சோதனை மேல் சோதனை என்பது தான் கூகுலின் அதிகாரபூர்வ கொள்கையாக இருக்க வேண்டும்.அந்த அளவுக்கு தொடர்ந்து கூகுல் தொடர்ந்து பரிசோசதனைகளில் ஈடுபட்ட வண்ணம் இருக்கிறது.
கூகுலின் பரிசோதனைகளின் நோக்கம் புதிய சேவைகளை அறிமுகம் செய்வது மட்டுமல்ல அதன் அடிப்படை சேவையான தேடலை மேலும் மேம்ப்டுத்துவதற்கான முயற்சியும் கூட.
தேடல் உத்தியை பட்டை தீட்டுவதில் கூகுல் காட்டும் தீவிரமும் ஈடுபாடும் கொஞ்சம் ஆச்சர்யமானது தான்.தேடியந்திரங்களில் கூகுல் முன்னிலை வகிப்பதோடு இணையவாசிகளை பொருத்தவரை தேடல் என்றால் கூகுல் என்றாகிவிட்டது.
கூகுலுக்கு போட்டியாக எண்ணற்ற தேடியந்திரங்கள் இருந்தாலும் கூகுலை மிஞ்சக்கூடிய தேடியந்திரம் என்னும் அந்தஸ்தை பெறுவது அநேக தேடியந்திரங்களுக்கு சாத்தியமாகவில்லை.இப்போது மைக்ரோசாப்ட்டின் பிங் கூட கூகுலோடு மல்லு கட்டுகிறதே தவிர கூகுலை வெல்ல வேண்டும் என்றால் அதற்கு தேடல் உத்தியில் ஒரு புரட்சி தேவை.
முடிசூடா மன்னன் என்பார்களே தேடலைப்பொருத்தவரை கூகுல் தான் முடிசூடா மன்னன்.அது மட்டுமல்ல நம்மூரில் அரசியல் தலைவர்களை நிரந்தர முதல்வர் என்றெல்லாம் பாராட்டுவார்களே கூகுலையும் கிட்டத்தட்ட அப்படி நிரந்தரமான முன்னணி தேடியந்திரம் என்று பாரட்டிவிடலாம்.
கூகுலை எப்படி பாராட்டினாலும் தகும் என்றாலும் தேடல் உலகின் நிரந்தர நம்பர் ஒன் தேடியந்திரம் என்று அதனை குறிப்பிடுவது அதீதமனது என்று தோன்றலாம்.நாளையே கூகுலை வெல்லக்கூடிய ஒரு தேடியந்திரம் உருவாகும் வாய்ப்பிருக்கிறதே.
இந்த உண்மையை வேறு எவரையும்விட கூகுல் நன்கு உணர்ந்திருக்கிறது.அதனால் தான் கூகுல் தன்னுடைய முதலிடத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதில் விழிப்புடன் உள்ளது.இந்த விழிப்புணர்வே கூகுலை தனது தேடல் தொழில்நுட்பத்தை மேலும் மேலும் கூறாக்கி கொண்டே இருக்க தூண்டுகிறது.
தேடலின் சிகரத்தை தொட்டுவிட்டோம் என்று இறுமார்ப்புடன் இல்லாமல் கூகுல் தேடல் உத்தியை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி விட முடியாதா என்று எப்போதும் முயன்று கொண்டிருக்கிறது.
தேடல் அனுபவத்தை இன்னும் சிறப்பாக ஆக்கித்தருவதில் கூகுல் போதும் என்ற மனநிலையை கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.இணையவாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய சின்ன சின்ன நுணுக்கங்களை கொண்டு வருவதை கூகுல் தனது கடமையாகவே கருதுகிறது.
இந்த நீண்ட முன்னுரை எதற்காக என்றால் கூகுல் அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ள சினஞ்சிறிய மாற்றத்திற்காக மேற்கொண்டுள்ள சோதனையை விவரிப்பதற்காக தான்.
கூகுலின் எளிமையான முகப்பு பக்கம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.மற்ற முகப்பு பக்கங்கள் போல எல்லாவிதமான தகவல்கள் மற்றும் அமசங்களை போட்டு அடைக்காமல் கூகுலின் முகப்பு பக்கம் மட்டும் படு சிம்பிளாக தேடல் மட்டிமே எங்கள் வேலை என்று சொல்லாமல் சொல்வது போல தேடல் கட்டத்தையும் கூகுல் லோகோவை மட்டும் பெற்றிருக்கிறது.தேடல் குறிப்புகளுக்கான சொற்கள் பட்டுமே உடனிருக்கும்.
கூகுலின் முகப்பு பக்கத்தை எளிமையின் அடையாளமாக சொல்லலாம்.இதைவிட ஒரு முகப்பு பக்கம் இருக்க முடியாது என்று கருதப்படும் நிலையில் கூகுல் இந்த முகப்பௌ பக்கத்தை மேலும் எளிமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஏற்கனெவே மெல்லிடை பெற்றுள்ள இளம்பெண் மேலும் இளைக்க முயற்சி செய்தால் எப்படி இருக்கும் .அது போலதான் கூகுலும் தனது முகப்பு பக்கத்தை மேலும் எளிமையாக்க திட்டமிட்டுள்ளது.கொடியிடைக்கு மேல் இளைக்க முடியாமல் போகலாம் ஆனால் கூகுலுக்கு மேலும் எளிமை சாத்தியம் என்றே தோன்றுகிறது.
அதாவது தேடல் கட்டம் மற்றும் கூகுல் லோகோ தவிர வேறு எதுவுமே இல்லாமல் முக்கப்பு பக்கத்தை கூகுல் வடிவமைத்துள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட இணையவாசிகளை கொண்டு இந்த பக்கத்தை கூகுல் பரிசோதித்து வருகிறது.
ஏற்கனவே கூகுலின் முகப்பு பக்கம் 30 சொற்களை மட்டுமே கொன்டிருக்கிறது. புதிய பக்கத்திலே அவை குறைந்தபட்ச சொற்களாக குறைக்கப்பட்டுள்ளது.தேவையற்றதை தவிர முகப்பு பக்கத்தில் இருக்க கூடாது,இருந்து இணையவாசிகளுக்கு இடையூறாக அமையக்ககூடாது என கூகுல் கருதுகிறது.அதன் பயனே இந்த பரிசோதனை.
இந்த மாற்றம் பயனுள்ளதாக அமைந்தால் கூகுல் அதனை நடைமுறைக்கு கொண்டு வரலாம்.
பாருங்கள் தேடல் மன்னனாக விளங்க கூகுல் எப்படியெல்லம் மெனக்கெடுகிறது.அது தான் கூகுலின் வெற்றி ரகசியம்.
———
கூகுலின் இந்த பரிசோதனை தளத்தை பயன்படுத்தும் வழி பற்றி டெக்கிரென்ச் தலம் ஒரு பதிவை எழுதியுள்ளது.
link;
http://www.techcrunch.com/2009/10/08/how-to-enable-the-super-spartan-totally-buttonless-google-home-page/

0 Comments on “மேலும் எளிமையாகும் கூகுல் முகப்பு பக்கம்”
kuppan_yahoo
google has been doing continuos improvement. Google works for the users.
I would say this century’s great invention is Google
கிரி
//இணையவாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய சின்ன சின்ன நுணுக்கங்களை கொண்டு வருவதை கூகுல் தனது கடமையாகவே கருதுகிறது//
இதை தாறுமாறாக வழிமொழிகிறேன் 🙂
நாம் நினைக்கும் நாம் பிரச்சனையாக கருதும் விசயங்களை அவர்கள் சரி செய்யும் போது..ஆச்சர்யமாக இருக்கும். இந்த பிரச்சனை எல்லாம் இவர்கள் கவனிக்கிறார்கள் என்று,
எடுத்துக்காட்டாக Google Transliteration ல் எழுத்துக்களை அடித்து விட்டு திருத்த நினைக்கும் போது மொத்தமாக தேர்வாகி கடுப்படித்துக்கொண்டு இருந்தது, தற்போது இதை சரி செய்து விட்டார்கள்…இது சிறிய உதாரணம் இதை போல ஜிமெயில் போன்றவற்றில் ஏகப்பட்ட வசதிகளை செய்து தந்து இருக்கிறார்கள்.
கூகிள் ஒரு அதிசயம் என்றால் மிகை இல்லை
n senapathy
dear brother, i am a lawyer practising at erode , tamilnadu, india. just now i has become a blogger. i want to blog in tamil. i am new to computer . could u help me ? if possiible?
sena
cybersimman
வலை உலகிற்கு நல்வரவு.
நீங்கள் வலைப்பதிவு துவங்கிவிட்டிர்களா என்பதை தெரிவிக்கவும். வலைப்பதிவை துவங்கிவிட்டு தமிழில் டைப் செய்வது தான் பிரச்சனை என்றால் தமிழ் எடிட்டர் டாட் ஒர்ஜி தளத்தை பயன்படுத்தவும்.மேலும் சில தளங்கள் உள்ளன. உங்கள் சந்தேகத்தை விரிவாக கேட்கவும்.
சிம்மன்
U.P.Tharsan
ஏன் இப்படி ஒரு சின்ன விசயத்துக்கு பெரிய இழுவையான பதிவு. ஒரே மாதிரி வார்த்தைகளும் அர்தங்களும் பல தடவை வந்து சலிப்பூட்டுகிறது. நன்றி
cybersimman
மிக மிக சின்ன விஷயம் தான். ஆனால் கூகுல் அதற்காக எவ்வளவு மெனக்கெடுகிறது என்பதை உணர்த்தவே இந்த பதிவு.சின்ன விஷ்யம் தானே என்ற அலுப்பும் அலட்சியமும் இல்லாமல் ஈடுபாடு காட்டுவதே கூகுலின் சித்தாந்தமாக இருக்கிறது.
சிம்மன்
kuttysamy
ரசித்தேன் வாழ்த்துக்கள் …