பதிவு திருடர்களுக்கு ஒரு கோரிக்கை.

இலக்கிய திருட்டு போல பதிவுகள் திருட்டும் சகஜமானது தான்.ஆனால் அதனை நேரில் அனுபவிக்கும் போது வேதனையாகவும் கலக்கமாகவும் இருக்கிற‌து.

ஐபோனில் மோனோலிஸா என்னும் பெயரில் நான் எழுதிய பதிவு வேறொரு பதிவரின் வலைப்பதிவில் அவரது பதிவு போல இடம்பெற்றிருப்பது கண்டு திடுக்கிட்டுப்போனேன்.’அறிய உலகம்'( http://ariyaulagam.blogspot.)என்னும் பெயரிலான அந்த வலைப்பதிவிற்கு சென்று பார்த்த போது என்னுடைய மேலும் பல பதிவுகள் அதில் இடம்பெற்றிருப்பது கண்டு மேலும் திடுக்கிட்டுப்போனேன்.

இதில் என்ன வேடிக்கை என்றால் விகடன் மின்னிதழில் நான் எழுதிய கட்டுரையின் பதிவில்,விகடனுக்கு நன்றி தெரிவித்திருப்பேன்,அதை மட்டும் நீக்கிவிட்டு அந்த பதிவு இடம் பெற்றுள்ளது. இப்படியாக மூளையை வளர்க்கும் இணைய தேடல் , டிவிட்டரில் இணைய தந்தை
,பாத‌ங்க‌ளுக்காக‌ ஒரு இணைய‌த‌ள‌‌ம் ,வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை ,கணவில் வரும் மர்ம மனிதனும்,ஒரு இணையதளமும் ,உள்ளிட்ட பல பதிவுகள் எந்த மாற்றமும் இல்லாமல் அந்த வலப்ப‌பதிவில் இட‌ம் பெற்றுள்ள‌ன‌.

இந்த‌ ப‌திவு திருட்டு உண்மையிலேயே வ‌ருத்த‌ம‌ளிக்கிற‌து.இது நேர்மைய‌ற்ற செய‌ல் என்ப‌து ஒருபுற‌ம் இருக்க‌ ,இந்த‌ ப‌திவுக‌ளை முத‌லில் ப‌டித்துவிட்டு என் வலைப்பதிவுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் என்ன‌ நினைப்பார்க‌ள்?

இண்டெர்நெட் சார்ந்த‌ ப‌ய‌னுள்ள‌ த‌க‌வ‌ல்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌ வேண்டும் என்ற‌ விருப்ப‌த்தில் ப‌ணிச்சுமைக்கு இடையே ப‌திவிட்டு வ‌ருகிறேன்.இந்த‌ ப‌திவுக‌ள் வேறொருவ‌ரின் உழைப்பு போல் திருட‌ப்ப‌டுவ‌து அய‌ர்ச்சியை த‌ருகிற‌து.

என‌வே ச‌ம‌ப‌ந்த‌ப‌ட்ட‌ அந்த‌ ப‌திவ‌ர் இந்த‌ செய‌லை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என் ப‌திவுக‌ளை எடுத்தாளும் ப‌ட‌ச‌த்தில் அது என் ப‌திவில் இருந்து எடுக்கபப்ப‌ட்ட‌து என‌ குறிப்பிட‌ப்ப‌டும் நேர்மையை ம‌ட்டுமே நான் எதிர்பார்க்கிறேன்.பல பதிவர்கள் இதனை செய்துள்ள‌னர்.

நாம் பார்த்த‌ ந‌ல்ல‌ ப‌திவுக‌ளை அத‌ன் ப‌திவாளரை குறிப்பிட்டு மிண்டும் ப‌திவிடுவ‌து அத‌னை ப‌கிர்ந்து கொள்ளும் நோக்க‌த்தோடு செய்ய‌ப்ப‌டுவ‌து. வ‌லைப்ப‌திவுல‌கில் இது ப‌ர‌வ‌லாக‌ உள்ளது. திருட்டை கைவிட்டு இப்ப‌டி செய்ய‌லாமே.இது எல்லோருக்குமே ந‌ல‌ன் ப‌ய‌க்கும்.

அன்புட‌ன் சிம்ம‌ன்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பதிவு திருடர்களுக்கு ஒரு கோரிக்கை.

  1. நண்பரே இது போல் நம் தொழில்நுட்ப பதிவர்களின் திருட்டு அதிகம் உள்ளது என்ன செய்வது இந்த திருடர்ளை ஒழிக்க ஒரு வழியும் தெரியாமல் நானும் விட்டு விட்டேன். ஆனால் இவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ளா விரும்புகிறேன். இந்த திருட்டு தொழில் செய்வதற்கு அவர்கள் தேமேயென்று வேறு ஏதாவது செய்யலாம். என்னுடைய பதிவு திருடப்பட்டு நான் எழுதிய பதிவு http://gouthaminfotech.blogspot.com/2009/06/blog-post_11.html இது போல் பதிவுலகத்தில் நிறைய நடப்பதால் யாரும் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு நேரத்தை செலவழித்து எழுதும் பொழுது வரும் சந்தோசம் இவர்களை போல் உள்ளவர்களால் கண நேரத்தில் அழிந்துவிடுகிறது. அதனால் அதை மறப்பதே சாலச்சிறந்தது.

    Reply
  2. என்னுடைய பதிவு எனக்கே மின்னஞ்சலில் வந்ததுண்டு

    Reply
  3. சரவணகுமரன்

  4. இதெல்லாம் ஒரு பொழப்பா…..இவனுங்களுக்கெல்லாம் சூடு, சொரனை இப்படி எதுவுமே இல்லைன்னு நெனக்கிறேன்! உங்கள் முயற்ச்சிக்கு பலன் கிடைக்கட்டும் சிம்மன்!

    Reply
  5. வேதனை தான், ஆனால் இதில் ஒரே மகிழ்ச்சி தரும் விஷயம், உங்களின் பதிவை மற்றவர் திருடும் அளவிற்கு அதில் உங்களின் உழைப்பும், உங்களின் எழுத்திற்கு மதிப்பும் இருக்கிறது என்பது தான். யாரும் மதிப்பில்லாதவற்றை திருடுவதில்லை..

    Reply
  6. my congraulation for your tv programme.

    Reply
  7. இது போன்ற செயல்கள் படைப்பாளனுக்கு விரக்தியையும், சோர்வையும் உண்டாக்கும்.இதற்கும் மாமா வேலை பார்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு தன் இனிஷியலைப் போட்டு பெருமைப்படும் மலடிகள். மறப்போம் மன்னிப்போம்.இந்த பதிவர்களை பதிவர்கள் என்று கருதுவதே தவறு copy paster என்று அழைக்கலாம்.

    நீங்கள் செய்துவரும் சேவையைப் பாராட்டுகிறேன்.

    அன்புடன்
    ராஜசுப்ரமணியன் S.

    Reply
  8. தமிழ் அன்பன்

    அவர்கள் யாவரும் அலிகள் அவர்களாக குழந்தை பெற்றுகொள்ளமுடியாது அதனால்தான் திருடுகிறார்கள்

    Reply
  9. கோபங்களால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. விஞ்ஞான முறையில் முயன்றிடுவோம்.!

    – ஜெகதீஸ்வரன்.
    http://sagotharan.wordpress.com

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *