உங்களிடம் ஐஸ் எண் இருக்கிறதா?இல்லை என்றால் உடனடியாக ஐஸ் எண்ணை பெற முயற்சி செய்யுங்கள்.உங்கள் எதிர்காலத்திற்கு அது பயனுள்ளதாக இருக்கும்.
ஐஸ் எண் என்பது அவசர காலத்தில் கைகொடுக்க கூடிய மருத்துவ சேவையாகும்.உங்களால் பேச முடியாத நிலையில் உங்களுக்காக பேசக்கூடியதாக இந்த எண் இருக்கும் என்று இந்த சேவையை அறிமுகம் செய்துள்ள இண்டஸ் இன்போ ஸ்கிரிப்ட் நிறுவனம் தெரிவிக்கிறது.
ஐஸ் எண் என்றால் இன் கேஸ் ஆப் எமர்ஜென்ஸி என்பதன் சுருக்கமாகும்.அதாவது விபத்து போன்ற அவசர காலங்களில் உங்களைப்பற்றிய மருத்துவ விவரங்கள்உள்ளிட்ட தகவல்களை அளிக்கும் எண் .
வாகனங்கள் பெருக பெருக விபத்துகளும் பெருகி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.ஒவ்வொரு வினாடியும் உலகில் மூன்று பேர் விபத்தில் சிக்கி பலியாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.விபத்துகளால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் அல்லது ஊனம் அடைபவர்களை கணக்கில் கொன்டால் இந்த எண்ணிக்கை பத்து மடங்காக இருக்கும்.
சாலை விபத்துகள் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் உயிரை பறித்து விடுகிறது.விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளி தடுக்க உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம்.பலருக்கு இந்த சிகைச்சை கிடைப்பது இல்லை என்பது வேதனை என்பதோடு சிகைச்சைக்கு அழைத்துச்செல்லப்படும் பலர் சிகிச்சை பலனின்றி இறப்பது மிகப்பெரிய சோகம்.
இதற்கான முக்கிய காரணம் விபத்துக்குள்ளான நபர் பற்றி தேவையான மருத்துவ விவரங்கள் மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுவது தான்.விபத்துக்கு பின் சிகிச்சை அளிக்கும் போது நேரம் மிக மிக முக்கியம்.விபத்து நடந்த ஒரு சில மணி நேரத்தில் சிகிச்சை அளித்தல் உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அதிகமென்கின்றனர் மருத்துவர்கள். என்வே தான் முதல் சில மனி நேரங்கள் பொன்னான நேரம் என்று மருத்துவ துறையினரால் குறிப்பிடப்படுகிறது.
உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும் நோயாளி தொடர்பான முக்கிய மருத்துவ விவரங்கள் தெரியவிடால் சில நேரங்களில் விபரீதமாகிவிடும்.பாதிக்கப்பட்டவருகு ஏற்கனவே தரப்பட்டமருத்துவ சிகிச்சைகள்,அலர்ஜி தரக்கூடியமருந்துகள் போன்ற விவரங்கள் சரியான சிகிச்சை அளித்து உயிர் காக்க உதவும்.
ஆனால் விபத்தில் சிக்கியவர் மயங்கி கிடக்கும் நிலையில் இவற்றை மருத்துவர் எங்கிருந்து பெறுவார்?இந்த இக்கட்டான நிலையில் கைகொடுக்க தான் ஐஸ் எண் உருவாக்கபட்டுள்ளது.
இந்த எண்னை பெறும் உறுப்பினரின் சகலவிதமான மருத்துவ விரங்களும் செமித்து வைக்கப்பட்டிருக்கும்.அவருக்கு உள்ள நோய்கூறுகள், இதுவரை பெற்ற சிகிச்சைகள்,ஒவ்வாத மருந்துகள்,அறுவை சிகிச்சை விவரங்கள், பெற்றொர்களுக்கு உள்ள நோய்கூறுகள் உள்ளிட்ட தகவல்களை இந்த எண் கொண்டே மருத்துவர்கள் அணுக முடியும்.
இதைதவிர அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய குடும்ப உறுப்பினர்களின் தொலைப்பேசி எண்கள் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.இதன் மூலம் உரியவர்களுக்கு உடனடியாக தகவல் கிடைபதும் சாத்தியமாகும்.
எதிரபாராத விதமாக விபத்து ஏறட்டால் இந்த எண் உயிர் காக்க உதவும் என்பதை அளிதில் புரிந்து கொள்ளலாம்.விபத்து என்றில்லை இந்த எண்ணை பெற்று மருத்துவ வரலாற்றை சேமித்து வைப்பது என்பது எதிர்கால மருத்துவ தேவையின் போது உதவியாக இருக்கும்.
இந்த எண்ணை செல்போனில் பதிந்து வைப்பது தற்போது முக்கியமாக கருதப்படுகிறது. ஆபத்து காலத்தில் முதலுதவி தருபவர்கள் முதலில் இந்த எண்ணைதான் தேடுகின்றனர்.
இந்த எண்னை முகியமாக் கருதுபவர்கள் ஐஸ்ஹெல்ப்லைன் இணையதளத்திற்கு சென்று உறுப்பினராகி தங்களுக்கான எண்ணை பெற்றுக்கொள்ளலாம்.ஆண்டுகட்டணமாக 300 வசுலிக்கப்படுகிறது.
———

0 Comments on “ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் ஐஸ் எண்”
ஷாகுல்
thanks for info
செந்தழல் ரவி
ஐஸ் என்று போட்டு அதில் மனைவி நம்பரை சேவ் பண்ணி வைங்கப்பா.