தமிழ்நேஷன் டாட் ஆர்ஜி இணையதளம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதை வாசகர் ஒருவர் சுட்டிக்காட்டி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
உண்மையில் இது வருத்தம் தரும் செய்தி. தமிழ்நேஷன் தளம் நல்லதொரு ஆவண காப்பகமாக விளங்கி வந்தது.தமிழ் இலக்கியம் உட்பட பல தகவல்களை அதன் மூலம் பெற முடிந்தது. வேறு பகுதிகளையும் கொண்டிருந்தது.
அதன் மூடலுக்கான காரணம் தெரியவில்லை.எப்படியும் நல்ல தமிழ் தளங்கள் மூடப்படுவது வருத்தம் தருவதே.
இந்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ள வாசகர் எழுதிய கடிதத்தை அப்படியே கிழே கொடுத்துள்ளேன்.அவர் வேண்டுகோளூக்கு ஏற்ப பெயர் குறிப்பிடப்படவில்லை.உணர்வை பகிர்ந்து கொண்ட வாசகருக்கு மனமார்ந்த நன்றி. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
”தங்களது தளத்திற்கு இன்றுதான் இரண்டாவது முறையாக வந்தேன். இணையத்தில் எல்லாவற்றையும் அலசும் தங்களுக்கு, http://www.tamilnation.org தளத்தை தெரிந்திடாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. இன்று முதல் இந்தத் தளம் விடை பெறுகிறது என்று காலையில் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. Digital Renaissance என்ற பகுதி தமிழ் தொழில்நுட்பத் தகவல்களுக்கு என்னை போன்றோருக்கு பேருதிவியாக இருந்தது. அதிலிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டுதான் தமிழில் சிறு நிரல்கள் எழுதிப் பழகி வருகிறேன். அண்மையில் எனக்கு எழுதும் எண்ணமே இல்லை, ஏனெனில் இன்னும் படிக்க வேண்டியது நிறைய உள்ளது.
இணைய இணைப்பு இல்லாததால் இதில் என்னை முழுமையாக இணைத்துக்கொள்ள மிகுந்த சிரமமாக இருக்கிறது. எனினும் இந்தத்(tamilnation) தளம் மூடப்பட்ட அதே நாளில், என்னால் ஆன சிறு பங்கை சமூகத்திற்கு அளிப்பது tamilnation, cybersimman போன்ற தன்னலமற்ற முயற்சிகளுக்கு செய்யும் மரியாதையாகக் கருதுகிறேன். தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான தொழில்நுட்ப தகவல்கள் குறித்து ஒரு group/blog உருவாக்கி விட்டு தங்களுக்கு தெரிவிக்கிறேன். அது ஒத்த கருத்துடையவர்களை சென்றடைய தாங்கள் உதவ வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சேமித்து வைத்ததோடு கிடப்பில் கிடக்கிறது. இனிமேல்தான் தங்கள் கட்டுரைகளையே படிக்க வேண்டும். படிப்பவர்களை எழுதத் தூண்டுவது எல்லோராலும் முடியாது. அதை தாங்கள் செய்திருக்கின்றீர். நன்றியும் வாழ்த்துக்களும்.
தற்போது தமிழ் எழுதியை உருவாக்கி வருகின்றேன். அதன் மூல நிரலை இலவசமாக பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
தங்களை அறிமுகப்படுத்திய பொறையார் நூலகத்திற்கும், ஆனந்த விகடனுக்கும் நன்றி.
tamilnation தளம் மூலம் அந்த நிரலை வெளியிடலாம் என நினைத்தால், இது என்ன சோதனை?
தளர்வுற மாட்டேன். என்னுடைய எழுத்து tamilnation தளத்திற்கும், அதன் பயனாளிகளுக்கும் சமர்ப்பனம்.”

0 Comments on “தமிழ்நேஷன் மூடலும் வாசகரின் கடிதமும்”
km
சரியான கவலை…
கடலோரத் தமிழன்
நன்றி திரு. சிம்மன்
தமிழ் மென்பொருள் உருவாக்குதல் குறித்து ஆர்வமுள்ளோர் tamilcpu – Google groups பார்வையிடுமாரு கேட்டுக் கொள்கிறேன்.
Pingback: Tweets that mention தமிழ்நேஷன் மூடலும் வாசகரின் கடிதமும் « Cybersimman's Blog -- Topsy.com
Elamurugan
உண்மையிலேயே வருத்தமளிக்கும் செய்திதான்
ந.ர.செ. ராஜ்குமார்
தமிழ்நேஷன் வாசகர்கள் http://tamilnation.co முகவரியிலிருந்து படிக்கலாம்.
cybersimman
thanks for information