எங்கள் வீட்டுக்கு திருட வாருங்கள் என்று யாராவது அழைப்பு விடுத்தால் எப்படி இருக்கும்? இத்தகைய வியப்பு கலந்த திகைப்பை தான் புதிதாக அறிமுகமாகியுள்ள இணையதளம் ஏற்படுத்தியுள்ளது.
இணைய உலகில் பெரும் பரபரப்பையும் கூடவே விவாதத்தையும் உண்டாக்கியிருக்கிறது அந்த தளம். பிளீஸ்ராப்மீ என்பது தான் அந்த தளத்தின் பெயர்.அதாவது என்னை கொள்ளையடி என்று பொருள்.இன்னும் சரியாக சொல்வதனால் எங்கள் வீட்டிற்கு திருட வாருங்கள் என்று அழைப்பு விடுப்பது போல் தான்.
இதென்ன வம்பாக இருக்கிறதே என நினைக்க தோன்றுகிறதா? உண்மையில் இந்த தளம் அதை தான் செய்கிறது. யாரெல்லாம் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு செல்கின்றனர் என்னும் விவரத்தை பட்டியலிடுவது தான் இந்த தளத்தின் நோக்கம்.
இந்த விவரத்தை திரட்டுவது ஒன்றும் கடினமான விஷயம் அல்ல.டிவிட்டர்,ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பலரும் இந்த விவரங்களை அவர்களாகவே விரும்பி பகிர்ந்து கொள்கின்றனர்.அவற்றை எல்லாம் ஒரே இடத்தில் திரட்டித்தருகிறது இந்த தளம்.
இந்த விவரங்கள் திருடர்களுக்கு சாதகமானதாகி விடுமே என்று கேட்கலாம்.இந்த தளத்தைப்பார்த்து விட்டு திருடர்கள் தங்களின் இலக்கை தேர்வு செய்து கைவரிசை காட்டுவது சுலபமாயிற்றே என்னும் சந்தேகமும் நியாயமானது தான்.
இந்த தளம் செய்ய விரும்புவதும் இதை தான்.திருட வாருங்கள் என்று அழைப்பு விடுப்பதல்ல;ஆனால் திருட வாருங்கள் என்று அழைப்பு விடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்த்துவது தான் இதன் உண்மையான நோக்கம். அதிர்ச்சி வைத்தியம் என்று சொல்வார்கள் இல்லையா?அதே போல இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் விவரங்கள் எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதை திருடர்களுக்கான அழைப்பு மூலம் இந்த தளம் சுட்டிக்காட்டுகிறது.
டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் சேவைகளில் பலரும் தங்களைப்பற்றிய அந்தரங்க விவரங்களை எந்தவித தயக்கமும் இன்றி பகிர்ந்து கொள்கின்றனர்.பார்த்தது,படித்தது, கேட்டது எல்லாவற்றையும் வெளியிடுபவர்கள் ஊருக்கு போகும் போது மறக்காமல் டிவிட்டரிலும் சொல்லிவிட்டு சொல்கின்றனர்.அதே போல விடுமுரைக்கு செல்லும் போதும் டிவிட்டரில் தெர்விக்கின்றனர். ஃபேஸ்புக் உறுப்பினர்கள் பத்தியிலும் இந்த பழக்கம் இருக்கிறது.
இணைய நண்பர்கள் தமது பயண திட்டத்தை அறிந்திருப்பது நல்லது மற்றும் அவசியம் என்னும் எண்னத்தில் பலரும் இதனை செய்கின்ரனர். சிலருக்கு தங்கள் செயல்களை இணையத்தில் பறைசாற்ரிக்கொள்ளாவிட்டால் தலையே வெடித்து விடும்.
என்வே அதையும் பகிர்ந்து கொள்ள அவர்கள் தன்முனைப்பு உந்தி தள்ளுகிறது. இந்த பகிர்வு கலாச்சாரம் இண்டெர்நெட் கால இயல்பு என்றாலும் கூட இதில் உள்ள ஆபத்தை பெரும்பாலானோர் உணர்வதில்லை.
இணிடெர்நெட்டில் ஒரு தகவலை பகிரும் போது உங்கள் நண்பர்கள் பட்டும் அதனை பார்ப்பதில்லை.வேன்டாதவ்ர்களும்,விஷமிகளும் அவற்றை பார்க்கும் வாய்ப்பு இருக்கின்றது.
உதாரணத்திற்கு ஒருவர்,தான் வெளியூருக்கு செல்வதை தெரிவிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது அவர் தனது நண்பர்களுக்கு மட்டும் தகவல் சொல்லவில்லை. தனது வீடு பூட்டப்பட்டிருக்கும் என்பதையும் திருடும் எண்ணம் கொண்டவர்களுக்கு தெரிவிக்கின்றனர்.
எனவே டிவிட்டர் பதிவை பார்த்து விட்டு ஒருவரது வீடு பூட்டப்பட்டிருக்கும் என்பதை தெரிந்து கொண்டு கயவர்கள் கண்ணம் வைக்ககூடும்.ஏற்கனவே ஒரு சில சம்பவங்கல் இப்படி நடந்துள்ளன.எதிர்காலத்தில் திருடர் மற்றும் கொள்ளையர்கள் டிவிட்டர் போன்ற சேவைகளில் உலா வருவதன் முலமே தங்களுக்கான சுலப இலக்கை தேர்வு செய்து விட முடியும் என அஞ்சப்படுகிறது.
வலைப்பின்னல் தளங்களை பயன்படுத்தும் போது எதை வெளியிடுவது அதை வெளியிடாமல் இருப்பது என எச்சரிகையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டும் அல்லாமல் இப்போது போர்ஸ்கொயர் போன்ற இருப்பிடன் உணர் சேவை மூலம் ஒருவரின் இருப்பிடம் சார்ந்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்படுகிறது.
இவையெல்லாம் திருட வரலால் என அழைப்பு அன்றி வேரென்ன?என்று சொல்லாமல் சொல்வதற்காக நெதர்லாந்தை சேர்ந்த இளைஞரகள் பிளீஸ் ராப்மீ தளத்தை அமைத்துள்ளனர். இண்டெர்நெட்டில் வெளியிடப்படும் விவரங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி பலவிதங்களில் நிபுணர்கள் எச்சரித்த போதும் பெரும்பாலானோர் அதன் தீவிரத்தை உணர்ந்ததாக தெரியவில்லை.
ஆனால் இந்த தளத்தில் யாரெல்லாம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்கள் என்னும் விவரம் திருட வாருங்கல் என்னும் அழைப்போடு வெளியாவதை பார்க்கும் போது பகீர் என்று இருக்கும் அல்லவா?அந்த நொடியில் டிவிட்டர் பகிர்வுகள் எத்தகைய அபாயம் மிக்கவை என்பது உரைக்கும் அல்லவா? அதனை தான் செய்வதாக இந்த தளத்தின் நிறுவனர்கள் சொல்கின்ரனர்.
முதல் பார்வைக்கு இந்த தளம் திருடர்களுக்கு ஆதரவானது போன்ரது என்றாலும் உண்மையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இதன் குறிக்கோள். இந்த தளம் இண்டெர்நெட் உலகில் பரவலான கவனிப்பை பெற்றுள்ளது.பலர் இந்த தளத்தை பொருப்பற்ற செயல் என்று விமர்சித்துள்ளனர். ஆனால் இந்த தளத்தில் குறிப்பிடப்பிடப்பட்டிருப்பது போல் நீங்கள் வெளியூர் செல்வதை அறிவிக்கும் போது நீங்கள் வீட்டில் இல்லாததை உலகிற்கு அறிவித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை இந்த தளம் மிக அழகாக உணர்த்துகிறது.
நம் காலத்து பிரச்சனைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அழாகான தளம் இது என்றே தோன்றுகிறது. அத்ற்கேற்பவே இதன் உரிமையாளர்கள் இந்ததளத்தை இணடெர்நெட் அந்தரங்க பிரச்ச்னைகள் சார்ந்த விழிப்புணர்வு பணிக்கு வழங்க தயராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
———-

0 Comments on “திருடர்களுக்கு வழிகாட்டும் இணையதளம்”
karlmarx
nadu uruputrum
cybersimman
please see the post on your search engine
பிரகாஷ்
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் தான் அறுக்க வேண்டும்.பலபேருக்கு இணைய ஆபத்துக்களை பற்றி என்ன தான் தொண்டை கிழிய கத்தினாலும் காதில் போட்டு கொள்வதில்லை. செவிடன் காதில் ஊதின சங்கு போல தான் பல விடயங்கள் நடக்கின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மாதிரி தளங்கள் தான் சரியான வழி
Balaraman
இது நல்ல செய்தி!! நானும் பலருக்கு பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன்! இது அதிரடியான முயற்சி!! 🙂
shirdi.saidasan
how to find the total number of posts in this blog?
cybersimman
it is 511 sir
balaraman
இது கொஞ்சம் இதற்கு தொடர்பானது, பாருங்கள்!
cybersimman
பார்த்தேன் ,படித்தேன்,ரசித்தேன் நண்பரே.