ஆர்ச்சி தான் இணைய உலகின் முதல் தேடியந்திரமாக கருதப்படுகிறது. ஆலன் எம்டேஜ் இந்த தேடியந்திரத்தை உருவாக்கினார்.
1990 அறிமுகமான ஆர்ச்சி, தேடியந்திரம் என்றால் அறியப்படும் கூகுளுக்கு முன் உருவானது என்பது மட்டும் அல்ல, வெப் என அறியப்படும் வலைக்கு முன் உருவான தேடியந்திரம்.
ஆர்ச்சி, எப்டிபி கோப்புகளை மட்டுமே தேடித்தரும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. நவீன தேடியந்திரங்களோடு ஒப்பிடும் போது ஆர்ச்சி தேடிய கோப்புகள் எண்ணிக்கை அற்ப சொற்பம் என்றாலும்,கோப்புகளை தானியங்கி முறையில் திரட்டி, பட்டியலிட்டு அவற்றிலிருந்து பொருத்தமானதை தேடித்தருவது எனும் தேடியந்திர அடிப்படை ஆர்ச்சியில் இருந்து பெரிதும் மாறிவிடவில்ல.
ஆர்ச்சியை உருவாக்கி எம்டேஜ், வலையை உருவாக்கிய டிம் பெர்னர்ஸ்லீயின் சமகாலத்தவர் என்பது மட்டும் அல்ல, லீ எப்படி வலையின் உருவாக்கத்திற்கு காப்புரிமை பெறவில்லையோ, அதே போல எம்டேஜு தேடியந்திர கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெறவில்லை.அந்த வகையில் வலையின் நவீன வளர்ச்சிக்கு எம்டேஜின் கொடை முக்கியம்.
ஆர்ச்சி பற்றியும் ,அதை உருவாக்கிய எம்டேஜ் பற்றியும் பல பதிவுகள் எழுதியிருக்கிறேன். இப்போது யூடியூப் வீடியோவிலும் பேசியிருக்கிறேன்.