இண்டெர்நெட் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட் வளர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் இண்டெர்நெட் உண்மையில் எத்தனை பெரியது என எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா?
இண்டெர்நெட் நாம் நினைக்ககூடியதை எல்லாம்விட பெரியதாக இருக்கிறது.உலகைவிட பெரியது என வைத்துக்கொள்ளுங்களேன்.
எப்படி?
இண்டெர்நெட்டை அளவிடுவதற்கு உள்ள வழி இணையதளங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதாகும். அதற்கு தேடியந்திரங்கள் இருக்கவே இருக்கிறது.
தேடப்படும் தகவல்களை உடனே எடுத்து தருவதற்காக கூகுல் போன்ற தேடியந்திரங்கள் இணைய உலகில் உருவாக்கப்படும் இணையதளங்களை எல்லாம் பட்டியலீடு வைத்துள்ளன.
கூலின் கணக்குபடி மொத்த இணையதளங்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது.மைக்ரோசாபடின் பிங் கணக்குப்படியும் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியை தாண்டிவிட்டது.
உலகின் தற்போதைய மக்கள் தொகை 670 கோடியாகும். ஆக் உலகில் உள்ள மனிதர்களை காடிலும் பன்மடங்கு அதிக அளவில் இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.அதாவது ஒவ்வொரு மனிதருக்கும் 150 இணையதளங்கள் என்னும் அளவில் இருக்கின்ற்ன.
இதன் பிரம்மாண்டத்தை புரிந்துகொள்ள இந்த கனக்கை பாருங்கள். ஒவ்வொரு இணைய தளத்தையும் ஒரே ஒரு நிமிடம் படித்து பார்க்க வேண்டும் என்றால் ஒருவருக்கு 31 ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும்.அவற்றில் உள்ள தகவல்களை எல்லாம் படிக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு தொடர்ச்சியாக் 600 ஆயிரம் தாசாப்தங்கள் தேவை.
இப்போது புரிகிறதா? இண்டெர்நெட் எவ்வள்வு பெரியதாக உருவாகியுள்ளது என்று.
இது ஒரு புறம் இருக்க இண்டெர்நெட் மக்கள் தொகை கடந்த ஆண்டைவிட 16 சதவீதம் உயர்ந்துள்ளது.இண்டெர்நெட்வேர்ல்டுஸ்டாட்ஸ் டாட் காம் தலத்தின் கணக்குப்படி சீனாவிலேயே இண்டெர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம்.அமெரிக்க இரண்டாவது இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஒரு கணக்குபடி சீனாவின் இன்டெர்நெட் பயனாளிகள் அமெரிக்க மக்கள்தொகையைவிட அதிகம்.
விரைவில் இந்தியாவும் இதில் சேர்ந்துகொள்ளலாம்.
மேலும் வருங்காலத்தில் செல்போன் மூலம் இண்டெர்நெட்டை அணுகுவது அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
எல்லம் சரி உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் நாள் எப்போது வரும்? நிபுணர்களுக்கே விடை தெரியாதா கேள்வி அது.
ஆனால் ஒன்று டிஜிட்டல் பிளவு என்று சொல்லப்படும் இந்த இடைவெளியை குறைக்க நிபுணர்கள் பல விதங்களில் பாடுபட்டு வருகின்றனர்.
பொதுவாக நாமெல்லாம் இண்டெர்நெட்டின் அளவு மற்றும் பரப்பு பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆனால் இண்டெர்நெட்வேர்ல்டுஸ்டாட்ஸ் டாட் காம் தளம் இதனை செய்து வருகிறது.உலக நாடுகளின் இண்டெர்நெட் பயன்பாடு தொடர்பான தகவல்கள்,புள்ளிவிவரங்கள் இந்த தலத்தில் இடம்பெற்றுள்ளன.
—

0 Comments on “உலகைவிட பெரியது இண்டெர்நெட்”
ஐந்திணை
//ஒவ்வொரு இணைய தளத்தையும் ஒரே ஒரு நிமிடம் படித்து பார்க்க வேண்டும் என்றால் ஒருவருக்கு 31 ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும்//
aiyooooooo
Vigneswari Khanna
நல்ல பதிவு.
sivamuthan
அடெகப்பா!