எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் இண்டெர்நெட்டை பயன்படுத்த அனுமதிப்பது தானே முறை.இப்படி கேட்டிருப்பது டென்மார்க் நாட்டு கல்வித்துறை.
அந்நாட்டில் ஏ கீரேடு என்று சொல்லப்படும் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத இண்டெர்நெட்டை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை நியாயப்படுத்தும் வகையில் இந்த கருத்து முன்வைகப்பட்டுள்ளது.தலைநகர் கோப்பன்ஹேகன்னில் உள்ள பள்ளி உட்பட நாடு முழுவதும் உள்ள 14 பள்ளிகளில் இந்த முறை அமல் செய்யபட்டுள்ளது.
டென்மார்க் இன்டெர்நெட் பய்ன்பாட்டைப்பொருத்தவரி முன்னணியில் உள்ள நாடு. அங்குள்ள பள்ளிகளில் பாடங்களை கற்பிக்க இண்டெர்நெட் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மாணவர்கள் பள்ளிக்கு லேப்ட்டாப்போடு வருவது அங்கே சர்வ சாதரணம்.தேர்வுகளின் போது கூட கேள்வித்தாள் டிஜிட்டல் வடிவில் தரப்படுகிறது.
இப்படி சகலமும் இண்டெர்நெட் மயமாகி வரும் போது கல்வி கற்பிப்பதே ஈன்டெர்நெட் சார்ந்து இருக்கும் போது தெர்வு அறையில் மட்டும் இண்டெர்நெட்டுக்கு தடை என்றால் சரியாக இருக்குமா?மேலும் மாணவர்கள் எல்லா இடங்களிலும் இண்டெர்நெட்டை பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது தேர்வில் வேண்டாம் என்று சொன்னால் ஏற்க கூடியதாக இருக்குமா?
எனவே தான் துணிந்து தேர்வு எழுதும் போது இண்டெர்நெட்டின் துணையை நாடலாம் என்று அறிவித்துள்ளனர்.
பாரம்பரியத்தில் ஊறித்திளைத்த கல்வியாளர்கள் இந்த செய்தியால் திகைத்துப்போகலாம்.இண்டெர்நெட்டை தேர்வு அறையில் அனுமதித்தால் முறைகேடு நடைபெற வழி வகுக்ககாதா என அவர்கள் பதறலாம்.
ஆனால் இண்டெர்நெட் தினசரி வாழ்வின் அங்கமான பின் தேர்விலும் அதனை அனுமதிப்பது காலத்தின் கட்டாயம் என்று டென்மார்க் அரசு கருதுகிறது.அதனால் தான் தகுந்த கட்டுப்பாடுகளோடு இண்டெர்நெட்டிற்கு அனுபதி வழங்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதும் மாணவர்கள் ஃஃபேஸ்புக் உள்ளிட்ட எந்த தளத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.ஆனால் இமெயில் அனுப்பவோ வேறு யாரையேனும் தொடர்பு கொள்ளவோ அனுமதியில்லை.
இத்தகைய கட்டுப்பாடைவிட மாணவ்ர்களின் நேர்மையின் மீது அதிக நம்பிக்கை வைத்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளனராம்.இந்த முயற்சி வெற்றி பெற்றால் அடுத்தசில ஆண்டுகளில் நாடு முழுவதும் இந்த முறை அமலுக்கு வருமாம்.

0 Comments on “தேர்வு அறையில் இண்டெர்நெட் வசதி”
kuppan_yahoo
Informative post, thanks for sharing this interesting news.
I appreciate Denmark Govt. well done
Let us not make students to mug up the books and vomit in the exam papers.
செந்தழல் ரவி
நல்ல மாற்றம். இது நான் எதிர்பார்த்த ஒன்றே.