மூளையை வளர்க்கும் இணைய தேடல்

netbrainஇண்டெர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா?

முதல் தலைமுறை இண்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட்டல் தலைமுறை.இரண்டாவது தலைமுறை இண்டெர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை.30 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க வேண்டும்.

மூன்றாவ‌து த‌லைமுறை இண்டெர்நெட் என்றாலே ப‌ய‌ந்து ஒதுங்கி கொள்ளும் முத்த‌ த‌லைமுறை.விதிவிலக்கான‌ ஒரு சில‌ரைத்த‌விர‌ பெரும்பாலான‌ தாத்தா பாட்டிக‌ளை இந்த‌ பிரிவில் தான் சேர்க்க‌ வேண்டும்.

இப்ப‌டி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்ப‌ம் என்று க‌ருதக்கூடிய‌ தாத்த‌க்க‌ளுக்கும் பாட்டிக‌ளுக்கும் இண்டெர்நெட்டை அறிமுக‌ம் செய்து வைப்ப‌தை விட‌ பெரிய‌ சேவை வேறு இருக்க‌ முடியாது தெரியுமா?

இண்டெர்நெட் அறிமுக‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு புதிய‌ உல‌கை திற‌ந்துவிடும் என்ப‌து ஒருபுற‌ம் இருக்க‌ அது அவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கும் என்ப‌தே விஷ‌ய‌ம்.அதாவ‌து இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ ப‌யிற்சியாக‌ அமையும் என‌ தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அதிக‌ம் இல்லை ஒரு வார‌ கால‌ம் கூகுல் தேட‌லில் எடுப‌ட்டாலே போதும் பெரிய‌வ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு சுறுசுறுப்பாகி முடிவெடுக்கும் ம‌ற்றும் புரிந்து கொள்ளும் ஆற்ற‌ல் மேம்ப‌டுபவ‌தாக‌ க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டுள்ள‌து.

அமெரிக்காவைச்சேர்ந்த‌ யுசிஎல்ஏ என்னும் அமைப்பு இது தொட‌ர்பான‌ ஆய்வை ந‌ட‌த்தியுள்ள‌து.55 வ‌ய‌து முத‌ல் 78 வ‌ய‌தான‌வ‌ர்க‌ளை கொண்டு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட இந்த‌ ஆய்வில் எப் எம் ஆர் ஐ ஸ்கான் முறையில் முளையின் செய்ல்பாடு ஆல‌சி ஆராய‌ப்ப‌ட்ட‌து. ஆய்வில் ப‌ங்கேற்றோர் இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்தும் போது அவ‌ர்க‌ள் மூலையில் நிக‌ழும் ராசாய‌ண‌ மாறுத‌ல்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

அப்போது தேடலில் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு மிக‌வும் சுறுசுறுப்பாக‌ இருப்ப‌து க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து.முளையில் முடிவெடுக்க‌ ப‌ய‌ன்ப‌டும் ப‌குதியில் இந்த‌ செய‌ல்பாடு அமைந்திருந்த‌தை ஆய்வால‌ர்க‌ள் க‌வ‌னித்துள்ள‌ன‌ர்.

இந்த‌ வ‌கை செய‌ல்பாடு முடிவெடுப்ப‌து ம‌ற்றும் புரிந்து கொள்ளுத‌லில் முக்கிய‌ பாங்காற்றும் என்று க‌ருத‌ப்ப‌டுகிற‌து.என‌வே இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ ப‌யிற்சியாக‌ அமையும் என்று க‌ருதப்ப‌டுகிற‌து.ஒரு வார‌ கால‌ம் தேட‌லில் ஈடுப‌ட்டாலே போதுமான‌து என்றும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அல்சைம‌ர்ஸ் போன்ற‌ நினைவுத்திற‌ன் குறைபாட்டினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இணைய‌ தேடல் உத‌வ‌லாம் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

என‌வே உங்க‌ள் வீட்டில் பெரிய‌வ‌ர்க‌ள் இருந்து அவ‌ர்க‌ள் இண்டெர்நெட் விஷ‌ய‌த்தில் ப‌ய‌ந்தாங்கொலிக‌ளாக‌ இருந்தால் அவ‌ர்க‌ளுக்கு இண்டெர்நெட்டை க‌ற்றுக்கொடுப்ப‌து மிக‌ச்சிற‌ந்த‌ உத‌வியாக‌ இருக்கும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “மூளையை வளர்க்கும் இணைய தேடல்

  1. மிகவும் பயனுள்ள பதிவு. ஆனாலும் ஒரு உண்மையைச் சொல்லறேங்க – எனக்கு வயது ஐம்பத்தேழு – விருப்ப ஓய்வு பெற்ற பொறியாளர். ஒவ்வொரு நாளும் வலைப் பயணம் செய்வேன். வித்தியாசமானப் பதிவுகளைப் படித்து பாராட்டுவேன். இன்றைய சிறப்புப் பாராட்டு, உங்களின் இந்தப் பதிவிற்கு. வாழ்க வளமுடன்.

    Reply
  2. cybersimman

    மிக்க நன்றி .ஊக்கம் தரும் பாராட்டு.

    Reply
  3. இன்டர்நெட்டின் தலைமுறை அலசல் மிகவும் நன்றாக உள்ளது.

    Reply
  4. Siva

    நல்ல பதிவு. இதை படிக்கும்போது எனக்கு நினைக்கு வந்த ஒரு விஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். டெக்கான் குரோனிக்கில் இதழில் ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்னம் வந்த செய்தி என நினைக்கிறேன். இலத்தீன் அமெரிக்க நாடு ஒன்றில் இந்திய வம்சாவழி வந்த ஒரு 85 வயது முதியவரை பற்றிய செய்தி அது.

    அவர் எப்போதும் அறிவதில் ஆர்வமுடையவராகே இருப்பாராம். பல மொழிகள் அவருக்கு தெரியுமாம். கம்ப்யூட்டர் நிரல் மொழிகள் பல வற்றை தெரிந்து வைத்து ப்ரோக்ராம்கள் எழுதுவாராம். நாவீன இன்டர்நெட் டெக்னாலஜி அனைத்திலும் நல்ல சுய முயற்சியால் நல்ல புலமை நிலயை அடைந்து உள்ளார். அவர் தனக்காக ஒரு ப்லோக் வைத்து இருப்பதாகவும் தகவல். இப்போதும் ஒரு பல்கலைகழக பாடம் பிரிவில் கற்பதாக நினைவு. அவருடைய கருத்துப்படி கற்காவிட்டால் வாழ்தலின் அர்த்தம் இல்லை என்பதே. எப்போது கற்பதை நிறுத்துகிரோமோ அப்போதே நாம் இறந்து விடுகிறோம் என்று கூறி உள்ளார்.

    நம்மூரில் கூட ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் சமீபத்தில் MCA படித்துளதாக அறிகிறேன். கோவை அருகில் ஒரு பெரியவர் அறுபது வயதிற்கு பிறகு சுயமாக கணிதம் பயின்று பல கணித கண்டுபிடிப்புகளை மீள கண்டுபிடித்து உலக அளவில் அறியப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்து வந்தால் வயது என்ற ஒன்று மூளைக்கு பொருந்தாது என்றே தோன்றுகிறது.

    நன்றி.

    சிவா.

    Reply
    1. cybersimman

      மிக்கச்சரி நண்

      Reply
  5. நல்ல பதிவு. இதே விஷயத்தை பற்றி ஒரு படைப்பு http://www.manalkayiru.com பதிவிலும் விஜயசாரதி எழுதியிருக்கிறார் (கொஞ்சம் நகைச்சுவையாக).

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *