மணமக்களுக்கான கூகுல். ஹெல்பர் ஆப் த பிரைடு இணையதளத்தை இப்படி வர்ணிக்கலாம்.
வடிவமைப்பில் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்திலும் கூகுலைப்பபோலவே இருக்கிறது இந்த தளம்.
திருமணத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் மணமகன் அல்லது மணமகள்கள் இந்த தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான திருமண சேவை தொடர்பான தகவலகளையும் பெற முடியும்.அந்த வகையில் திருமண தகவல்களுக்கான கூகுலாக இந்த தளம் விளங்குகிறது.
திருமணம் தொடர்பாக எந்த தகவல் வேண்டுமோ அதனை டைப் செய்தால் போதும் அதற்கான தகவல்களும், அந்த சேவை குறித்த விமர்சன குறிப்புகளும் பட்டியலிடப்படுகிறது.
தேடல் கட்டத்தை தவிர முகப்பு பக்கத்தில் வேரு எதுவும் கிடையாது.அந்த அளவுக்கு எளிமையாக உள்ளது .
தேடும் வசதியோடு ஏற்கனெவே தேடியவர்கள் பயனபடுத்திய தேடல் பட்டியலையு பார்க்கும் வசதியும் இருக்கிறது.இந்த பட்டியலில் உலா வந்தால் மற்றவர்கள் தேடியதை கொண்டு திருமணத்திறகான புதிய யோசனைகளையும் பெற முடியும்.
ஆனால் அமெரிக்காவை மையமாக கொண்ட தளம்.எனவே நம்மவர்கள் பார்த்து பாராட்டலாமேத்தவிர அதிகம் பயன்படுத்த முடியாது.
திருமண அழைப்பிதழ் தொடர்பான நம்மூர் இணையசேவை பற்றிய எனது முந்தைய பதிவை பார்க்கவும்.
—————-
link;
http://www.helperofthebride.com/
——–
link;
http://cybersimman.wordpress.com/2009/08/19/wedding/