அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முதல் முறையாக டிவிட்டரை பயன்படுத்தியிருக்கறார். ஹைதி பூகம்ப நிவாரண பணிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர் டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஒபாமா டிவிட்டருக்கு புதியவர் அல்ல. அவரது பெயரில் டிவிட்டர் முகவரி கணக்கு இருக்கிறது.மேலும் அதிபர் தேர்தலின் போது ஒபாமா பிரசாரத்திற்காக டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற வலைப்பின்னல் சேவைகள் தீவிரமாக பயன்படுத்தப்பட்டன.வலைப்பின்னல் சேவை மூலம் ஒபாமா குழு நிதி திரட்டிய விதமும் வேகமும் பரவலாக பாரட்டப்பட்டன.
தேர்தல் பிரசாரத்தில் இண்டெர்நெட்டை பயன்படுத்துவதில் ஹாவர்டு டீன் போன்றவர்கள் முன்னோடியாக கருதப்படும் வேளையில் ஒபாமா வலைப்பின்னல் சார்ந்த பிரசாரத்தில் முன்னோடியாக புகழப்பட்டார்.
அதிபராக பதவியேற்ற பிறகும் ஒபாமா நிரவாகத்தில் பொதுமக்களின் கருத்தை அறிய இண்டெர்நெட் பயன்பாட்டை ஊக்குவித்தே வந்துள்ளார். மேலும் டிவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டவர்கள் பட்டியலில் அவரே முதல் இடத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு சீன விஜயத்தின் போது ஒபாமா டிவிட்டரை தான் பயன்படுத்தியதில்லை என்றும் டிவிட்டர் தனக்கு புரியவில்லை என்றும் ஒரு குண்டை தூக்கி வீசினார்.ஒபாமா டிவிட்டரில் பிரபலமாக இருப்பதாக கருதப்பட்டு வந்த நிலையில் இந்த கருத்து பெரும் அதிர்ச்சியை அளித்தது.
ஒபாமா டிவிட்டர் பயன்பாட்டில் முன்னுதாரனமாக திகழ்கிறார் என்று பாரட்டியவர்கள் எல்லாம் அவரது டிவிட்டர் அறியாமையை கேட்டு திகைத்துப்போயினர்.
பின்னர் தான் விஷயம் விளங்கியது.ஒபாமா பெயரில் டிவிட்டர் கணக்கு இருக்கிறதே தவிர உண்மையில் அவர் அதனை நேரடியாக பயன்படுத்த்வில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது அவரது பிரச்சார குழுவினர் அவர் சார்பில் டிவிட்டர் செய்து ஆதரவு திரட்டியுள்ளனர்.அதிபரான பின்னரும் இதே முறையை அவரது உதவியாளர்கள் பினப்ற்றி வந்துள்ளனர்.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது கூட அதிபர் சார்பில் நெகிழ்ந்து போனேன் என்று டிவிட்டர் செய்துள்ளனர்.
இதையெல்லாம் வைத்து தான் ஒபாமா டிவிட்டர் செய்கிறார் என்று கருதப்பட்டது.
இப்படியிருக்க ஒபாமா இப்போது முதல் முறையாக டிவிட்டர் செய்துள்ளார்.
ஹைதியில் ஏற்பட்ட பூகம்பம் பெரும் சேத்தையும் பேரவிவையும் உண்டாக்கியுள்ள நிலையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறது.தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிர் பலி என்பதை உணர்ந்து நிவாரணப் பணிகளை சங்கம் ஒருங்கிணைத்து வருகிறது.
உயிர் காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்க்காக ஒபாமா மனைவியோடு சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.அரும்பணி ஆற்றி வரும் உங்களை பாராட்டி ஊக்கப்படுத்தவே வந்துள்ளேன் என்று அறிவித்த ஒபாமா பின்னர் அங்கு சுற்றிப்பார்த்து வருகையில் ஒரு கம்ப்யூட்டரில் டிவிட்டர் பக்கத்தை கண்டார்.
அதிபர் மற்றும் அவர் மனைவி நிவாரணப்பணிகளை பார்வையிட்டு வருகின்றனர் என அவர் குறிப்ப்ட்டு டிவிட்டர் செய்தார்.அதன் பிறகு ஒபாமா முதன் முதலில் டிவிட்டர் செய்துள்ளார் என அவரே உறுதிப்படுத்தி அடுத்த செய்திய பதிவு செய்தார்.
நிற்க பூகம்ப நிவாரன முயற்சிகளில் டிவிட்டர் போன்ற தொழில்நுட்ப சேவைகள் பெரும் பங்காற்றி வருகின்றன.எஸ் எம் எஸ் மூலம் நிதி திரட்டுவதிலும் திவிராம் காட்டப்பட்டு வருகிறது.

2 Comments on “ஒபாமாவின் முதல் டிவீட்”
Pingback: ஒபாமாவிடம் பணியாற்ற வாய்ப்பு « Cybersimman's Blog