‘மாதந்தோறும் 800 டாலர்கள் சம்பாதிக்கிறேன். ஆனால் நாடோடியாக சுற்றிக்கொண்டிருக்கிறேன்’ இப்படி கூறும் அந்தோனி பேஜ் குரலில் ஒருவித ஆனந்தம். அவரது முகத்தில் ஒரு எல்லையில்லாத திருப்தி. லண்டனைச் சேர்ந்த பேஜ், சந்தோஷமாக உலகில் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கிறார் அதனால்தான் தன்னை நாடோடி என்று குறிப்பிடுகி றார். அதேநேரத்தில், கைநிறைய சம்பாதிக்கவும் செய்கிறார்.
|
|
. | |
புதிய புதிய இடங்களை சுற்றிப் பார்த்தபடி, மனதுக்கு பிடித்த வேலையை செய்து கொண்டிருப்ப தால், அவர் பேரானந்தத்தோடு இருக்கிறார். பேஜ் நிச்சயம் புதுமையான மனிதர் தான். அதைவிட அவரது வாழ்க்கை முறை முற்றிலும் புதுமையானது.
பொதுவாக ஊர் சுற்றுவதும், உழைப்பதும் ஒன்றுக்கொன்று எதிரா னது. ஊர் சுற்றுபவர்கள் உழைப்பவர் களாக இருக்க வாய்ப்பு இல்லை. உழைக்கும் நோக்கம் கொண்டவர்கள் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் அந்தோனி பேஜோ, ஊர் சுற்றிபடி உழைத்துக்கொண்டிருக் கிறார் என்பதுதான் விசேஷமானது. அவரை நவீன நாடோடி என்று சொல்லலாம். அல்லது நாடோடி அதிபர் என்றும் சொல்லலாம். காரணம், அவர் சொந்தமாக தொழில் செய்தபடி, அதேநேரத்தில் உலக நாடுகளை சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கிறார். உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், ஏதாவது ஒரு இடத்தில் இன்டெர்நெட் இணைப்பை பார்க்க முடிகிறது. ஏழை நாடுகளில் கூட ஒரு இடத்தில் இல்லை என்றால், இன்னொரு இடத்தில் இன்டெர்நெட் மையம் இருக்கிறது. அங்கிருந்தபடி வாடிக்கையாளர் களை தொடர்புகொண்டால் போயிற்று. இமெயில் யுகத்தில் வேலைக்கான ஆர்டரை பெறுவதற்கோ அல்லது வேலையை முடித்து அனுப்புவதற்கோ தூரம் ஒரு பிரச்சனையா என்ன? எங்கிருந்தாலும் இன்டெர்நெட் மூலமே தொடர்புகொண்டு விடலாமே?
வேலையை முடித்தபிறகு பணம் பெறுவதற்கு கூட “பேபால்’ போன்ற எளிமையான இன்டெர்நெட் பண வசதி முறை இருக்கிறது. அப்படி இருக்க எந்த ஊரில் இருந்தால் என்ன? நமக்கு தெரிந்த வேலையை தாராளமாக செய்ய முடியும்தானே! இந்த நம்பிக்கையோடுதான் பேஜ் லண்டனிலிருந்து லேப்டாப்பை மட்டும் எடுத்துக்கொண்டு உலகை சுற்ற புறப்பட்டு விட்டார். 35வது வயதாகும் பேஜ், கம்ப்யூட்டர் விஷயத்தில் கில்லாடி. லண்டனில் ஹைடெக் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் திடீரென அந்த நிறுவனம் தனது பெரும்பாலான பணிகளை இந்தியாவுக்கு அவுட் சோர்சிங் முறையில் மாற்றிவிட்டது. இதனால் பேஜ் உள்ளிட்ட பல ஊழியர்களின் சேவை தேவை யில்லை என்று கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. வேலை போனதால் வெறுத்துப் போன பேஜ் மீண்டும் வேலை தேட மனமின்றி கையிலிருக்கும் தொழிலை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்னும் முடிவுக்கு வந்துவிட்டார். இயல்பாகவே அவர் சுற்றுலா பிரியர். புதிய இடங்களை பார்த்து மகிழும் விருப்பம் கொண்டவர். எனவே, சொந்தமாக தொழில் செய்வது என முடிவு செய்தபிறகு சொந்த ஊரிலேயே இருக்க வேண்டிய அவசிம் என்ன? ஊர் ஊராக சுற்றிப்பார்ப்போமே என தீர்மானித்து விட்டார். புறப்படுவதற்கு முன்பாக தனக்கு தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு ஊருக்கு போகிறேன். எதுவாக இருந்தாலும் இமெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் அங்கிருந்தே முடித்து தருகிறேன் என்று கூறிவிட்டார். கடந்த 9 மாதங்களுக்கு மேலாக அவர் பல நாடுகளில் சுற்றியபடி ஓய்வு நேரத்தில் வேலையும் செய்து கொண்டிருக்கிறார். எந்த இடத்தில் இருக்கிறாரோ அதற்கு அருகே உள்ள இன்டெர்நெட் மையம்தான் தன்னுடைய அலுவலகம் என்று அவர் உற்சாகமாக கூறுகிறார். இந்த வாழ்க்கை தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதோடு வருவாய் தேடித்தரக்கூடியதாகவும் இருக்கிறது என்று அவர் தெம்பாகவே சொல்கிறார். பேஜ் அப்படி என்னவேலை செய்கிறார் என்று வியந்து போக வேண்டிய அவசியம் இல்லை. அவர் இணையதள வடிவமைப்பாளராக இருக்கிறார். இந்த வேலையை எங்கிருந்தும் செய்யலாம் அல்லவா? லண்டனில் தனக்குதெரிந்த வாடிக்கை யாளர்கள் மற்றும் இன்டெர்நெட் மூலம் அறிமுகமான நிறுவனங்களுக்கு இருந்த இடத்தில் இருந்தபடியே அவர்களின் தேவைக்கு ஏற்ப இணையதளங்களை வடிவமைத்து கொடுத்து வருகிறார். கூடவே தனக்கென சில இணைய தளங்களை அமைத்து அதன்மூலம் விளம்பர வருவாயையும் தேடிக் கொண்டிருக்கிறார். எனவே கைநிறைய காசு புரள்கிறது. பேஜ் அனுபவம் உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அவரது அனுபவம் விதிவிலக்கானது அல்ல. இது புதிய போக்காகவே உருவாகி வருகிறது. |