சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தின் சி இ ஒ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமா என்பது கவுரவமான வார்த்தை.உண்மையில் அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
ஆனால் அவரோ தனது வெளியேற்றத்தை கவித்துவமாக அறிவித்து வியக்க வைத்திருக்கிறார்.
சன் மைக்ரோசிஸ்டம்ஸ் டாப் பத்து சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்று என கூறும் அளவுக்கு புகழும் செல்வாக்கும் பெற்றது.ஜாவா புரோகிராமிங்க் மொழி இந்நிறுவனத்தை சேர்ந்த ஜேம்ஸ் கோஸ்லிங் என்பவரால் உருவாக்கப்பட்டது.
இதெல்லாம் பழங்கதை.சன் ஏகப்பட்ட பிரச்சனைகளூக்கு ஆளாகி மற்றொரு சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிளால் வாங்கப்பட்டு விட்டது.
இதுவும் கூட பழைய கதை தான். இப்போதைய செய்தி என்னவென்றால் சன் மைக்ரோசிஸ்மஸ் தலமை அதிகாரியாக இருந்த ஜோனாத்தன் ஸ்வார்ட்ஸ் ராஜினாமா செய்திருக்கிறார் என்பதே.
இந்த முடிவை அவர் தனது டிவிட்டர் பதிவில் அறிவித்திருக்கிறார். அதிலும் எப்படி தெரியுமா? அழகான ஹைகூ வடிவில் கவித்துவமாக அதனது வெளியேற்றத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
ஆரக்கிள் சன் நிறுவனத்தை கையகப்படுத்தியது நடைமுறைக்கு வருவதை தொடர்ந்து ஸ்வார்ட்ஸ் தனது பதவியில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
சன் நிறுவனத்தில் இது எனது கடைசி நாள் என்று குறிப்பிட்ட பின் ஒரு ஹைகூ வடிவில் எனது ராஜினாமா முடிவை அறிவிக்கிறேன் என்று குறிபப்பிட்டுள்ளார்.
பொருளாதார சீர்குலைவு/அதிக வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு/இனியும் தலைமை அதிகாரி இல்லை.
இது தான் அவரது ராஜினாமா ஹைகூ. பதவி போனாலும் தொடர்ந்து வலைப்பதிவு செய்யப்போவதாக அவர் கூறியுள்ளார்.
ஸ்வார்ட்ஸ் முதலில் வலைப்பதிவு செய்யத்துவங்கிய தலைமை அதிகாரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
———–