ஆனியன் என்றால் வெங்காயம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம்.ஆனால செய்தி உலகைப்பொருத்தவரை ஆனியன் என்றால் அசத்தல் என்று பொருள்.
பகடி,கேலி,கிண்டல்,நையாண்டி என்றெல்லாம் சொல்லப்படுவதன் உச்சத்தை உணரவேண்டும் என்றால் நீங்கள் ஆனியன் வாசகராக இருக்க வேண்டும்.ஆனியன் இதழை படிக்கும் போது புன்னகைக்காமலோ அல்லது விழுந்து விழுந்து சிரிக்காமலோ இருக்க முடியாது.அந்த அளவுக்கு நடப்பு சம்பவங்களையும்,நடக்காத சம்பவங்களையும் கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காக்குவது தான் இந்த இதழின் சிறப்பம்சம்.
குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் பலவர்கள் என்பார்களே அது போல ஆனியன் இதழ் ஆசிரியர் குழு நையாண்டி செய்தே பேர் வாங்கி வந்திருக்கிறது.1988 ம் ஆண்டு இளைஞர் இதழாக துவக்கப்பட்ட ஆனியன் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பதிப்பிக்கப்பட்டு பிரபலமானது.
1996 ல் இதன் இணையபதிப்பு துவங்கப்பட்ட போது இணையவாசிகள் பலர் ஆனியன் அபிமானிகளாயினர்.ஆனியனுக்கான விக்கிபீடியா கட்டுரை இதனை அமெரிக்க போலி செய்தி நிறுவனம் என்று ஆரம்பமாகிறது.போலி என்றால் பொய் செய்தி என்ற அர்த்தமில்லை.
தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நையாண்டி செய்து வெளியிடுவதால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.ஆனியன் தன்னை அமெரிக்காவின் மிகச்சிறந்த செய்தி வழங்கும் நிறுவனம் என்று அழைத்துக்கொள்கிறது.வழக்கமான இதழில் பார்க்கக்கூடிய அனைத்து அம்சங்களும் ஆனியனிலும் இருக்கும் என்றாலும் எல்லாமே நையாண்டியை சார்ந்த்தாக இருக்கும்.
ஆனியன் இதழில் வெளியாகும் கட்டுரைகள் கேலியாக அமைவதோடு சிந்திக்க வைக்கக்கூடிய விமர்சனமாகவும் இருக்கும் என்று பாரட்டப்படுகிறது.
ஆனியன் இதழின் முதல் பாதி தான் இப்படி நையாண்டி ராஜ்ஜியமாக இருக்கும் இரண்டாம் பாதியில் அருமையான நேர்காணல்கள்,விமர்சன் அறிமுகங்கள் இடம்பெற்றிருக்கும்.
இப்போது எதற்கு இந்த ஆனியன் புராணம் என்றால் ஆனியன் ஐபோனுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது.ஐபோனுக்கான செயலியை நியுயார்க் டைமஸ் உள்ளிட்ட நாளிதழ்கள் பெற்றுள்ளன.ஆனியனும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.
ஆனால் ஆனியன் என்றால் தனித்துவம் என்றும் அர்த்தம்.அதன்படி இந்தசெயலி செய்தி இல்லா செய்திகளை தருவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் இது வழக்கமான செய்தி செய்லியாக இல்லாமல் வேறுபட்டதாக இருக்கும்.அதாவது இந்த செயலி செய்தி தலைப்புகலை மட்டுமே வழங்கும். முழு நீள செய்திகள் இருக்காது.
செய்தி சேவையை இந்த செயலி புரட்சிகரமாக மாற்றும் என ஆனியன் குறிப்பிட்டுள்ளது.முழ நீள செய்திகளை எதற்கு படிக்க வேண்டும் தலைப்புகள் மட்டெம் போதாதா என்று ஆனியன் கேட்காமல் கேட்கிறது.
டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்து கொள்ள இந்த செயலி ஏற்றதாக இருக்கும்.

0 Comments on “ஆனியன் ஒரு அறிமுகம்”
TechShankar
பகிர்ந்தமைக்கு நன்றி திரு என்.டி.டி.வி. புகழ் சைபர்சிம்ஹன் அவர்களே!