எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்று ஐபோனுக்கான செயலிகள் பற்றிய பாராட்டு புளித்துப்போகும் அளவுக்கு பழசாகிவிடாலும் கூட இந்த வாசகத்தை மெய்பிக்கும் புதிய செயலிகள் அறிமுகாகி கொண்டுதான் இருக்கின்றன.ஒவ்வொரு செயலியும் ஒருவிதத்தில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதே சிறந்த விஷயம்.
இந்த பதிவை எழுத தூண்டிய செயலியை பற்றி கூற வேண்டும் என்றால் செயலிகளின் பயன்பாட்டை ஒருபடி மேலே எடுத்துச்சென்றுள்ள செயலி என்று சொல்லலாம்.அல்லது ஐபோனை வைத்திருப்பவர்களின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் செயலி என்று சொல்லலாம்.
ஐபோனுக்கான லட்சக்கணக்கில் செயலிகள் உருவாக்கப்படுள்ளன.எல்லாமே குறிப்பிட்ட பயன்பாட்டை கொண்டவை. இந்த செயலியோ பயனாளியின் செல்போன் சேவை குறைபாடு தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்க்காக உருவாக்கப்பட்டுள்ளது எனபது தான் கவனிக்க வேண்டிய சங்கதி.
ஐபோனுக்கான செல்போன் இணைப்பு சேவையை வழங்கி வரும் ஏ டி அண்டு டி நிறுவனமே இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது என்பது அதைவிட முக்கியமானது.
இந்த செயலியை டவுண்லோடு செய்து கொண்டால் செல்போன இணைப்பு சேவை மோசமாகும் போது உடனே நிறுவனத்திற்கு தெரிவிக்கலாம்.அதாவது டிராப்டு கால் என்னும் குறைபாடு ஏற்படும்போது அந்த இடத்திலிருந்தே தெரிவிக்கலாம்.இதன் மூலம் நெட்வொர்க்கில் உள்ள குறைபாட்டை நிறுவனம் புரிந்து கொண்டு சரி செய்ய இயலும்.
நம்மூரில் ஐபோனும் இந்த அளவுக்கு பிரபலமாகிவில்லை. அதன் செயலிகளும் பிரபலமாகவிலை.
ஆனால் இப்படி செல்போன் சேவை குறைபாடு தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வசது உள்ளங்கையிலேயே இருந்தால் நன்றாகதானே இருக்கும்.

0 Comments on “இதுதாண்ட செயலி ;உள்ளங்கையில் ஒரு புகார் மணி”
cheena (சீனா)
அன்பின் சைபர் சிம்மன்
அரிய தகவலுக்க்கு நன்றி
நம்மூருக்கு விரைவில் வந்துவிடுமா
நல்வாழ்த்துகள்