வரைபடத்தை பார்த்தே சென்னை நகரில் எந்த இடங்களில் எல்லாம் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?
அப்படி தெரிந்து கொள்ள முடிந்தால் குறிப்பிட்ட இடத்தில் வழிபறி அதிகம் நடந்து வருவதை உணர்ந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா? அதே போல் வேறொரு இடத்தில் இரவு நேர திருட்கள் திடீரென அதிகரித்து வருவதை தெரிந்து கொள்ள முடிந்தால் அதற்கேற்ப தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் அல்லவா?
இவை எல்லாம் அப்படி ஒன்றும் கஷ்டமான விஷயங்களும் இல்லை! மேலும் சென்னை நகரம் என்றில்லை. உலகின் வேறு எந்த நகருக்கும் கூட பொருந்தி வரக்கூடிய விஷயம்தான்!
இதற்கு நமக்கு தேவைப்படுவதெல்லாம் விக்கி கிரைம்ஸ் (wikicrimes) போன்றதொரு இணையதளம்தான்!
கால்பந்துக்கு பெயர் பெற்ற தென்னமெரிக்க நாடான பிரேசிலில் எந்தெந்த இடத்தில் எந்த வகையான குற்றங்கள் நடக்கின்றன என்பதை பார்த்த மாத்திரத்திலேயே இந்த தளம் உணர்த்தி விடுகிறது. அதுவும் அழகாக அந்நாட்டின் வரைபடத்தின் மீது இந்த விவரங்கள் சுட்டிக் காட்டப்படுகிறது.
பிரேசிலின் டிஜிட்டல் வரைபடத்தின் மீது கொடி பறப்பது போல சின்ன சின்ன கம்பங்கள் மின்னிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு கம்பத்திற்கு பின்னும் ஒரு குற்றம் நடைபெற்றிருக்கிறது என்று பொருள். அந்த கொடி கம்பத்தை கிளிக் செய்தால் அங்கு
எப்போது என்ன குற்றம் நடந்தது என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
கொடிக்கம்பங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தால் அந்தப் பிராந்தியத்தில் குற்றங்கள் குறைவாக இருப்பதற்கான அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம்.
மாறாக நெரிசல் நேர போக்குவரத்து போல கொடிக்கம்பங்கள் அடர்த்தி யாக இருந்தால் அங்கு குற்றங்கள் அதிகம் என உஷாராகலாம்.
இதை தொடர்ந்து கவனிப்பதன் மூலமே குற்றங்களின் போக்கையும் அவற்றின் எண்ணிக்கை கூடுகிறதா, குறைகிறதா போன்ற விவரங்களை யும் தெரிந்து கொள்ளலாம்.
சுருக்கமாக சொன்னால் குற்றங்களுக்கான வரைபடமாக இந்த தளம் விளங்குகிறது.
அட பரவாயில்லையே, நல்ல விஷயமாக இருக்கிறதே. பிரேசில் போலீசுக்கு ஒரு சபாஷ் போடலாமே என்று அந்நாட்டு காவல் துறையை பாராட்ட நினைத்தால் கொஞ்சம் பொறுங்கள், இந்த தளத்திற்கும், பிரேசில் காவல் துறைக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. இதன் பின்னே இருப்பது அந்நாட்டு பொதுமக்கள்தான்!
“விக்கி கிரைம்ஸ்’ என்ற பெயரை பார்த்தவுடனேயே இது சாமான்யர்களின் பங்களிப்பு சார்ந்த தளமாக தான் இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டிருக்கலாம்!
ஆம்! சாமான்ய நிபுணர்களின் பங்களிப்போடு உருவான மகத்தான இன்டெர்நெட் கலைக்களஞ்சியமான புகழ்மிக்க விக்கிபிடியாவைப் போல இந்த தளமும், குற்றங்களுக்கான விக்கிதான்!
பிரேசில் நாட்டில் போர்டலேசா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் அறிவியல் பேராசிரியராக இருக்கும் டாக்டர் வாஸ்கோ பர்டாடோ என்பவர்தான் இந்த தளத்தை உருவாக்கியவர். மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியலை பயிற்றுவிப்பதோடு கம்ப்யூட்டர் சார்ந்த ஆய்வுப்பணிகளிலும் “பர்டாடோ’ ஆர்வம் மிக்கவர். ஆய்வுப்பணி சார்ந்த திட்டங்களில் அவர் தனது மாணவர்களையும் ஈடுபடுத்தி வருகிறார். கம்ப்யூட்டர் சார்ந்த அறிவை நடைமுறை பிரச்சனைகளுக்கு தீர்வு காண எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதே இவரது பிரதான நோக்கமாக இருக்கிறது.
அந்த வகையில்தான் குற்றங்களுக் கான டிஜிட்டல் வரைபடமாக விக்கி கிரைம்சை உருவாக்கி உள்ளார்.
திருட்டுக் கொடுப்பதோ, வழிபறி ஆசாமிகளிடம் சிக்கிக் கொள்ளும் அனுபவமோ யாருக்கு வேண்டு மானால் ஏற்படலாம். இத்தகைய நேரங்களில் பொருட்களை பறிகொடுத்தவர்கள் (அ) இந்த சம்பவத்திற்கு சாட்சியாக இருந்தவர்கள் செய்வது என்ன? பலர் போலீசில் புகார் கொடுக்க முற்பட்டாலும் பெரும்பாலானோர் தங்களுக்கு நேர்ந்த அனுபவம் பற்றி தெரிந்தவர்களிடம் புலம்புவதோடு நிறுத்திக் கொள்வதாக டாக்டர் வாஸ்கோ கூறுகிறார்.
காவல்துறை மீதான அவநம்பிக்கை மற்றும் நாம் ஏன் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருப்பதாலேயே பெரும் பாலானோர் புகார் அளிக்க முன் வருவதில்லை என்கிறார் அவர்.
புகார் கொடுக்கின்றனரோ இல்லையோ, நடந்த சம்பவத்தை நண்பர்கள், தெரிந்தவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றனர் அல்லவா? அதற்காக என்று ஒரு இணைய தளத்தை அமைத்துக் கொடுத்தால் அதுவே சொல்லாத சேதிகளை சொல்லுமே என்று நினைத்தார். இதன் பயனாக உருவானதே “விக்கி கிரைம்ஸ்’.
திருட்டுக் கொடுக்க நேர்ந்தவர்கள், வழிபறிக்கு ஆளானவர்கள் (அ) கொள்ளை அடிக்கப்பட்டவர்கள் அந்த விவரத்தை இந்த தளத்தின் மூலம் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் நுழைந்து பெயர் மற்றும் இமெயில் முகவரியை தெரிவித்த பின் வரைபடத்தில் குற்றம் நடந்த இடத்தை தேர்வு செய்து என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். பின்னர் அந்த இடத்தில் குற்றத்துக்கான கொடிகம்பம் தோன்றி நிற்கும். என்ன வகை குற்றம் என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம். நடந்த குற்றத்தை நேரில் பார்த்த சாட்சிகளும், அது பற்றிய விவரத்தை பதிவு செய்யலாம்.
கூகுலின் வரைபட சேவை இதற்காக பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கிறது.
இதனால் குற்றங்களுக்கு தீர்வு பிறக்க வழியில்லை என்றாலும் குற்றங்கள் அதிகம் நிகழும் பகுதியை தெரிந்து கொள்ள நிச்சயம் உதவியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் குற்றங்களை புகார் செய்யும் சமூக கடமையை வம்பு வழக்கு என்ற அச்சம் இல்லாமல் பாதுகாப்பாக அதனை நிறைவேற்றலாம்.
தற்போது குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் காவல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. காவல் துறை ஒரு போதும் குற்ற நிலவரத்தை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொண்டதில்லை. அடக்கி வாசிப்பது, மூடி மறைப்பது போன்ற உத்திகளை எல்லாம் பின்பற்ற தயங்க மாட்டார்கள். இதை மீறி நாட்டு நடப்பை உலகத்தின் அடிப் படையில்தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே குற்றங்கள் சார்ந்த புரிதல் மிகைப்படுத்தப் பட்டதாகவும் அமைந்து விடலாம்.
ஆனால் விக்கி கிரைம்ஸ் போன்ற தளத்தின் மூலம் இத்தகைய விவரத்தை சாமான்யர்களே உருவாக்கி கொள்ளலாம்!
—————

0 Comments on “குற்றங்களுக்கு ஒரு விக்கி”
சதீஷ்
தென்னாப்பிரிக்க நாடான பிரேசிலில்?????????
தென்னமெரிக்காவிலிருந்து பிரேசில் பிரிந்து விட்டதா..?
சொல்லவே இல்ல..
cybersimman
thank you for pointing the mistake.