ஜேம்ஸ் கேமரூனின் அவதார் பாக்ஸாபிசில் மட்டும் அல்ல டிவிட்டரிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது.
கேமரூனின் 14 ஆண்டு கால உழைப்பால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவதார் எந்த விததிலும் ஏமாற்றாமல் ரூ 3000 கோடிக்கு மேல் வசூலித்துக்கொடுத்துள்ளது.அதிக வசூலுக்கான முந்தையை சாதனைகளை முறியடிக்க வாய்ப்பிருப்பதாக பேசப்படும் நிலையில் அவதார் டிவிட்டரிலும் சாதனை படைத்திருக்கிறது.
என்னைப்பொருத்தவரை அவதாரின் வசூல் சாதனையைவிட டிவிட்டர் சாதனையே கவனிக்கத்தக்கது.காரணம் டிவிட்டர் வெளி சொல்வதை காது கொடுத்து கேட்டால் உலகம் என்ன நினைக்கிறது என துல்லியமாக தெரிந்து கொண்டு விடலாம்.அந்த வகையில் பார்த்தால் அவதார் அசத்தியிருப்பதாக டிவிட்டர் வெளி ஏகமனதாக சொல்கிறது.அதிலும் உரத்த குரலில்.
ஆம் டிவிட்டரில் விவாதிக்கப்படும் தலைப்புகளில் அவதார் தான் முதலிடத்தைல் இருப்பதாக டிவிட்டரின் முகப்பு பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்லது.அது மட்டுமல்ல இந்த நொடியில்.இந்த நாளில் ,இந்த வாரத்தைல் என எல்லா பிரிவுகளிலுல் டிவிட்டரில் அதிக வரவேற்பை பெற்றுள்ள தலைப்பு அவதார் தான்.
அதாவது அவதார் வெளியான நாள் முதல் டிவிட்டர் வெளி அந்த திரைப்படம் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறது.அதிலும் எப்படித்தெரியுமா?வியப்பின் உச்சிக்கு சென்று அவதாரை ஆராதனை செய்து கொண்டிருக்கிறது.
ஒரு விதத்தில் அவதார் திரைப்படம் எப்படி இருக்கிறது எனபதை தெரிந்து கொள்ள திரையரங்குகளுக்கு செலவதைவிட டிவிட்டருக்கு சென்றாலே போதுமானது. அவதாரை பார்த்தவர்கள் அந்த உணர்வை அப்படியே டிவிட்டர் கருத்துக்களாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
டிவிட்டரில் அவற்றை படிக்கும் போது ஒட்டுமொத்தமாக ரசிகர்கள் அவதாரைப்பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை உணர முடிகிறது.பக்தி பரவசம் என்பார்களோ அது போன்றதொரு நிலைக்கு தான் படம் பார்த்தவர்களை அவதார் கொண்டு சென்றிருக்கிறது.அந்த அளவுக்கு மெய்மறந்த நிலையில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
மாதிரிக்கு சில பாருங்கள்;
அவதார் பார்த்து அசந்து போனேன்.150 நிமிடங்களுக்கு மீண்டும் குழந்தையாகிப்போனேன்.
இப்போது தான் அவதார் பார்த்தேன்.நீங்களும் அவசியம் பார்க்க வேண்டும்.
அவதார் பார்த்தேன்.அட..ஆ
அவதார் பார்த்தேன்.அருமை.
அவதார் அசத்துகிறது.
அவதார் பற்றி சொல்லப்பட்டதெல்லாம் அத்தனையும் உண்மை.
அவதார் அசத்தல் .நம்பமுடியாத சிறப்பு காட்சிகள்:
அவதார் பற்றி பிரமாதாமாக சொல்லப்பட்டதெல்லாம் ரொம்ப குறைவு.படம் அதற்கு பமேல் உள்ளது.
பெரும்பலான கருத்துக்கள் இதே போல் தாண் இருக்கின்றன.குறை சொல்பவையும் இல்லாமல் இல்லை. ஆனால் பெரும்பாலும் அசந்து போனவர்களின் பதிவுகளே.
ரசிகர்கள் மட்டுமல்ல விமர்சகர்கள் மற்றும் நிருபர்களின் கருத்துக்களும் இப்படி தான் உள்ளன.
ஆரம்ப ஆரவாரத்தோடு அடங்கிவிடாமல் தோடர்ந்து பலரும் படம் பார்த்து டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது தான் அவதாரை முதலிடத்தில் வைத்திருக்கிறது.
140 எழுத்துக்களில் பதிவிட உதவும் குறும் வலைப்பதிவு சேவையான டிவிட்டரில் புதிய திரைப்படங்கள் பற்றிய உடனடி எண்ணங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.அநேகமாக திரையரங்கை விட்டு வெளியே வந்ததும் ரசிகர்கள் டிவிட்டரில் பகிரும் இந்த கருத்துக்கள் ஒரு திரப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடியதாக இருப்பதாக் சொல்லப்படுகிறது.
படம் பற்றி ரசிகர்கள் டிவிட்டரில் சொல்லும் ஆரூடம் அதற்கான விளம்பர முயற்சிகளை மீறி படம் குறித்த தீர்ப்பாக அமைந்து விடுகிறது.காரணம் டிவிட்டரில் ரசிகர்கள் மனதில் உள்ளதை அப்படியே பகிர்ந்து கொள்கின்றனர்.ஒட்டுமொத்த உணர்வு எதுவோ அதனை டிவிட்டர் பிரதிபலித்து விடுகிறது.
இனி புதிய படங்களின் வெற்றி தோல்வியை டிவிட்டரே தீர்மானிக்கும் என்றும் சொல்கின்றனர்.அதோடு ஒரு படம் உணமையில் வெற்றி பெற்றதா என்பதையும் டிவிட்டர் சொல்லிவிடும்.காரணம் டிவிட்டர் பொய் சொல்லாது.
அந்த வகையில் அவதார் சூப்பர் டூபர் ஹிட் எனபது டிவிட்டர் தரும் தீர்ப்பு.

0 Comments on “டிவிட்டரில் அவதார் நம்பர் ஒன்”
IQBAL SELVAN
அவதார் (AVATAR) இன்று ஹாலிவுட்டின் மிக பிரமாண்டமான திரைப்படம்.
http://wp.me/pKkRf-k
I already watched Three times.. Still gonna watch come more time…………….