பிடிஎஃப் பிரியர்கள் என்று யாராவது இருக்கின்றனரா? அதே போல் பிடிஎஃப் வெறுப்பாளர்கள் இருக்கின்றனரா?
என்னைப்பொருத்தவரை சில நேரங்களில் நான் பிடிஎஃப் ஆதரவாளர்.சில நேரங்களில் பிடிஎஃப் விரோதி.
பிடிஎஃப் என்பது ஒரு கோப்பு வடிவம்.ஆவனங்களை பரிமாரிக்கொள்ள அடோப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.துவக்கத்தில் பிடிஎஃப் கோப்புகளை உருவாக்குவதும் அவற்றை வாசிப்பதும் கடினமாக இருந்தது. இதற்கு அடோப் மென்பொருள் தேவை.இதனால் இண்டெர்நெட்டில் பிடிஎஃப் கோப்புகளை அனுப்புவதும் பெறுவதும் சிக்கலானதாக இருந்தது.
ஆனால் பிறகு அடோப் இறங்கி வந்து பிடிஎஃப் கோப்புகளை வாசிப்பதற்கான ரீடர் மென்பொருள் கிடைப்பதை சுலபமாக்கியது.கடந்த ஆண்டு இது ஒபன் சோர்ஸ் முறைக்கு கொண்டு வரப்பட்டது.
இதெல்லாம் தொழில்நுட்ப விவரங்கள்.விஷயம் என்னவென்றால் பிடிஎஃப் கோப்புகள் குறிப்பிட்ட இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உதாரணத்திற்கு தமிழில் ஒரு செய்தியை அனுப்பும் போது பிடிஎஃப் கோப்பாக மாற்றும் பட்சத்தில் எழுத்துரு பிரச்ச்னை எழாது.அதனை அப்படியே திறந்து வாசிக்கலாம்.
இதே போல செய்தி மடல் போன்றவற்றை அனுப்ப இந்த வடிவமே ஏற்றது.வாழ்த்து அட்டை மற்றும் அழைப்பிதழ்களுக்கும் இது பொருந்தும்.இந்த காரணங்களினால் நான் பிடிஎஃப் ரசிகன்.
ஆனால் சில நேரங்களில் பிடிஎஃப் பொருமையை சோதித்துவிடும்.உதாரணத்திறகு தகவல்களை தேடிக்கொண்டிருக்கும் போது பிடிஎஃப் கோப்புகள் வந்து நின்றால் சிக்கலாகிவிடும்.சாதரண வடிவிலான் கோப்பாக இருந்தால் உடனே காபி செய்து கொள்ளலாம்.அல்லது சுலபமாக பிரிண்ட் கொடுத்துவிடலாம்.பிடிஎஃப் கோப்பு என்றால் இதெல்லாம் சாத்தியமில்லை.
அதோடு அடோப்பின் சமிபத்திய மென்பொருளை கொண்டு உருவாக்கப்பட்ட கோப்பாக இருக்குமானால் நம்மிடம் இருக்கும் பழைய அடோப் ரீடர் மென்பொருளை கொண்டு அதனை வாசிக்க இயலாது.இது போன்ற காரணங்களினால் எனக்கு பிடிஎஃப் கோப்புகளை பிடிக்காது.
நிற்க என் விருப்பு வெறுப்பு பற்றியதல்ல இந்த பதிவு.இத்தகைய சிக்கல்கலை மீறி பிடிஎஃப் கோப்புகளை பயன்படுத்துவதற்கான இணையதளம் பற்றி அறிமுகம் செய்யவே இந்த பதிவு.
ஃபிரிமைபிடிஎஃப் என்னும் பெயரிலான அந்த தளம் பெயருக்கு ஏற்பவே பிடிஎஃப் கோப்புகளை விடுவித்து தருகிறது.
நீங்கள் பயன்படுத்த விரும்பும் பிடிஎஃப் கோப்பு அலது பயன்படுத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் பிடிஎஃப் கோப்பை இங்கு சமர்பித்தால் அந்த கோப்பில் உள்ள பூட்டுகளை எல்லாம் நீக்கி சுலபமாக வாசிக்க மற்றும் அச்சிட வசதி செய்து தருகிறது.
பிடிஎஃப் கோப்புகளை அடிக்கடி எதிர்கொள்பவர்களுக்கு பயனுள்ள தளம் இது.
—-
link;
http://freemypdf.com/

16 Comments on “பிடிஎஃப் கோப்புகளை விடுவிப்பது எப்படி?”
மதிவேங்கை
வணக்கம்
உமது பதிவு (அனைத்து இடுகைகளும் ) மிக்க பயனுள்ளதாக இருந்தது .தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை தமிழில் தருவது ,தமிழுக்கும் தமிழருக்கும், நீங்கள் செய்யும் பேருபகாரம் ஆகும் . மேலும் உங்கள் இடுகை பல பேரைச் சென்றடைய பின்வரும் “FACEBOOK” குழுவில் இணைந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன் …http://www.facebook.com/pages/tami-Tamil/141482842472?v=wall&ref=ts
உமது அடுத்த பதிவில் சந்திப்போம்.
நன்றி ..
cheena (சீனா)
பயனுள்ள தகவல் – நண்பா
பயன்படுத்திப் பார்க்கிறேன்
நல்வாழ்த்துகள்
கருவாச்சி
அன்பு சிம்மா
அருமையான பதிவு
நிறைய pdf பைல்களை மாற்ற வசதியாக இருந்தது
சரியான நேரத்தில் கிடைத்த மறக்க முடியாத உதவி நண்பரே
cybersimman
welcome
Pingback: இணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற.. « Cybersimman's Blog

Pingback: பி டி ஃஎப் கோப்புகளை இணைக்க உதவும் இணையதளம் « Cybersimman's Blog

Pingback: பிடிஎஃப் கோப்புகளை விடுவிப்பது எப்படி « தமிழ் இணைய நண்பன்
rajulu
dear sir
i want to pdf writer or editer. if you have any free softeware please sent my mail address. thanks advance
rajulu
mumbai
cybersimman
please try http://www.pdfeditor.net/ or try http://www.freedownloadscenter.com/Search/pdf_editor.html
Pingback: பிடிஎஃப் பூட்டை நீக்க ஒரு இணையதளம் « Cybersimman's Blog
Pingback: பிடிஎஃப் பூட்டை நீக்க ஒரு இணையதளம் | gold's space
Pingback: Computertips » பிடிஎஃப் கோப்புக்களை விடுவிப்பது எப்படி ?
Pingback: இணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற.. | Kulasai - குலசை
cybersimman
thanks for sharing