயல்முறை விளக்கங்கலுமே மிக மிக எளிமையாக இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
கொஞ்சம் ஆர்வம் இருந்தால் இந்த தளத்தின் உதவியோடு ஒரு கம்ப்யூட்டரை சுலபமாக உருவாக்கிவிடலாம்.
என்ன நீங்க ரெடியா?
—-
link;
http://www.pcityourself.com/index.php

0 Comments on “உங்கள் ‘பிசி’யை நீங்களே அசெம்பிள் செய்து கொள்ளலாம்.”
Dyena
very useful info
thanks for the post…
DYENA
Pingback: கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்ய வேண்டுமா « Vijidon