உலகில் எத்தனை பேருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுன்டா?
கடவுள் நம்பிக்கை கொன்டவர்கள் எத்தனை பேர் என்று தெரிந்து கொள்ள முயன்றதுன்டா?
மரணத்திற்கு பிந்தைய வாழ்வில் நம்பிக்கை கொன்டவர்கள் எவ்வளவு பேர் என்று யோசித்ததுண்டா?
இது போன்ற கேள்விகளில் ஆர்வம் மிக்கவர் நீங்கள் என்றால் உங்களுக்கான இணையதளம் ஒன்று இருக்கிறது.போஸ்ட்யுவர்.இன்ஃபோ இது தான் தளத்தின் பெயர்.
கேள்விகள்,பதில்கள்,புள்ளிவிவரங்கள் .இவற்றின் சுவார்ஸ்யமான கலவை தான் இந்த தளம்.உண்மையிலேயே சுவார்ஸ்யமான புள்ளிவிவரங்கள். மற்ற தளங்களில் பார்க்க முடியாத புள்ளி விவரங்கள்.உலகையும் சக மனிதர்களையும் புரிய வைக்கக்கூடிய புள்ளிவிவரங்கள்.
புள்ளிவிவரங்களே உலகை புரிந்து கொள்வதற்கான எளிய வழிகள் தான்.ஆனால் நமக்கு கிடைக்ககூடிய புள்ளி விவரங்கள் ஒவ்வொன்றும் ஒரு நோக்கம் கொண்டவை.அரசு புள்ளி விவரங்கள் சார்பு நிலை கொண்டவை என்றால் அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் அவற்றின் கொள்கை சார்ந்தவையாக இருக்கும்.
இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் குறிப்பிட்ட சில வரம்புகளுக்குள் அடங்கிவிடக்கூடியவை.
ஆனால் போஸ்ட்யுவர்.இன்ஃபோ தளத்தில் உள்ள புள்ளி விவரங்களோ பரந்து விரிந்தவை.பறக்கும் தட்டில் நம்பிக்கை கொன்டவர்கள் எதனை பேர் என்பதில் துவங்கி யாருக்கெல்லாம் அலர்ஜி இருக்கிறது என்பது வரை விதவிதமான கேள்விகள் தொடர்பான புள்ளிவிவரங்களை இந்த தளத்தில் பார்க்கலாம்.
இதைல் என்ன சுவார்ஸ்யம் என்றால் கேள்விகளுக்கான பதில்களையும் புள்ளிவிவரங்களாக பார்க்கலாம். நீங்களே கூட பதிலளிக்கலாம்.
மனதில் தோன்றும் எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதில் தேடும் வாய்ப்பை இண்டெர்நெட் வழங்கியிருக்கும் போது அதனை பயன்படுத்திக்கொண்டு புதிய பயனுள்ள புள்ளிவிவரங்களை திரட்டுவதே எங்கள் நோக்கம் என்கிறது இந்த தளம்.
அதற்கேற்ப பலவிதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.அவற்றுக்கு நிங்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் புள்ளிவிவரங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் பல்வேறு தலைப்புகளின் தொகுக்கப்பட்டுள்ளன.
பதில் அளிப்பது கட்டாயமில்லை.பதிவு செய்து கொள்ளவும் தேவையில்லை.பிடித்தமான தலைப்புகளில் உள்ள புள்ளிவிவரங்களை பார்த்து கொள்ளலாம்.
இதற்கு முன் பார்க்காத புள்ளிவிரங்களை பார்க்க் முடிவதோடு அவற்றுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளுங்கள் என இந்த தளம் அழைப்பு விடுக்கிறது.
இணையவாடிகளின் பதிலை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த தளத்தை புள்ளிவிவரங்களூக்கான விக்கிபீடியா என்றும் சொல்லலாம்.
அவற்றில் உள்ள டதகவல்கலை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதோடு உங்களுக்கு தேவைப்படும் நோக்கில் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
அதற்கேற்பவே உலகம் முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டர்களால் உருவாக்கப்படும் திறந்த நிலை தகவல் களஞ்சியம் என்றே தன்னை அழைத்துக்கொள்கிறது.சமூக புள்ளிவிவரங்கள் என்ற அடைமொழியையும் பொருத்தமாக போட்டுக்கொன்டுள்ளது.
————-

0 Comments on “புள்ளி விவரங்களுக்கான விக்கிபீடியா”
Saravanakumar
Thanks for your info
kuttysamy
,ரசித்தேன் வாழ்த்துக்கள் .
n senapathy
thank u simman
nsena