ஐபோனால் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால் ,ஐபோனில் உள்ள ஆயிரக்கணக்கான செயலிகளில் ஒன்று அதற்கு உதவியிருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கிலாந்தை சேர்ந்த லேனா பிரைஸ் என்பவர் தான் ஐபோன் உதவியோடு தாயாகியிருக்கிறார்.அவரது குழந்தை உலகின் முதல் ஐபோன் குழந்தை என்று வர்ணிக்கப்படுகிறது.பிரைசுக்கு இதில் மகிழ்ச்சி தான்.
தவமாய் தவமிருந்து தாயகியிருப்பவர் அல்லவா?அதற்கு உதவிய ஐபோன் செயலி சார்ந்து தனது குழந்தை வர்ணிக்கப்படுவதில் ஆனந்தம் இல்லாமலா போய்விடும்.
ஐபோனுக்கும் கருத்தரிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று குழப்பி கொண்டிருப்பவர்கள் கவனிக்க, பிரைஸ் 4 ஆண்டுகளாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தார்.தாயாகும் ஆசை அளவில்லாமல் இருந்த போதும் அதற்கான பாக்கியம் மட்டும் வாய்க்கவில்லை.
மருத்துவ பரிசோதனைகளில் அவர் உடலில் எந்த கோளாறும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் கருத்தறிக்காதது ஏன் என்பது புரியாத புதிராகவே இருந்தது.
இந்த நிலையில் தான் அவரது துணைவர் டேட்லி ஐபோன் ஒன்றை வாங்கி பரிசளித்தார்.ஐபோன் செயலிகள் பற்றி அறிந்திருந்த லேனா பிரைஸ் அதில் கருத்தரிப்பு என டைம் செய்து தேடிய போது 5 செயலிகள் இருப்பது தெரிந்தது.
அதில் மாதவிடாய் சுழற்சி அடிப்படையிலான செயலியை தேர்வு செய்து கொண்டார்.அந்த செயலி மாதவிடாய் சுழற்சியின் அடிப்படையில் கரு முட்டை உற்பத்தி நாளை கணக்கிட்டு அதற்கு மூன்று நாட்கள் முன்னதாக உறவு கொள்ள ஆலோசனை கூறியது.அதன் அடிப்படையில் துணைவரோடு சேர்ந்த இரண்டாவது மாதத்திலேயே கருவுற்றார்.
தற்போது அழகான குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.இந்த குழந்தை ஐபோன் உபயம் என்று அவர் ஆனந்தததோடு சொல்கிறார்.
ஐபோன் சார்ந்த செயலிகளே இப்படி அசத்துகின்றன என்றால் புதிதாக அறிமுகமாகியுள்ள கூடுதல் திறன் கொண்ட ஐபேட் சார்ந்த செயலிகள் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள்

0 Comments on “ஐபோனால் பிறந்த குழந்தை”
km
போன் பாட் நிறைய வித்தியாசம் இல்லை. சொல்லப்போனால் அதில் வேலைசெய்யும் அநதை்து நிகழ்ச்ிகளும் இங்கும் வுலை செய்யும்.
karlmarx
super appu
Elamurugan
குழந்தை இல்லாதவர்களே…முதலில் ஐ-போன் வாங்கி மனைவிக்கு பரிசு அளியுங்கள்
அப்புறம் பாருங்கள்
Pingback: Tweets that mention ஐபோனால் பிறந்த குழந்தை « Cybersimman's Blog -- Topsy.com