தேடல் முடிவுகளை துல்லியமாக தருவதற்காக கூகுல் தலை நிமிர்ந்து நிற்பதே வழக்கம்.ஆனால் எப்போதாவது தேடல் முடிவுக்காக தலை குணிந்து நிற்கும் நிலையும் ஏற்படுவதுண்டு. இந்த நிலை மிகவும் அரிதானது தான் எனறாலும் அப்படியொரு தர்மசங்கடம் கூகுலுக்கு ஏற்பட்டிருக்கிறது.அதற்காக கூகுல் மன்னிப்பும் கேட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி தொடர்பான ஒரு ஆட்சேபகரமான புகைப்படம் தேடல் பட்டியலில் முதலில் இடம்பெற்றிருந்ததை அடுத்து கூகுல் மன்னிப்பு கேட்டுள்ளது.
வகுப்பில் முதல் இடத்தைபிடிக்கும் மாணவணுக்கு ஒரு இலக்கணம் இருப்பது போல் தேடல் பட்டியலில் முதல் இடத்தை பிடிபதற்கும் ஒரு இலக்கணம் இருக்கிறது.பெரும்பாலும் பொருத்தமான முடிவுகளே முதல் இடத்தை பிடித்திருக்கும்.
பிரபலங்கள் எனறால் அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்,இல்லை விக்கிபீடியா பக்கம் இப்படி முதல் முடிவு அநேகமாக நச் சென்று இருக்கும்.புகைப்பட தேடலிலும் இதே நிலை தான்.
ஆனால் ஒபாமா மனைவியின் பெயரை குறிப்பிட்டு புகைப்பட தேடலில் ஈடுபடும் போது முதல் படம் திடுக்கிட வைக்கிறது.மிச்சிலி ஒபாமாவை இனரீதியாக இழிவுபடுத்தும் வகையில் அந்த படம் அமைந்துள்ளது.
இணையத்தில் இது போன்ற அவதூறான தகவல்களும் புகைபடங்களும் இருக்கவே செய்கின்றன. தேடியந்திரங்களை இதற்கு பொறுப்பேற்க வைக்க முடியாது தான்.ஆனால் பிரச்சனை என்னவென்றால் இத்தகைய தகவல் அலது புகைப்படம் தேடல் படியலில் முதலில் வந்து நிற்பது தான்.
முதல் முடிவு மணி மணியான முடுவுகளாக இருக்க வேண்டும் என்று எதிரப்பார்க்கபடும் நிலையில் முதல் முடிவே சோதிக்க கூடியாதாக இருந்தால் எப்படி? ஒபாமா மனைவியின் மோசமான படத்தை பார்த்தவ்ர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.
ஆனால் நல்லவேளையாக அந்த படத்தின் மேல் கூகுல் ஒரு விளம்பர பெட்டியை போட்டு வைத்துள்ளது. அதில் எப்போதாவது அவதூறான தகவல்கள் கூகுல் தேடல் பட்டியலில் இடம் பெறுவது சாத்தியமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேடல் முடிவுகளை பட்டியலிட சிக்கலான சூத்திரம் பின்பற்றப்படுவதால் சில நேரங்களில் தவறு நிகழ வாய்ப்புள்லது என்றும் விளக்கமளிக்கப்படுள்ளது.
சில நேரங்களில் இத்தகைய தகவல்கள் அல்லது புகைப்படம் நீக்கப்படலாம் என்றும் கூறியுள்ள கூகுல் இந்த புகைப்படத்தால் மன வேதனை ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் மிச்சிலியின் இந்த புகைபடம் எப்படி முதல் இடத்தைபிடித்தது என்று விளக்கமளிக்கவில்லை.
பொதுவாக பதிவுகளுக்கு தொடர்புடைய இணைப்புகளை வழங்குவது என் வழக்கம்.இருப்பினும் இந்த பதிவைப்பொருத்தவரை இணைப்பை தராமல் இருப்பதே சரி என கருதுகிறேன்.

0 Comments on “கூகுலின் தர்மசங்கடம்”
Vetrikondaan
Also find “sonia ganthi ” in google image
Arul
http://www.seroundtable.com/archives/021162.html
see here.. google remove that image when searching image like http://images.google.com/images?q=Michelle%20Obama