பசுமரம்,நெடுமரம் போல இனி டிவிட்டர்மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது டிவிட்டர் செய்யும் மரம்.
ஏற்கனவே கட்டிடம் டிவிட்டர் செய்வதை அறிந்தவர்கள் மரம் எப்படி டிவிட்டர் செய்யும் என்று கேட்க மாட்டார்கள்.சென்சார்கள் மூலம் இது சாத்தியம் என்பதை புரிந்து கொள்வார்கள்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் தற்போது உலக செல்போன் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் தான் எரிக்ஸன் நிறுவனம் ஒரு மரத்தை டிவிட்டர் செய்ய வைத்திருக்கிறது.
இந்த மரமானது பார்வையாளர்கள் தன்னை நெருங்கினாலோ அல்லது யாரவது தொட்டாலோ உடனே தனது உணர்வை டிவிட்டர் செய்தியாக்கி விடுகிறது.
சக்தி வாய்ந்த சென்ஸார்கள் இந்த மரத்தோடு பொருத்தப்பட்டுள்ளன. அவை பிராட்பேன்ட் இண்டெர்நெட் இணைப்புடன் இணைக்கபப்டுள்ளன்.மரத்தை சுற்றி நிகழும் அசைவுகளின் போது மின்காந்த அலைகளில் ஏற்படும் மாற்றத்தை கொண்டு சென்ஸார்கள் அதனை உணரும்.
அதன் பிறகு இண்டெர்நெட் இணைப்பு மூலம் டிவிட்டரில் தகவல் தெரிவிக்கும்.ஒவ்வொரு வகையான அசைவுக்கு ஏற்ப விதவிதமான டிவிட்டர் செய்தியை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாராவது நெருங்கி வந்தால் மரம் தனது மகிழ்ச்சியை தெரிவிக்கும் . யாரும் வரவில்லை என்றால் மரம் தனிமையில் இருப்பதாக சொல்லும்.நிறைய பேர் அருகில் வந்தால் மிகவும் பிசியாக இருப்பதாக மகிழ்ச்சி அடையும்.
மரத்திற்கென அமைக்கப்பட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில் இந்த செய்திகளை தொடர்ந்து படிக்கலாம் .பதில் டிவிட்டர் அனுப்பலாம்.
ஒரு மணி நேரத்தில் 100 பேர் தொட்டுவிட்டனர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றெல்லாம் மரம் டிவிட்டர் செய்துள்ளது.
சுவாரஸ்யமான விஷயம தான். ஆனால் என்ன பயன் என்று கேட்கலாம்.
சென்ஸார் மற்றும் டிவிட்டர் போன்றவை இணையும் போது தகவல் தொடர்பில் புதிய விஷயங்கள் சாத்தியமாகலாம் என்பதை உணர்த்தவே இது போன்ற சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உதாரணத்திற்கு பக்க வாதததால் பாதிக்கப்பட்ட நோயளிகள் இப்படி சென்ஸார் முலம் தொடர்பு கொள்ள வைக்கலாம் என்கின்றனர்.பாதுகாப்பு நோக்கிலும் இவை பயன்படும் என்கின்றனர்.
டிவிட்டர் செய்யும் மரத்தை பார்க்க விரும்பினால்…
அப்படியே செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் பரம் பற்றீய முந்தைய பதிவையும் காணவும்.கட்டிடம் டிவிட்டர் செய்வது தொடர்பான பதிவையும் காணவும்
—————
http://twitter.com/connectedtree
————
http://cybersimman.wordpress.com/2009/08/28/twitter-28/
——————-

0 Comments on “ஒரு மரம் டிவிட்டர் செய்கிறது”
madurai saravanan
nalla karuththu. thakaval tholil nutpaththin munerram . vaalththukkal ariya thakavalkalai alibbatharkku.
Dinesh
உங்க தளத்தில் ட்விட்டர் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆன மாதிரி தெரியுது. கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் தலைவரே…
Ivan
அன்பு நண்பரே,
மரம், கட்டிடம் வரிசையில் இதோ நம் செல்ல பிராணிகளும் டிவிட்டரில் கால் பதித்து விட்டது.
http://ipadiku.blogspot.com/2010/02/blog-post_16.html
இப்படிக்கு,
இவண்.